பெரியார் பொன்மொழிகள் கல்வி & மாணவர்கள்

Periyar Ponmozhigal

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

பெரியாரின் பொன்மொழிகள்(Periyar Ponmozhigal) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, பெண் கல்வி, சுயமரியாதை, சமூக முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்றவை.

இந்த பதிவில் கல்வி மற்றும் மானவர்கள் பற்றிய பெரியாரின்  சில பொன்மொழிகளை பார்ப்போம்.

 

கல்வி, மாணவர்கள் பற்றிய பெரியாரின் பொன்மொழிகள்

Periyar Ponmozhigal

நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்..

கல்வியின் நோக்கம் மக்கள் பகுத்தறிவு பெறும் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, அறிவை மழுங்க வைக்கும் மூட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கக்கூடாது..

கடவுள் பக்தி, மத பக்தி, அரச பக்தி, ஆகிய அறிவுத் தடைகளும், அடிமைப் புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது..

 • சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு..

ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்..

புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பதும், முற்போக்கு அடைவதும் சாத்தியமாகும்..

 • கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!..

அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசு..

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்..

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்..

பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது..

எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை..

 • தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது..

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.

ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயிலவேண்டும்.

எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறித்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்.

மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும். நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம்.

 1. கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமறியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.
 2. மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் – தொல்லை கொடுக்காதவனாய் – நாணயமாய் வாழ்வதற்கு.

அறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்..

மாணவர்கள் அரசியலில் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கல் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேன்டியது அடிமைக் கல்வியைவிட முக்கியமானது.

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள்; பின் விளைவை அனுபவித்து, அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகின்றதோ கூட்டம் குதுகளம் என்பவை எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துனிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள்.

வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதேயில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை; அறிவுக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழகுவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து, தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாததாகும்.

பெரியார் பற்றிய புத்தகங்கள்

 

பெரியாரின் பொன்மொழிகள் – பிற தலைப்புகளில்

பெண் விடுதலை , சாதி, சுயமரியாதை, அரசியல் பற்றிய பெரியாரின் பொன்மொழிகள் பார்க்க இங்கு சொடுக்கவும்.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart