77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள் (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

195.00

77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள் (Tamil Edition)-eBook
77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள் (Tamil Edition)-eBook

195.00

Description

Price: ₹ 195.00
(as of May 08,2021 18:32:39 UTC – Details)

- 1

ஆளுமை, நிர்வாகவியல், சுயமுன்னேற்ற மேலாண்மைச் சிந்தனைகள் குறித்து வள்ளுவர் காட்டும்
வாழ்வியல் வெற்றி மந்திரங்கள் சுவாரஸ்யமான குட்டிக்கதைகள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் வெற்றியின் வித்துக்களைத் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள். நிர்வாகத் துறையில் மாபெரும் வெற்றி பெற்றோரின் "வெற்றி ரகசிய" நூல்களுக்காகவும், அவர்களுடைய கருத்துக்களுக்காகவும் எத்தனையோ இளைஞர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை, மந்திரங்களாக நினைத்து, கேள்வியே கேட்காமல் பயன்படுத்தத் துணிகிறார்கள். மேனாட்டு நிர்வாகவியல் மேதைகளின் சுயமுன்னேற்ற நூல்களை போட்டி போட்டு வாங்குகின்றனர். இதைக்கண்ட இந்திய, தமிழக சுய முன்னேற்ற வழிகாட்டிகளும் தங்கள் பங்கிற்கு சுய முன்னேற்ற நூல்களை எழுதிக் குவிக்கிறார்கள்.

ஆனால் இவை அனைத்தும் நம்மிடமே உள்ளன. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்னரே நிர்வாகம், ஆளுமை, சுய முன்னேற்றம் என்று அனைத்தைப் பற்றியும் அதி அற்புதமாக, மிக மிகச் சுருக்கமாக ஓர் அறிஞர் எழுதியுள்ளார். அதுவும் தமிழிலேயே எழுதியிருக்கிறார். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மை தான்.

அந்த அறிஞரின் பெயர் "திருவள்ளுவர்". அவர் எழுதிய அதி அற்புத சிந்தனை நூல் "திருக்குறள்". அதில் இல்லாத நவீன நிர்வாகவியல் மந்திரங்களோ, சுய முன்னேற்ற கருத்துக்களோ இல்லை என்றே கூறலாம். பத்தாம் வகுப்புவரை மனப்பாடப் பகுதியிலும், அதன் பின் எப்போதாவது பேருந்துகளிலும், இன்னும் அரிதாக இலக்கியக் கூட்டங்களிலும் "கேள்விப்பட்டிருக்கும்" திருக்குறளையும், திருவள்ளுவரையும் நம்முடைய மாடர்ன் தலைமுறையினருக்கு வேறோரு கோணத்தில், வேறொரு பரிமாணத்தில் அறிமுகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. அப்போது தான் அதன் ஆழத்தை, அதன் அடர்த்தியை, அதன் வீச்சை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இந்நூலில் தேர்ந்தெடுத்த சில குறள்களையும் அவை எவ்வளவு அழகாக நிர்வாகவியல் மற்றும் சுய முன்னேற்ற கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதையும் விளக்கியுள்ளேன். இதன் மூலம் 2000 வருடங்களுக்கு முற்பட்ட திருவள்ளுவர் இன்றைய நவீனத் தலைமுறையோடு இயைந்து அவர்களுக்கான கருத்துக்களை அழகாகக் கொடுத்திருப்பதை நீங்கள் உணரலாம். அதனால் தான் அது காலத்தைக் கடந்த காவியமாக, ஓர் உலகப் பொதுமறையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகெங்கும் … மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அருமையை உணர்ந்த பிறகு அடுத்த நூல்களை நாடிப்போக வேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது.

படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.



77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள் (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள் (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart