மேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடராகும். இம்மலைத் தொடரானது மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்குகின்றது.

பின்பு அங்கிருந்து மராட்டிய மாநிலம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த மலைத்தொடர்  கன்னியாகுமரியில் வந்து முடிகின்றது.

இதன் நீளம் சுமார் 1600 கி.மீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீ. இம்மலைத் தொடர்களின் மொத்த பரப்பளவு சுமார் 1,60,000 சதுர கி.மீ. ஆகும்.

இம்மலைத்தொடரின் மிக  உயரமான சிகரம் ஆனைமுடி (2,695 மீ) இது கேரளாவில் உள்ளது. இதுவே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமும். இந்தியாவின் மிக உயரிய சிகரம் எவரெசுட்டு சிகரம் ஆகும்.

ஆனைமுடி

ஆனைமுடி

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அடங்கும். இங்கு சுமார், 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து, இதன் மேற்கே உள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் கொடுக்கின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்கே உள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழையை பெறுகிறது.

இந்த மலைத் தொடரை உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள மலைகள்

நீலகிரி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

இதன் சிறப்பு பெயர் மலைகளின் ராணி. உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் ஆகியவை இதிலுள்ள முக்கிய கோடை சுற்றுலா பகுதிகள் ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும்.

உயரம்:

கடல் மட்டத்திலிருந்து நீலகிரி மலையின் உயரம் சுமார் 1800-2400 மீட்டர். இதன் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா 2673 மீ.
( இதுவே தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரமாகும்.)

மாவட்டம்:

இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும் .

குறிப்பு :

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது. இதுவே இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும்.

ஏலக்காய் மலை

ஏலக்காய் மலை

ஏலக்காய் மலை

இங்கு ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர். ஏலக்காய் தவிர காப்பி மற்றும் மிளகும் இங்கு அதிகம் பயிராகின்றன. இதன் பரப்பு 2,800 சதுர கிமீ ஆகும்.

மேற்கு நோக்கி பாயும் பம்பை ஆறு, பெரியாறு ஆகியவை இம்மலைப்பகுதி வழியாக பாய்கின்றது. இடுக்கி  மற்றும் முல்லைப் பெரியாறு அணைகள் இம்மலைத்தொகுதியில் உள்ளது.

குளிர் காலத்தில் இம் மலைப்பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும்.

மாவட்டம்:

ஏலக்காய் மலையின் சில பகுதிகல் தமிழகத்தில் தேனி மாவட்டட்தில் உள்ளது. இதன் வடகிழக்கில் பழனி மலையும், வடமேற்கில் ஆனை மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ள்து.

ஆனை மலை

ஆனை மலை

ஆனை மலை

பாலக்காட்டு கணவாயின் தென் புறத்தில் ஆனை மலை அமைந்துள்ளது. இதன் மிக உயரமான சிகரம் ஆனை முடி(2695மீ) ஆகும். இமய மலைத்தொடர் அல்லாமல் இந்தியாவின் உயரமான சிகரம் இதுவே ஆகும். இதுவும் நீலகிரி மலைத்தொடரும் இணையும் பகுதியில் தான் மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இணைகின்றன.

ஆழியாறு, சின்னாறு, பாம்பாறு, பரம்பிக்குளம் ஆறு ஆகியவையும், மேலும் ஆழியாறு அணை, சோலையாறு அணை, அமராவதி அணை, நீராறு அணை, பரம்பிக்குளம் அணை ஆகியவையும இங்கு உள்ளது.

இதன் தென் மேற்கே கேரளமும் கிழக்கில் பழனி மலைகளும் தென் கிழக்கில் ஏலக்காய் மலைகளும் எல்லைகளாக உள்ளன. இதன் உயரமான பகுதிகளில் தேக்கு மரமும், உயரம் குறைந்த கீழ் பகுதிகளில் காப்பி மற்றும் தேயிலை பயிர்கள் அதிகமும் கானப்படுகின்றது.

ஹியூகோ வுட்

ஹியூகோ வுட் கல்லரை

ஹியூகோ வுட் (Hugo Woods) : ஆனை மலை பற்றி படிப்பவர்கள் கட்டாயம் இவரையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்….ஹியூகோ வுட் (Hugo Woods)

மாவட்டம்:

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் இடையே உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதி கோவை மாவட்டட்தில் உள்ளது.

உயரம்:

இதன் உயரமான சிகரம் (2,695 மீ) ஆனைமுடி, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.

பொதியம் மலை | அகத்தியா் மலை

பொதிகை மலை என்பது. ஆனைமலைத்தொடரில் அமைந்துள்ளது ஒரு மலையாகும். இதற்கு அகத்தியா் மலை என வேரு பொயரும் உண்டு. தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி இந்த மலையிலிருந்து  தான் உருவாகிறது.

அகத்திய மலை

அகத்திய மலை

அன்னப்பறவைகள், சந்தன மரங்கள், காந்தள் மலர் ஆகியவற்றுக்கு இந்த பொதிகை மலைக்கு சிறப்பு,

இமயமலையில் நடைபெற்ற சிவபெருமான் திருமணத்தை இந்த பொதிய மலை உச்சியில் இருந்து அகத்தியர் கண்டு ரசித்தார் என பல புராண கதைகள் உண்டு, இனவே தான் , தமிழக அரசு தொலைகாட்சியான ” பொதிகை” க்கு, இதனால் தான் என்னவோ இப்பெயர் வைக்கப்பட்டது இன நினைக்குறேன்.

அகத்தியர், பொதியமலையில் இருந்து கொண்டு  தமிழ் வளர்த்ததாகக் கதைகள் உண்டு. பொதிய மலை உச்சியில் அகத்தியர்கு கோயில் உள்ளது.

அகத்தியர் கோயில்-அகத்திய மலை

அகத்தியர் கோயில்-அகத்திய மலை

பொதியை ஆண்ட அரசர்கள்

ஆய், திதியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தென்னவன் என்னும் பாண்டியன் என்ற அரசர்கள் ஆண்டதாக நமது தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றது.

மாவட்டம்:

பொதிகை மலையின் ஒருபகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும், பிற பகுதிகல் திருவனந்தபுரம் (கேரள) மாவட்டத்திலும், அமைந்துள்ளது.

உயரம்:

இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள்.

பழனி மலை

பழனிமலை ஒரு தாழ்ந்த குன்றாகும் இதனுடைய பரப்பளவு 2,068 சதுர கிமீ ஆகும். பழனி மலைக்கு தெற்கில் ஏலக்காய் மலைகளும், மேற்கு பகுதியில் ஆனை மலையும் உள்ளது. கிழக்கு பகுதியில் தமிழ் நாட்டு சமவெளியும், தென் பகுதியில் வைகை ஆறு பாயும் கம்பம் பள்ளத்தாக்கும் வட பகுதியில் கொங்கு நாடும் உள்ளன.

பழனி மலைகள்

கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் பழனி மலைகள்

மாவட்டம் :

பெரும்பாலான பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலேயே உள்ளன. இதன் மேற்கு பகுதி தேனி மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது

உயரம் :

இதன் உயரமான பகுதிகள் தென் மேற்கே உள்ளன அங்கு இதன் உயரம் 1,800-2,500 மீட்டர் கிழக்குப்பகுதியில் மலையின் உயரம் 1,000-1,500 மீட்டர்களாகும்.

குறிப்பு :

புகழ் பெற்ற மலை நகரமான கொடைக்கானல் இதன் தென் நடுப்பகுதியில் உள்ளது.

கொடைக்கானல் மலை

கொடைக்கானல் மலை

கொடைக்கானல் மலை

கொடைக்கானல் மலை பழனி மலையின் தொடர்ச்சியாகும். இந்த மலை வாழிடம் மொத்தம் 22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது.

குறிஞ்சிப்பூ

குறிஞ்சிப்பூ

இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அறியவகை குறிஞ்சிப்பூ பூக்கின்றது.

மாவட்டம்:

கொடைக்கானல் மலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.

உயரம்:

கடல் மட்டத்திலிருந்து இதன் உயர்ம் 2133 மீட்டர்கள்.

குற்றாலம் மலை

குற்றாலத்திற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான் தாயகம், மழைகாலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இந்த குற்றால மலைக்கு வருகின்றனர். இவ்விடத்தையும் இதன் மலைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புகழ் பெற்ற தமிழ் சிற்றிலக்கியம் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும்.

குற்றால மலை

குற்றால மலை

இதன் சிறப்பு:

குற்றாலத்தில் மொத்தம் 9 அருவிகள் அமைந்துள்ளன.

ஐந்தருவி-குற்றாலம்

ஐந்தருவி-குற்றாலம்

1.பேரருவி,

2.ஐந்தருவி,

3.சிற்றருவி,

4.பாலருவி,

5.புலியருவி,

6.பழத்தோட்டஅருவி,

7.சென்பகாதேவியருவி,

8.பழையகுற்றால அருவி,

9.தேனருவி.

பேரருவி- குற்றாலம்

பேரருவி- குற்றாலம்

மாவட்டம்:

இது திருநெல்வேலி மாவட்டட்தில் உள்ளது.

குற்றால மலைக்கு வர:

குற்றாலம் தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும். அமைந்துள்ளது.

குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும்.

செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள், குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.

நன்றி.

இதையும் பார்க்க:

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

தமிழக மலைகள்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password
   lida viagra fiyat cialis sipariş escort bayan