Solarwinds attack… அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல், பின்னணியில் ரஷ்யாவா?

இந்த மால்வேரானது மார்ச் மாதத்திற்கு முன்பே பரப்பப்பட்டுவிட்டது என்றும், இதன் மூலம் சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்கள் 18,000-க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஒன்றைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. ‘சோலார்விண்ட்ஸ்’ (Solarwinds hacks) என அழைக்கப்படும் இந்த சைபர் தாக்குதல் முதன் முதலில் கண்டறியப்பட்டது இரண்டு மாதத்திற்கு முன்பு அதாவது 2020, டிசம்பர் மாதம். ஆனால், இன்னும் பாதிப்பு எந்தளவு என அமெரிக்க அரசால் கண்டறிய முடியவில்லை. பாதிப்பு எவ்வளவு எனக் கண்டுபிடித்து அதில் இருந்து மீள்வதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என அரசுத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய அதிநவீன டெக் ஜாம்பவான் என மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் டெக்னாலஜி தலைக்கணத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அடி இது. அமெரிக்க அரசை மையப்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றிருந்தாலும், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த டெக் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல் பல மாதக் கணக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘ஃபயர் ஐ’ (Fire Eye) நிறுவனம்தான் முதன்முதலில் தங்கள் நிறுவனம் சைபர் பாதிப்புக்கு உள்ளானதைக் கண்டறிகிறது. இந்த ஃபயர் ஐ நிறுவனம் தான் அமெரிக்காவின் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் பாதிப்பைக் கண்டறிய எடுக்கும் நடவடிக்கைகளில், இது தங்கள் நிறுவனத்தை மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது எனக் கண்டறிகிறது. மேலும், இந்தத் தாக்குதலானது பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றும் கண்டறியப்படுகிறது. அதன் பின்னர் தான் பிரச்னையின் முழு உருவமும் அமெரிக்காவிற்குத் தெரிய வருகிறது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart