Description
Price: ₹ 29.00
(as of Apr 20,2021 01:17:33 UTC – Details)
இந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி மகாபெரியவரின் கருணை மிகுந்த அறிவுரைகள் சிலரது வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியது என்பதை நூல் ஆசிரியர் மாதவன் இந்த நூலில் வாழ்க்கைக் கதைகளாகக் கூறியிருக்கிறார். மனம் நொந்த நிலையில் அவரைத் தரிசிப்பவர்கள் அவருடைய அருளால் தங்கள் கவலை தீர்ந்து நிம்மதி அடையும் கதைகள் பக்தர்களுக்கு வரப்பிரசாதம். காஞ்சிப் பெரியவர் தன்னிடம் வந்த பக்தர்களின் மனதைப் படிக்கும் வல்லமை பெற்றிருந்தார். அவர் புரிந்த கடுந் தவத்தால் இந்த வல்லமை அவருக்கு வாய்த்தது. இந்த வல்லமையை அவர் ஒருபோதும் சுயநலத்துக்குப் பயன்படுத்தியதில்லை. எந்த ஆசையும் அவரை ஆட்கொள்ளவில்லை. மக்களை நல் வழிப்படுத்துவதற்கும் அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கும் மட்டுமே இதை அவர் பயன்படுத்தினார். இந்த விஷயங்கள் அனைத்தும் பக்தர்களின் அனுபவங்களின் மூலமாக இந்த நூலிலிருந்து புலனாகின்றன. தீயவர்களையும் அவர் வெறுத்ததோ அவர்களுக்கு தண்டனை அளித்ததோ இல்லை. அவர்களுடைய மனங்களையும் தன் தவ வலிமையால் மாற்றினார். மாற்றியதோடு அல்லாமல் அவர் அவர்களை மன்னித்து, திருந்திய மனிதரைப் போற்றவும் செய்தார். இந்த தெய்வ குணங்கள் எல்லாம் பக்தர்களின் கதைகளிலிருந்து வெளிப்படுகின்றன. பெரிய வாக்கியங்களை எழுதாமல் சின்ன சின்ன வாக்கியங்களில் தனக்கே உரிய எளிய நடையில் இந்தக் கதைகளை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலுக்கு மெருகு சேர்க்கிறது.
Kanchi mahaswamigalin aravuraigal (Tamil Edition)
There are no reviews yet.