thamizh dna

தமிழர் சமையல் மற்றும் உணவு பழக்கம்

142 0

தமிழர் சமையல்

தமிழர் சமையல் மறை

பல 100 ஆண்டுகளாக நம் சமையல் கலையானது, தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, இன்று உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாக உள்ளது. இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சுற்று சூழலிலேயே தமிழர் சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை சொல்லி கொடுக்கின்றது.

பல்வகை காய்கறிகள், கடலுணவுகள், சுவைமிகுந்த நறுமணம் தரும் பலசரக்குகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடத்தை பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முக்கிய உணவாகும். கறிகளில் பலவகைகள் உண்டு. உ.ம்: மரக்கறிக் குழம்பு, மசியல், பருப்பு, கீரை, வறை,  மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகளில் காரம் சற்று மிகுதி. தேங்காய், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற வகை உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது இங்கு வழக்கம்.

[content-egg module=Amazon template=custom/compact next=1]

[content-egg module=Amazon template=custom/compact next=1]

[content-egg module=Amazon template=custom/compact next=1]

Best Cook Books in Tamil

பண்டைய தமிழரின் உணவு

தமிழர் சமையல் பொருள்கள்

தமிழ் இலக்கிய ஆதாரங்களின் துனைகொண்டு அ. தட்சிணாமூர்த்தி என்பவர் தனது தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் வழியாக “பண்டைய தமிழரின் உணவு” பற்றி அதிக குறிப்புகள் தந்துள்ளார். தமிழர் வாழ்ந்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழரிடையே உணவுகள் சற்று வேறுபடுகின்றன. எனினும், பெற்ம்பாலும் தமிழர்கள் சோறும், காய்க்கறியும், புலால் உணுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகின்றது. நெற்சோறு, வரகுச்சோறு,   உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, நண்டுக் கறி, வெண்ணற்சோறு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், மாங்கனிச் சாறு, ஊறுகாய், மாதுளங்காய்-மிளகுப்பொடி-கறிவேப்பிலை பொரியல் என தமிழ்நாட்டில் வாழ்ந்த பலதரப்பட்டோர் உண்ட உணவுகளை தமிழ் இலக்கிய சான்றுகளோடு அ. தட்சிணாமூர்த்தி தனது குறிப்பில் விபரிக்கின்றார்.

[content-egg module=Amazon template=custom/compact next=1]

“கடுகுடன் காய்கறிகளை தாளிப்பது”, “பசுவின் வெண்ணையில் பொரிப்பது”, “முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது”, கூழைத் “தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது”, “மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது” போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளையும் அ. தட்சிணாமூர்த்தி தெளிவாக சுட்டியுள்ளார்.

மேலும், தென்னைக் கள்ளு மற்றும் பனங்கள்ளு  ஆகியவற்றை பழந்தமிழர்கள் விரும்பி உண்டனர் என்பதர்க்கு பல குறிப்புகள் உள்ளது.

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

[content-egg module=Amazon template=custom/compact next=1]

 1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
 2. உண்ணல் – பசிதீர நன்கு உட்கொள்ளல்.
 3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
 4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
 5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
 6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
 7. நக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
 8. நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
 9. பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
 10. மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
 11. மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
 12. விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

வாழையிலையில் உணவு

வாழையிலையில்

விருந்துகளில் மற்றும் அன்னதானங்களில் வாழையிலையில் உணவு உண்பது தமிழர்களின் வழக்கம். சிற்றுண்டிகளை பரிமாறும் போதும் கூட  வாழையிலையில் பரிமாறுவதே நம் வழக்கம். உணவகங்களில் பாத்திரங்களின் தூய்மையை பற்றி அய்யமுறுவோர், வாழையிலையில் உண்ண விரும்புவதும் உண்டு. மேலும் வாழையிலையில் கைகளால் உணவுகளை உண்ணுவது உணவுக்கு சுவைகூட்டும் என்பதும் பலரது எண்ணமாக உள்ளது.

[content-egg module=Amazon template=custom/compact next=1]

ஆனால், இன்றைக்கு நாகரிகம் அது இது என கூறிக்கொண்டு வாழையிலையில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டார்கள், மேலும் இன்றைய உணவகங்களிளும் நெகிழி தாள்களையே  (பிலாஸ்டிக்) பன்படுத்துகின்றனர், மேலும் திருமணம், மற்ற விழாக்களிலும்  பிலாஸ்டிக் வாழை இலைகளியே ஆதிகம் பயன்படுதுகின்றோம்.

வாழையிலையில் உணவு உண்ணுவதால் நன்மைகள்:

வாழை இலை ஒரு மிக சிறந்த நச்சு முறிப்பன் ( கிருமி நாசினி ) எனவே தான் கிராமங்களில் இன்றும் பாப்பு கடிக்கு முதலில் வாழை இலை சாரை குடிக்க கொடுப்பார்கள்.

வாழை இலையிலேயே தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் முகம் பொலிவு பெறும், மந்தம் நீங்கி உடல் வலிமை பெரும்.

இந்த வாழை இலையின் மேல் உணவு வைத்து உண்ணும் போது நல்ல பசியை தூண்டுவதுடன் உணவு எளிதில் சீரணம் அடைந்து விடுவதுடன், மேலும் இது வயிற்று புண்களையும்  ஆற்றும் தண்மை கொண்டது.

எனவே நாம் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ கட்டாயம் வாழை இலையிலேயே முடிந்த வரை உணவு உண்ணுவோம்.

வாழை இலையில் பலகாரம் வைக்கும் முறை

இலையில் ஒவ்வொருவரும் ஒரு பலகாரத்தை பரிமாறிக் கொண்டு வருவார்கள். இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.

வாழை இலை உணவு

 1. உப்பு
 2. ஊறுகாய்
 3. சட்னிப் பொடி
 4. கோசும்பரி
 5. தேங்காய் சட்னி
 6. பீன்.. பல்யா
 7. பலாப்பழ உண்டி
 8. சித்ரண்ணம்
 9. அப்பளம் (பப்படம்)
 10. கொரிப்பு
 11. இட்லி
 12. சாதம்
 13. பருப்பு
 14. தயிர் வெங்காயம்
 15. இரசம்
 16. பச்சடி
 17. கதிரிக்காய் பக்கோடா
 18. கூட்டு
 19. பொரியல்
 20. அவியல்
 21. கத்ரிக்காய் சாம்பார்
 22. இனிப்பு
 23. வடை
 24. இனிப்பு தேங்காய் சட்னி
 25. கிச்சிடி
 26. காரப்பொரியல்
 27. பாயசம்
 28. தயிர்
 29. மோர்

மூன்று வேளை உணவு

[content-egg module=Amazon template=custom/compact next=1]

பொதுவாக, தமிழர்கள் காலை வேளைகளில் நீர் அல்லது பழரசங்கள் அருந்தும் வழக்கம் உடையவர்கள். காலை உணவாக நாம் இட்லி, தோசை, இடியப்பம் போன்றவற்றை சாம்பார், சட்னி போன்றவற்றுடன் சேர்ட்து உண்போம். சில  குடும்பங்களில் காலையில் சோறுண்பவர்களும் உண்டு.

காலையில் பழைய சோறு ( கஞ்சி ) உண்ணும் வழக்கம் நம் தமிழர்களிடம் உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்ல உணவாகும்,  தமிழக உணவகங்களில் காலையில் வெண் பொங்கல், வடை, தோசை, இட்லி, பூரி போன்றவை கிடைக்கின்றது.

நன்பகல் உணவான சோறும் கறியுமே தமிழரின் முதன்மையான நன்பகல் உணவாக விளங்குகிறது. பலவித பக்க உணவுகளும் மதிய வேளைகளில் நாம் சேர்த்துக்கொள்கிறொம்.

இங்கு இரசம், தயிர், மோர் போன்ற நீர்ம உணவுகளும் மதிய உணவில் சேர்த்து உண்ணப்படுகின்றது. பிற்பகலிலும் மாலையிலும் சிற்றுண்டிகளும் பழங்களும் உண்ணும் வழக்கமும் நம்மில்  பலருக்கு உண்டு.

இரவு உணவாக வீடுகளில் சோறு, தோசை, சப்பாத்தி, இடியப்பம்,பிட்டு,  பூரி,  போன்றவை உண்ணப்படுகின்றன.

[content-egg module=Amazon template=custom/compact next=1]

[content-egg module=Amazon template=custom/compact next=1]

[content-egg module=Amazon template=custom/compact next=1]

Best LED

Best Cook Books in Tamil

Related Post

- 8

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

Posted by - ஆகஸ்ட் 28, 2015 0
இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு? தலையாயக் கடமை.. இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங்கில் ஈடுபட்டுள்ள வங்கியின் தலையாயக் கடமை மற்றவர்களுக்காக நிதி திரட்டுவது தான். இந்த வங்கிகள் நிறுவனங்களுக்குப்…

விரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்ட்

Posted by - ஏப்ரல் 24, 2020 0
  விரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்ட் ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியைப் பார்த்த பின் கூகுள் நிறுவனம் டெபிட் கார்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதை வைத்து…

உங்கள் கருத்தை இடுக...