காலத்தின் வாசனை (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

96.00

காலத்தின் வாசனை (Tamil Edition)-eBook
காலத்தின் வாசனை (Tamil Edition)-eBook

96.00

Description

Price: ₹ 96.00
(as of Jun 16,2021 14:23:37 UTC – Details)

- 1

தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை. அந்தக் காலத்தின் ரசனை மிகுந்த அம்சங்கள் காணாமல் போனது பற்றிதான் அவரது கட்டுரைகள் பேசுகின்றன.
வாழை இலையில் சாப்பிட்ட அந்தக் காலத்தையும் வாழை இலை வடிவிலான பிளாஸ்டிக்கையும் ஒப்பிட்டு நம்மை வாழை இலைக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய சிஐடி பெரியப்பா எப்படி வள்ளலாரில் ஆழ்ந்தவர் என்பதை கோடி காட்டியிருக்கிறார். வீட்டுக்கு விருந்தினர் வருவதை காகங்கள் எப்படி முன்கூட்டியே காட்டும் என்பதை நினைவுகூர்ந்து மாமா வீட்டுக்கு பலாப்பழத்துடன் வந்து நல்லெண்ணெய் தடவிக்கொண்டு சுளைகளைப் பெயர்த்துக் கொடுத்ததை நினைவுகூர்கிறார். கைமாற்று என்பது அன்றைய நாளில் குடும்பங்களிடையே எப்படி நிதித் தேவையைச் சமாளிக்க உதவியது என்பதை நினைவுகூர்ந்து அதில் நெகிழ்ச்சியான முத்திரையுடன் முடிக்கிறார்.
தஞ்சாவூரின் சந்துகளை பெயர்களோடு நினைவுகூர்ந்து எல்லா ஊர்க்காரர்களையும் பழைய நினைவில் ஆழ்த்துகிறார் (ஒரு சந்தினை வெளிநாட்டு ஜோடிகள் கவுரவிக்கும் விதமே அலாதி!). தஞ்சாவூர் அய்யர் பொட்டலக்கடை, அத்தர் பாய் கடை என்று நினைவுகள் தஞ்சாவூரை விட்டு வர மறுக்கின்றன. அப்பாவின் அந்திமக் காலத்தில் அவரது உடலை மொய்த்த சாவு எறும்புகள் பற்றிய கட்டுரையும் சென்னைப் புறநகரில் விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக்கி விற்றிருந்தாலும் அந்த இடத்துக்கு வந்து தோட்ட வேலை செய்த முதியவரின் நிலப்பற்று ஆகியவற்றை நெஞ்சில் அப்படியே பதிய வைக்கிறார்.
உரையாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த ஒரு கட்டுரை. தஞ்சை ப்ரகாஷ், தென்காசியில் டி.கே.சி. ரசிகமணி, பாரதியார் ஆகியோர் உரையாடல்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றொரு கட்டுரை. கல்யாண வீடுகளில் உறவினர்களும் நண்பர்களும் பழைய கதைகளைப் பேசி மகிழ்வதுடன் புதிய கல்யாணத்துக்கு அங்கேயே நிச்சயம் செய்துகொண்டு போனதையும் குறிப்பிடுகிறார். நண்பர்களின் உரையாடல் எனும் இரு கரைகளுக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது பேசாத பேச்சு என்னும் பேராறு என்ற ரூமியின் கவிதையை உரியவகையில் நினைவுபடுத்துகிறார் கவிராயர்.
தஞ்சை ப்ரகாஷ் நடத்திய யுவர் மெஸ்ஸில் மீசை முருகேசனும் இருளாண்டியும் உதவியாளர்களாகவும் இலக்கிய ஆர்வலர்களாகவும் இருந்து உரையாடல்களைக் கூட இருந்த கேட்ட ரசத்தையும் விவரிக்கிறார். மூலச் சூடு போக்கும் பிரண்டை ஊறுகாய், தூதுவளை ரசம், மணத்தக்காளி தண்ணிச் சோறு, கோலா மீன் என்று மெனுவையும் கூறி நாவில் எச்சில் ஊற வைக்கிறார். மாடியில் க.நா.சு., ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், பிரபஞ்சன், ந. பிச்சமூர்த்தி, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, ஜி. நாகராஜன், பாலகுமாரன், வண்ணநிலவன் அங்கு வந்ததை நினைவு கூர்ந்ததோடு சிறிது காலத்துக்குப் பிறகு அந்த மெஸ் மூடப்பட்டதையும் வருத்தத்தோடு பதிவு செய்கிறார்.
புது வருஷ டயரிக்கும் காலண்டர்களுக்கும் உள்ள மவுசைக் குறிப்பிடும்போது நடிகைகளின் ஆளுயர காலண்டர்களின் ஈர்ப்பையும் மயிலாடுதுறை நடராஜன், கோவில்பட்டி கொண்டைய ராஜு வரைந்த தெய்வீக மணம் கமழும் கடவுளர் படங்கள் கொண்ட காலண்டர்கள் வீடுகளில் தனி வரவேற்பு பெற்றதைக் குறிப்பிடுகிறார். குதிரைக் காலண்டரைப் பார்த்த நண்பர் குளம்போசை கேட்பதாகக் கூறியதையும் அவர் ரேஸ் பைத்தியத்தால் பணத்தை இழந்ததையும் சுவையாகக் கூறி முடிக்கிறார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்திகள், தீவிர அரசியல் கட்டுரைகள் போன்றவற்றுக்கு மத்தியில் வாரம்தோறும் காலத்தின் வாசனையைச் சுமந்துகொண்டுவந்த தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகள் இப்போது புத்தக வடிவம் பெறுகின்றன. வாசகர்களின் மனதில் என்றும் மணக்கும் நினைவுகளை இந்தக் கட்டுரைகள் எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை.
பதிப்பாசிரியர்காலத்தின் வாசனை (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “காலத்தின் வாசனை (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart