100+ தமிழ் விடுகதைகள் (விடையுடன்)

100+ தமிழ் விடுகதைகள் (விடையுடன்)

படிகக்க படிகக்க ஆர்வத்தை தூண்டும் சுவாரசியமான தமிழ் விடுகதைகள் விடையுடன்.

Tamil Vidukathaigal with Answer

List of 100+Tamil Vidukathaigal with Answer

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

தேள்

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

தலைமுடி

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

கரும்பு

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

பட்டாசு

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

மூச்சு

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

பூரி

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ?

வெண்டைக்காய்

ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

பம்பரம்

காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

முள்

பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?

பாம்பு

ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

சூரியன்

சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?

கொசு

மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

ஒட்டகம்

கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?

சட்டை

தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

அன்னாசிப்பழம்

பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

அமைதி

சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?

மின்விசிறி

அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

குளிர்

ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?

குடை

வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

நெருப்பு

நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

அன்னம்

ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

துடைப்பம்

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை- அவன் யார்?

மரம்

அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

தலை வகிடு

தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

க‌ண் இமை

ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அது என்ன?

எறும்புகள்

வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?

மழை

உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

தீ‌க்கு‌ச்‌சி

கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?

உளுந்து

கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

கா‌லி‌ங்பெ‌ல்

அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?

மிருதங்கம்

எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?

நிலா

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?

காற்று

காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?

சேவல்

ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

கடிதம்

இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

கடிகாரம்

விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?

தும்பிக்கை

நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

பென்சில்

என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?

இரகசியம்

மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?

சிலந்தி

கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன?

முதுகு

ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

தேங்காய்

ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

செருப்பு

குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன?

நாக்கு

பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?

வானொலி பெட்டி

உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது?

சீப்பு

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விக்கல்

கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

நிழல்

கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?

தையல்காரர்

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?

செருப்பு

வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?

நாட்காட்டி

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

உப்பு

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

தராசு

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?

அலாரம்

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

பாய்

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

தேங்காய்

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

கொசு

உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

பெயர்

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

நிழல்

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?

பற்கள்

கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும்.

செருப்பு

சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர்

தீக்குச்சி

நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

கடிகாரம்

உயிரில்லை ; ஊருக்குப் போவான். காலில்லை; வீட்டுக்கு வருவேன் வாயில்லை ; வார்த்தைகள் சொல்வான்.

கடிதம்

என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்; என்னை விரும்பாத விடே இல்லை.

உப்பு

உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான்,

நாய்

பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன?

குழி

உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான்

சந்தனம்

விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம்

கடிகாரம்

மூவராய் சேர்வார்கள் வண்ணம் தீட்டுவார்கள்

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு

எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் - அவன் யார்?

விமானம்

ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன?

மரம்

You May Like

 

தமிழ் விடுகதைகள்

இந்த தமிழ் விடுகதைகள் உங்களுக்குப் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிறவும்.

இங்கு குறிப்பிட மறந்த, உங்களுக்கு பிடித்த விடுகதைகள் இருப்பின் கருததுப்பெட்டியில் தெரிவிக்கவும்.

நன்றி …

 

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart