இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand): Next Gen Film Distribution For Indie Filmmakers (Tamil Edition)

₹100.00
Description
Price: ₹ 100.00
(as of Apr 17,2021 08:56:29 UTC – Details)
இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட மிகப் பெரும் ஆலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கில் தோன்றி வளர்ந்தபடி இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தோற்றமும் வெற்றியும் திரைப்பட ஆக்கமும் வினியோகமும் இனியும் வழமையான முறையிலேயே தொடர்ந்துகொண்டுதான் இருக்க வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பி அப்படியொன்றும் அவசியம் இல்லை என்கிற பதிலையும் கொடுக்கிறது.
மேற்கில் திரைப்படத் துறையை மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகள் எப்படியான வாய்ப்புகளைத் திரைப்பட வினியோக முறையில் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்தும் அறிமுக அளவில் தமிழில் பேச வேண்டும் என்று தீர்மானம் செய்து எழுதப்பட்டது இந்தப் புத்தகம். இதன் வழி நவீன தொழில் நுட்பங்கள் நம்மைச் சுற்றி எப்படியான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்கிற விழிப்புணர்வை இண்டி இயக்குனர்களுக்கும், ஏற்கனவே திரைப்பட வினியோகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.
There are no reviews yet.