பெரியார் பொன்மொழிகள்
தந்தை பெரியார் பொன்மொழிகள் அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, சுயமரியாதை, சமூக சமநிலை, சாதி ஒழிப்பு போன்றவை.
இந்த பதிவில் பெண்கள், பெண் விடுதலை மற்றும் திருமணம் தொடர்பான பெரியாரின் பொன்மொழிகள் சில பார்ப்போம்.
- பெரியாரின் பிற பொன்மொழிகளுக்கு இங்கு சொடுக்கவும்.
- பெரியாரை பற்றிய மேலும் படிக்க இங்கு சொடுக்கவும்.
- பிற தலைவர்களின் பொன்மொழிகள் பார்க்க
பெண்கள் பற்றிய பொன்மொழிகள்
பெரியாரின் பெண்கள் மற்றும் பெண் விடுதலை பற்றிய பொன்மொழிகள் அனைத்தும் அவர்களின் சுய மரியாதைக்கும், உரிமைக்கும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஒரு தூண்டுதலாக உள்ளது என்றால் மிகையல்ல.
4 ஆண்களும், 1 பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.
- தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்
- ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம் உரிமை என்பது.
- ‘கற்பு’ என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்..
- பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள்..
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்துகொண்டெ வருகின்றது.
ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை – ஓர் ஆணின் கண் அழகிற்கு ஒர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் – பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.
- பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள்.
எதிர்காலத்தில் “இவள் இன்னொருடைய மனைவி” என்று அழைக்கப்டாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.
பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் மோகப் கப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே, பெண்கள் ஆபாசமாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.
இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும், சொத்துகளும் இருக்க இடமில்லையே – ஏன்?
- ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்; எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது.
பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!.
கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; ஜீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.
- ஆணைப் போலவே பெண்ணுக்கும், வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும்.
கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.
- பெண் ஆசிரியர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
மாடுகளுக்குத் தினவெடுத்தால் உரசிக் கொள்ள தேய்ப்புக்கல் நட்டு வைக்கும் இந்து மக்கள், விதவைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?.
ஒரு உயிரைப் பட்டினி போட்டுச் சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவமான கல்வி அளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்..
திருமணங்களில் மக்களின் சராசரி வருமானத்தில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வருவாய்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கக்கூடாது..
‘கற்பு’ என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்..
கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் ஒழிய வேண்டும்..
பெரியார் பொன்மொழிகள் – திருமணம்
திருமணங்களில் மக்களின் சராசரி வருமானத்தில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வருவாய்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கக்கூடாது..
திருமணம் என்பதற்கு விருந்து, தடபுடல் செலவு ஒழிய வேண்டும்..
- மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப் போல் நடந்து கொள்ளவேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள், அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற என்னமில்லாது பழக வேண்டும்.
மணமக்கள், வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையராக இருக்க வேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும், கேடாவது ஏற்படாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும்.
நல்வாழ்வும், நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப் பேற்றைக் குறைத்துக் கொண்டு, வாழ்க்கை வசதிகளை நல்லவண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும்.
கல்யாணம், திருமணம் என்கிற பெயர்களைக்கூட நான் ஒப்புக்கொள்வதில்லை. வாழ்க்கை துணை ஒப்பந்தம் என்றுதான் நான் சொல்வது. ஆகையால், ஒப்பந்தத்துக்கு உறுதிமொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்?
இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை, துணை என்றால் நட்பு, உதவி, சமபங்கு என்பதைத்தான் கூறலாம்..
சிக்கனமே செல்வம், தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனத்தில் இருத்தல் வேண்டும்..
பெரியார் பற்றிய புத்தகங்கள்
பெரியாரின் பொன்மொழிகள் – பிற தலைப்புகளில்
பெண் விடுதலை , சாதி, சுயமரியாதை, கல்வி பற்றிய பெரியாரின் பொன்மொழிகள் பார்க்க இங்கு சொடுக்கவும்