” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும்  (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook
” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of May 08,2021 19:03:12 UTC – Details)

- 1

ஜோதிஷ சர்வஸ்வம் என்ற பெயரில் புதிய நூலை தொகுத்து வருகிறேன்.அதில் அ முதல் ஃ வரை எல்லாம் இடம் பெறும். இந்த நூல் ஜஸ்ட் பரிகாரங்களுக்கு மட்டுமானது.

இயன்றவரை 9 கிரகங்கள் /12 பாவங்கள் கெட்டால் எப்படி பரிகாரம் செய்து கொள்வது என்பதை விவரித்துள்ளேன்.
பரிகாரம் என்ற வார்த்தையை ஒரு புரிதலுக்காக பயன் படுத்துகிறேன். பரிகாரங்கள் குறித்த என் பார்வை முதல் அத்யாயத்தில் இடம் பெறுகிறது.
இதை படிக்க துவங்கும் நீங்கள் ஏற்கெனவே என் நூல்கள் ,வலைப்பதிவுகளை படித்தவராக இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை நீங்கள் என் எழுத்தை முதல் முறையாக படிப்பவர் என்றால் பேரதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். முதல் காரணம் என் எழுத்து நடை. 90% பேச்சு நடையில் இருக்கும்.

அடுத்தது மற்ற ஜோதிட நூல் ஆசிரியர்கள் ஒரு இறுக்கமான செந்தமிழ் நடையில்தான் ஜோதிட விதிகளை விவரிப்பார்கள். என் நிலை வேறு.

நான் விவரம் தெரிந்த பிறகு முதல் ஜோதிடரை சந்தித்தது 1989. பிப்ரவரி. ஆபீஸ் போட்டு தொழிலை ஆரம்பித்தது அது 1990 மார்ச். அப்போதைக்கு என் வயது 23 தான்.

அந்த வயதில் முதலில் என்னை அணுகியவர்கள் எல்லோருமே என் வயதினர் தான். அவர்களுக்கு எந்த முறையில் பலன்களை சொல்ல ஆரம்பித்தேனோ அதே முறை பழக்கமாகிவிட்டது.

நாளடைவில் அவர்களது பெற்றோர்களும் என் வாடிக்கையாளர்களாக மாறினாலும் அவர்கள் பார்வையில் நான் இளையவன் என்பதாலும் ஏற்கெனவே என் முறை அவர்கள் மகன்/ மகளின் மூலம் அறிமுகமாகி இருந்ததால் அவர்களும் என் முறையை அங்கீகரித்து விட்டார்கள்

வலை உலகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நுற்றுக்கு 90 சதவீதம் இங்கிலீஷ் மீடியம் படித்திருப்பார்கள் . செந்தமிழ் எல்லாம் அவர்களுக்கு அலர்ஜி. இதில் காப்பி பேஸ்ட் ஆபத்தும் மிக அதிகம். லிப்கோ வெளியிட்ட குடும்ப ஜோதிடம் நூலிலிருந்தே பாரா பாராவாக ஒரு பதிவுகள் போட்ட ஜோதிடரை எனக்கு தெரியும்.

எனவே இணையவாசிகளின் கவனம் பெறவும், இளையவர்களை இழுக்கவும், பழக்கத்தை மாற்றிக்கொள்வது சிரமம் என்பதாலும் காப்பி பேஸ்ட் இலிருந்து என் பதிவுகளை காப்பாற்றிக்கொள்ளவும் பேச்சு நடையை தொடர வேண்டி வந்தது.

எனவே நீங்கள் இந்த பேச்சு நடையை சகித்துக் கொள்ள வேண்டியது தான்.

அடுத்தபடியாக இன்னொரு டிஸ்கி. மற்ற ஜோதிடர்கள் ஒரு பலனை சொல்லி இது தான் நடக்கும் என்று அடித்து சொல்வார்கள். ஆனால் என் தீவிர வாசிப்பில் நான் அறிந்து கொண்ட உண்மை எந்த ஒரு கிரக ஸ்திதியும் எந்த இருவருக்கும் ஒரே பலனை தராது என்பதே.

அடுத்து அவர்கள் கூறும் பலன் என்பது கல்வெட்டு மாதிரி. அதை மாற்றவே முடியாது. அப்படியே மாற்ற வேண்டும் என்றால் பட்ஜெட் கூட.

என் நீண்ட நெடிய தொழில்முறை அனுபவத்தில் நான் கண்டுகொண்ட ரகசியம் கிரகங்கள் தரும் பலன் பற்பல இதர காரணிகளால் மாறும் என்பது.

கிரகங்கள் தரும் தீய பலனை தவிர்க்க ஒரே வழி அந்த தீய பலனை முன் கூட்டி நாமே நடத்தி கொள்வதே. இன்னும் உடைத்து சொல்வதானால் உங்கள் ஜாதகம் உங்களை எப்படி வாழ சொல்லியிருக்கிறதோ அப்படி வாழ வழி காட்டுவதே ( உங்கள் சமூக –பொருளாதார –குடும்ப வாழ்வு பாதிக்காத வண்ணம்)



” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart