அவளும் நானும் (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

338.00

அவளும் நானும் (Tamil Edition)
அவளும் நானும் (Tamil Edition)

338.00

Description

Price: ₹ 338.00
(as of Apr 17,2021 07:52:22 UTC – Details)

- 1

அவளும் நானும்… கதை பற்றி தாமரை என்னும் வாசகியின் விமர்சனம் உங்களுக்காக…
கதை அருமையாக நகர்கிறது சகோதரிகளே…
நிரஞ்சன் அற்புதமான ஹீரோ… நல்ல காதலன். நல்ல கணவனும் கூட… அவனின் நித்திலா… நிலா… பாப்பா… ரசிக்கும்படியான கேரக்டர். (ம்… அவளை வச்சுக்கிட்டு நாங்க பட்டபாடுன்னு புலம்பினீங்களே சிஸ்டர்ஸ்)
உயரத்தில் இருந்து… குணம், லட்சியம், வருங்கால இணை பத்தின எதுவுமே ஒத்துப்போகாத ரெண்டுபேர் காதலால் பிணைக்கப்படுறதும், பின் கல்யாணத்தால இணைக்கப்படுறதும், அது தொடர அக்கறை எடுக்காத ஹீரோயினோட முதிர்வின்மையால வரும் பிரச்சனைகள்… நீங்க கொண்டுபோயிருந்த விதம் அருமை சகோதரிகளே. காட்டுக்குள்ள மீட்டிங், டேட்டிங் (ஹனிமூன்), மேட்டின் எல்லாமே ரொம்ப புதுமையா ரசிக்கும் படி இருந்தது.
வாழ்த்துக்கள் சகோதரிகளே…
அவனுக்காக தன் கனவைக் கலைத்து வாரிசு சுமக்கத் தயாராகும் அவளும், அவளுக்காகத் தன் கொள்கையை விட்டு அவள் கனவு நிறைவேற வழி செய்ததோடு மட்டுமல்லாம தன் வாழ்க்கையையும் காப்பாத்துற சம்மதியமான அவனும், எப்பவும் அவர்கள் வாசகர்கள் நெஞ்சில் நிலை பெற்று இருப்பாங்க…

அன்புடன்,
தாமரை.

தாமரை உங்களின் மேலான விமர்சனத்திற்கு அம்மு யோகாவின் நன்றிகள் பல.

கதையில் இருந்து சில துளிகள்…

கிக் பாக்சிங் சேந்துக்கறேன் ஜானும்மா…
"உள்ளதே இவ ஆம்பள புள்ள கணக்கா தான் திரியுறா… இதுல குத்து சண்டை வேறையா? உன் மக ஊர் வம்பிழுத்துக்கிட்டு வருவா. அதுக்கெல்லாம் அனுப்பாத சொல்லிட்டேன்."
"பெண் பிள்ளைகள் இதெல்லாம் கத்துவச்சுக்கிறது நல்லது தான் அத்தை"
"பொம்பளப் புள்ளைகளுக்கு சரி. இவளுக்கு எதுக்குன்னு தான் கேக்கறேன்…? நாரதர் கொண்டையும், அழுக்கு சட்டையும், கிழிஞ்ச பேண்டும் போட்டுக்கிட்டு பிக்காளிப்பய மாதிரி திரியுறா, ஒரு பய பக்கத்தில் வரமாட்டான். அப்படியே வந்தாலும் நம்ம இனம்ன்னு நினச்சு வாடா மச்சான்னு தோள்ல கையை போட்டு கூட்டிக்கிட்டு போயிடுவான்."
**************************
"ஹாய் எங் மேன்… உன் வயசென்ன?" சீனியர் கேட்கும் போதே இன்று வசமாக சிக்கிவிட்டோம் என்பது புரிந்து போனது.
"இருபத்து ஒன்பது…" எனவும்
"தென் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க?" அவனை வாயை திறக்கவிடாமல்
"இன்னும் இவனுக்கான பொண்ணு பிறக்கவேயில்ல சீனியர்…!” என்றான் ஒருவன்.
அட்டகாசமான சிரிப்புடன், "யாரையாவது லவ் பண்றியா? உன் அம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்களா? சொல்லு நான் வந்து பேசறேன்…" என்றார் வீரேந்தர்.
"காட்டுவாசியை இப்ப இருக்க மார்டன் பொண்ணுங்க லவ் பண்ணாதுங்க சீனியர்…” இரண்டாமவன் கலாய்க்க.
"IFS டாப் ஸ்கோரர் இல்லியா? டௌரி அதிகம் எதிர்பார்க்கிறான் போல…"
"இல்ல உலக அழகி மாதிரி பொண்ணுக்காக காத்திருக்கானா இருக்கும்… ஆளுக்கு ஒன்று சொல்ல,
"ஸ்டாப்… ஸ்டாப்…! எனக்கான கேள்விக்கு என்னையும் கொஞ்சம் பதில் சொல்லவிடுங்க மக்களே…"
"சொல்லு மச்சான்… ஏன் கல்யாணம் பண்ணாம இருக்க?” என அனைவரும் கோரஸாக கேட்டனர்.
"ஜஸ்ட் 29 தானே ஆகுது… இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போகட்டும். அதுக்குள்ளயே குடும்ப வாழ்க்கையில் கமிட்டாக வேண்டான்னு பார்க்கிறேன் அவ்வளவு தான். நீங்க யோசிக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல…”
**************************************
"பெரிய வைல்ட்லைஃப் போட்டோக்ராபர்ன்னு பேப்பர்ல பேர் வரனும்னு ஆசைப்பட்டு இப்படி அல்ப ஆயுசுல ஒற்றைக்கொம்பனால சாகப்போறேனே…
அம்மா மடியில் செத்தோம், புருஷன் மடியில் செத்தோம்னு பெருமைப்படற மாதிரி இல்லாம…போயும், போயும்… ஒரு காட்டெருமையை கட்டிப்பிடிச்சுக்கிட்டு சாகப்போறேனே…!" அவளது புலம்பலில் திடுக்கிட்டவன்,
"காட்டெருமையா? திமிர் தான் டீ உனக்கு! அராத்து" என வாய் தான் சொன்னதே தவிர, பார்வை முழுவதும் யானையிடம் இருந்தது.
*********************************************
அரைகுறையாய் தெரிந்த நிலவொளியில் விரிந்து விரவியிருக்கும் கூந்தலுக்கு இடையே நிலவென அவள் முகம் கண்டவன் அவளின் பெண்மையை பூரணமாய் உணர்ந்தான். பிரிந்திருக்கும் குட்டி இதழ்கள் இச்சையூட்ட அதை மொத்தமாய் கடித்து தின்றுவிடும் அளவுக்கு மோகம் கூட,
‘எங்கிருந்து கிளம்பி வந்தாயாடி யட்சினி? என் கண்ணியத்தை கேள்விக் குறியாக்குவது தான் உன் திட்டமா? இந்த கணமே உன்னை மனைவியாய் வரித்து என் விரகம் தனித்துக் கொள்ள விளைகிறது மனம். இது என்ன விதமான நிலை? எனக்கு புரியவில்லையே…
இரவும், நிலவும், மடியில் தவழும் மங்கையுமாய் இருந்தால் இப்படி தான் மறை கழண்டு விடுமோ…? உன்னுள் மூழ்கி முழுவதுமாய் தொலைந்து போக ஆசை கொள்கிறேன்… ஏன் இப்படி…? நான் உணர்ந்த முதல் பெண் நீ என்பதாலா…? அன்றி உன்னை நோக்கி என் மனம் திரும்புகிறதா…?

இனி என்னவாகும் தெரிந்துகொள்ள தொடர்ந்து கதையை படியுங்கள்.

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “அவளும் நானும் (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this:
Shopping cart