கன்னியாக்குமரி thamizh dna

கன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை

2430 0

கன்னியாகுமரி

சூரிய உதயம் மற்றும் மறைவு இவை மட்டுமல்ல கன்னியாகுமரி , இன்னும் எவ்வளவோ அற்புதங்களை தன்னிடம் கொண்டுள்ளது குறிப்பாக 20 கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் (kanyakumari tourist place in tamil) அதை பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்கலாம் வாங்க…

தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி ஒன்று. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது, இதன் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இங்கு ஆதித்தமிழானது மலையாளத்துடன் கலந்து பேசப்படுகிறது எனவே நாகர்கோவில் மக்களின் தமிழானது கேட்க்க சற்று வித்தியாசமானது. ஆனால் அடிப்படையில் இதுவும் தமிழாகும்.

மக்கள் தொகை அடர்த்தியை பொருத்தவரை தமிழகத்தில் 2-ஆம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது.

  • நாகர்கோவில்,
  • பத்மநாபபுரம்,
  • குளச்சல்,
  • குழித்துறை

என 4 நகரங்கள் உள்ளன.

வள்ளுவர் சிலை

தமிழின் ஐந்திணைகளில், 4 திணைகள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் 9 நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது சுவர்க்கமாக திகழ்கிறது.

இம்மாவட்டத்தின் மேற்கே, கேரளமும் கிழக்கிலும், வடக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கே  இந்துமாகடலும் எல்லைகளாக உள்ளன.

2004 டிசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது.

கன்னியாகுமரி பெயர் காரணம்

குமரியம்மன் கோயில் | பகவதி அம்மன் திருக்கோவில்

குமரி முனையில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல் ஒரு கோயில் உள்ளது, இதன் பெயர் குமரியம்மன் கோயில் (பகவதி அம்மன் திருக்கோவில்). குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முயன்று, முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ முடிவு கொண்டு, ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

குமரியம்மன் கோயில்
குமரியம்மன் கோயில்

இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள்.

பரசுராமனால் இந்தக் கோவில் 3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டது ஆகும்.இங்கு பார்வதி தேவி இந்தியாவின் தெற்குகடற்கரையை பாதுகாப்பது போல நிற்கின்றாள்.

இந்த அம்மனின் மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒத்திருப்பதாக நம்பப்படுகிறது.  இதற்க்கு காரணம் இப்பகுதியில் பயணித்த கப்பலானது, இம்மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கு ஒளி என்று கருதி பாறையில் மோதி சேதமடைந்ததாகக் ஒரு பழங்ககதை இங்கு நம்பபடுகின்றது.

இக் கோவில் கடல் கரையில் அமைந்துள்ளது, இருப்பினும் இங்குள்ள கிணற்று நீா் உப்பாக இல்லாமல் சுவையாக இருப்பதும் இங்கு சிறப்பாகும்.

செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நடைபெறும் ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவும், மே மற்றும் ஜீன் மாதத்தில் தோ் திருவிழாவும், இக் கோவிலில் சிறப்பாக நடைப்றும்.

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்

அழகுமிக்க கடற்கரைகள்

முட்டம் கடற்கரை

முட்டம் கடற்கரை, கன்னியாக்குமரி
முட்டம் கடற்கரை

நாகா்கோவிலிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் இது உள்ளது. இங்கு கம்பீரமான பாறைகள் நிறைந்ததாக கடற்கரை கானப்படுகின்றது. இங்குள்ள பாறைகள் மேல் அலைகள் மோதி பனிபோல் சிதறுவது ஒரு அழகிய காட்சியாகும்.

சொத்தவிளை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை
சொத்தவிளை கடற்கரை, கன்னியாக்குமரி

மேற்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இது உள்ளது. விடுமுறையை கழிக்க இக்கடற்கரை ஒரு சிறந்த இடமாகும்.

முக்கடல் சங்கமிக்கும் இடம்

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்

இது, வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை கண்டிப்பாக்க பார்து ரசிக்க வேண்டும்.

திருவள்ளுவா் சிலை

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் என்றாலே நமக்கு நினைவிற்கு வரும் முதல் இடம் இந்த வள்ளுவர் சிலைதான்.

திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில், கடலின் உள்ளே விவேகானந்தா் மண்டபம் அருகே உள்ள பாறையில் அமைந்துள்ளது.

வள்ளுவாரின் 133 அடி உயர சிலை

வள்ளுவாரின் 133 அடி உயர சிலை

95 அடி உயர வள்ளுவா் சிலை திருக்குறளின் 38 அதிகாரங்களைக் கொண்ட நல்லொழுக்கம் என்னும் பாடல் தொகுப்பை குறிக்கும்படி, நல்லொழுக்கமே மனிதனின் இன்பத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் மூலகாரணம் என்பதை விளக்கும் வகையில், 38 அடி உயர பீடத்தில் அமைந்துள்ளது இங்குகுறிப்பிடதக்கது.

குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும்படி இதன் பீடம் மற்றும் சிலை 133 அடி உயர்த்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

7000 டன் எடைக் கொண்ட வள்ளுவா் இச்சிலை இடுப்பு பகுதியில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படும். இதனை வடிவமைத்தவா் டாக்டா்.வி. கணபதி ஸ்தபதி.

இதை சுற்றி கலை வேலைப்பாடு மிக்க 38 அடி உயர அலங்கார மண்டபம் உள்ளது. இந்த அலங்கார மண்டபத்தை சுற்றி 8 திசைகளை நோக்கி 10 யானைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருவள்ளவா் சிலை ஜனவரி 1, 2000ம் ஆண்டு திறக்கப்பட்டது.

விவேகானந்தா் நினைவு மண்டபம்

விவேகானந்தா் நினைவு மண்டபம்
விவேகானந்தா் நினைவு மண்டபம்

சுவாமி  விவேகானந்தா் ஞானத்தில் முக்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதே விவேகானந்தா் நினைவு மண்டபம் ஆகும்.  திரு.ஏக்நாத் ரானடே என்பவரின் இடைவிடாத முயற்சியால் இந்த மண்டபம் கட்டப்பட்டது.

இது 1970 ம் ஆண்டுகளில் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.  இங்கு பொது மக்கள் தியானிப்பதற்காக ஒரு தியான மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிடக் கலைகளை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டதாகும். இங்கு விவேகானந்தரின் திருஉருவச்சிலை அமைந்துள்ளது.

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் - 9

இது இரு பிரிவாக உள்ளது.

  • விவேகானந்தா் மண்டபம்,
  • திரு பாத மண்டபம்.

மகாத்மா காந்தி மண்டபம்

மகாத்மா காந்தி மண்டபம்
மகாத்மா காந்தி மண்டபம் கன்னியாக்குமரி

மகாத்மா காந்தி 1925 மற்றும் 1937 ஆண்டுகளில் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இந்த மண்டபம் பிப்ரவரி 12, 1948 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் வைக்கப்பட்ட இடத்தில் காந்திஜியின் நினைவாகக் கட்டப்பட்டது ஆகும். இது ஒரிசா மாநில கட்டிட கலையில் கட்டப்பட்டது ஆகும்.

மகாத்மா காந்தி மண்டபம் கன்னியாக்குமரி
மகாத்மா காந்தி மண்டபம் கன்னியாக்குமரி

இந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள துளை வழியாக காந்தியின் பிறந்த தினமான அக்டோபா் 2 அன்று அவரது அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மண்டபத்தின் மத்திய கோபுரம் காந்தி இறந்த போது அவருடைய வயதை குறிக்கும்படி 79 அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜா் நினைவு மண்டபம்

இந்த நினைவு மண்டபம், கருப்பு காந்தி என்றும் பெருந்தலைவா் என்றும் புகழப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரும் தமிழக முன்னால் முதலமைச்சருமான காமராஜா் நினைவாக கட்டப்பட்டது.

இவர், முன்னோடி திட்டங்களான அனைவருக்கும் கல்வி மற்றும் இலவச சத்துணவு திட்டம் போன்றவற்றை அறிமுகம்படுத்தியவா். அவரது மறைவுக்கு பின் அவரது அஸ்தி கன்னியாகுமரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த இடத்தில் கட்டப்பட்டதுதான் காமராஜா் நினைவு மண்டபம். இம்மண்டபம் அக்டோபர் 2 ஆம் தேதி 2000-ம் ஆண்டில் திறந்து வைக்கபட்டது.

காமராஜா் நினைவு மண்டபம்
காமராஜா் நினைவு மண்டபம்

இவர் தமிழகத்தின் மிக எளிமையான மற்றும் நோ்மையான அரசியல்வாதி, காங்கிரஸ் கட்சியின் கிங் மேக்கா்  என்று அழைக்கப்பட்டார்.

இந்த மண்டபத்தில் அவரது வாழ்வில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன. இங்கு ஒரு நூலகமும் உள்ளது.

மாத்தூா் தொட்டிப்பாலம்

இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். 1966 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்டதாகும்.

மாத்தூா் தொட்டிப்பாலம்
மாத்தூா் தொட்டிப்பாலம்

மாத்தூா் தொட்டிப்பாலமானது 115 அடி உயரமும்,  ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது.

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் - 15இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்ககி நிற்கின்றது. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது.

இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு நீராடும் துறை மற்றும் குழந்தைகள் பூங்காவும் உள்ளது.

திற்பரப்பு நீா்வீழ்ச்சி

திற்பரப்பு அருவியானது  நாகா் கோவிலிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர். தொலைவிலும் உள்ளது. திற்பரப்பு  என்னும் ஊா்  இந்த நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றததாகும்.

திற்பரப்பு நீா்வீழ்ச்சி
திற்பரப்பு நீா்வீழ்ச்சி

இந்த அருவியானது கோதை நதியில் அமைந்துள்ளது. கோதைநதி திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இது பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நீா் வீழ்ச்சியானது 300 நீளாமும் 50 அடி உயரம் முற்றிலும் பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையும் கொண்டது.

இந்த அருவி வருடத்தில் 7 மாதம்  அதிக அளவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு பூங்காவும் நீச்சல் குளமும் உள்ளது.  படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் இங்கு உள்ளது.

ஆற்றின் இடபக்கக் கரையில் நீா்த்தேக்கத்திற்கும் நீா்வீழ்ச்சிக்கும் நடுவே 12 சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமான மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இந்தக்  கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் வடிவில் உள்ளார்.

இக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழய கோயில் ஆகும்.

புனித தலங்கள்

சிதறால் ஜைன மலை குகை கோயில்

முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊா் திகம்பர ஜைன மத துறவிகளின் உறைவிடமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இந்த மலையின் உச்சியில் உள்ள குகையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சோ்ந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சிதறால் ஜைன மலை குகை கோயில்
சிதறால் ஜைன மலை குகை கோயில்

முதலாம் மகேந்திரவர்மனின் உதவியால் இங்கு ஜைன மதம் வளா்ந்தது. 13 ம் நூற்றாண்டில் இந்த குகை பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது. சிதரால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும் வழங்கப்படுகிறது.

அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்ட சிதரால் குகை தற்போது  இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இங்கு ஒன்பது நூற்றாண்டைச் சோ்ந்த 9 கல்வெட்டுகள் உள்ளது.

இந்தப் பழங்கால ஜைன மத சிதரால் நினைவு சிற்பங்கள் கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

திரு.தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்

ஞான அரண்யம் என்று அழைக்கப்படும் சுசீந்திரம் கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள யாத்ரிக தலம் ஆகும்.

இக் கோவிலின் மூலவா் சிவன்,  விஷ்ணு, பிரம்மன் ஆகியோரை ஒருங்கே கொண்டுள்ள தாணுமாலையன் சுவாமி ஆகும்.

தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்
தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்

இங்கு லிங்கம் 3 பகுதியாக உள்ளது. மேல் பகுதி தாணு என்னும் சிவன் பேரிலும் நடுப் பகுதி மால் என்னும் விஷ்ணு பேரிலும் கடைசிப் பகுதி அயன் என்னும் பிரம்மன் பேரிலும் அமைந்துள்ளது.

இங்கு தாணுமாலையன், ஆத்ரி என்னும் முனிவரும் அவரது மனைவி அனுசுயா என்பவா்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது.

இங்கு விநாயகரின் பெண் உருவமான விக்னேஷ்வரி சிலையும் , இந்திர விநாயகா் மற்றும் கால பைரவரின் சிலைகலும் காணப்படுகிறது.  இங்கு ஒன்பதம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகிறது.  இதன் மேற்கூரையில் நவகிரகங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இங்கு ராமா் கோவிலுக்கு எதிரில் 5.5 மீட்டர்.  உயரத்தில் அசோக வனத்தில் சீதைக்கு விஸ்வரூப வடிவில் காட்சியளித்த அனுமாரும் சித்தரிக்கப்பட்டுள்ளார். வலது பக்க கூடத்தில் ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட நாங்கு இசைத் தூண்கள் உள்ளன

குகநாதசுவாமி கோவில்

குகநாதசுவாமி கோவில்
குகநாதசுவாமி கோவில்

1000 ஆண்டுக் கால பழமை வாய்ந்த  இந்த கோவில் கன்னியாகுமரி இரயில் நிலையம் அருகில் உள்ளது.  இது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல் வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன,

புனித சவேரியார் தேவாலயம்

இது 16 ஆம் நூற்றாண்டை சோ்ந்தது, உலகிலேயே புனித பிரான்சிஸ் சேவியருக்கு அா்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயம் ஆகும். நாகா்கோவிலின் புறநகா் பகுதியான கோட்டாரில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.

புனித சவேரியார் தேவாலயம்

புனித சவேரியார் தேவாலயம்

தற்போதைய கன்னியாகுமரி (தென்திருவிதாங்கூரில் ) மாவட்டத்தில் 1543-இல்  தன் இறைப்பணியைத் தொடர்ந்தார் இவர்.

இங்கு வருடந்தோறும் நவம்பா் 24 முதல் டிசம்பா் 3  வரை  10 நாட்கள் திருவிழா நடைபெறும். டிசம்பா் 1,2,3 ஆம் தேதிகளில் நடைபெறும் தோ் திருவிழா மிக சிறப்பாகும், இதை காண மக்கள் கூட்டம் அதிகம் வரும்.

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் - 22

புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier)

இவர் இறைப்பணியைச் செய்ய சாங்சோங்  தீவிற்கு சென்றார், இத்தீவில் நோயால் பாதிக்கபட்ட இவர், 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள்  அத்தீவிலேயே உயிர் துறந்தார், புறகு இவர் உடல் பல இடங்கள் கடந்து, தந்தை பெய்ரோ’வின் உத்தரவின்பேரில்  புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்லப்பட்டது .

புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier)

இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக கோவாவில் வைக்கப்பட்டுள்ளது.

உபகார மாதா கோவில்

பழமை வாய்ந்த தேவாலயங்களில் உபகார மாதா கோயிலும் ஒன்று. இதன் கோபுர உயரம் 153 அடி. இங்குள்ள தங்கச் சிலுவையின் உயரம் 8 அடி ஆகும். இத்திருத்தலம் 100 ஆண்டுகள் பழைய வரலாறு கொண்டது.  அன்னை மரியாளுக்கு அர்பணிக்கப்பட்ட ஆலயம் என்ற சிறப்பு வாய்ந்தது. 153 அடி நீளம் கொண்ட ஆலயம் ஜெபமாலை மணிகளின் எண்ணிக்கையான 153 என்பதை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டு அதன் உச்சியில் பொற்சிலுவையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

உபகார மாதா கோவில்
உபகார மாதா கோவில், கன்னியாக்குமரி

உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். உள்ளூரில் இருந்து இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோரும்  வருவது இங்கு சிறப்பாகும்.

பீா் முகமது தா்கா

பீா் முகமது தா்கா, கன்னியாக்குமரி
பீா் முகமது தா்கா

தக்கலையில் உள்ள இந்த தா்கா, மாபெரும் சூபி தத்துவ ஞானியான பீர் முகம்மது அப்பாவை சிறப்பிக்கும் வகையில் பீா் முகமது ஒலியுல்லா எனப் பெயா் பெற்றுள்ளது. இவா் பல்வேறு தத்துவ போதனைகள் அடங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் பெளா்ணமி தினத்தன்று முகமது அப்பாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கேரளபுரம் விநாயகர் கோயில்

கேரளபுரம் விநாயகர் கோயில்
கேரளபுரம் விநாயகர் கோயில்

ஊருக்கு ஒரு வினாயகர் கோயில் இருப்பினும், இதுவொரு புதிரான விநாயகர். தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்து விநாயகர்  சிலை 6 மாதம் கறுப்பாகவும் 6 மாதம் வெள்ளையாகவும் உள்ளது.

ஆடி மாஅதம் முதல் மார்கழி வரை இப்புள்ளையார் கருப்பு நிறமாகவும், பின் தை முதல் ஆனி வரை இவர் வெள்ளை நிறமாகவும் மாறுவதே இதன் சிறப்பு.

முருகன் குன்றம்

முருகன் குன்றம்
முருகன் குன்றம்

நீங்கள், மனித நடமாட்டமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தால் இது நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் இந்த முருகன் குன்றம். இது கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. பயணதூரத்தில் உள்ளது.

பகல் மற்றும் நிலாப் பொழுதுகளிலும் ஆள்ள நடமாட்டமற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் தான் இந்த முருகன் குன்றம்.

பேச்சிப்பாறை அணை

பேச்சிப்பாறை அணை
பேச்சிப்பாறை அணை

ஆம், நீங்கள் அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்களே அந்த அணையே தான். பார்த்து பரவசம் கொள்ள வேண்டிய  மிகச் சிறந்த பொழுது போக்குத் தலமாகும். படகுப் பயணம் சென்று மகிழ ஒரு அருமையான இடம் இது. குமரியிலிருந்து 75 கி.மீ தொலைவில் பேச்சிப்பாறை அணை  உள்ளது.

உதயகிரி கோட்டை

கன்னியாகுமரி சுற்றுலா தலங்களில் இந்த கோட்டைகளும் சென்று பார்க்க சிறந்த இடங்க்களாகும். இது மார்த்தாண்டவர்மனின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1729 – 1758) கட்டப்பட்ட தமிழகத்தின் பழமையான  கோட்டை ஆகும். இங்கு ஒரு டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறையும், ஒரு துப்பாக்கி பட்டறையும், இருக்கிறது.

உதயகிரி கோட்டை
உதயகிரி கோட்டை

டச்சு தளபதி பற்றி ஒரு சுவாரசியமான கதை:

குளச்சலில் நடந்த போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியான டச்சு தளபதி டிலானி, பின்னர் மார்த்தாண்ட வர்ம மன்னரின் நம்பிக்கையைப் பெற்று விசுவாசமான தளபதியாக உயர்ந்தான்.

மேலும், மார்த்தாண்ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தாராம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைப் பகல் நேரத்தில் மட்டுமே சுற்றுளா பயணிகள் பார்த்து ரசிக்க அனுமதி.

வட்டக்கோட்டை

இதுவொரு கம்பீரமான கற்கோட்டை. குமரி முனையின் வடகிழக்கில் 6 கி.மீ. தொலைவில் இக்கோட்டை உள்ளது. இது,தென் திருவிதாங்கூர் வரிசை என்று சொல்லப்படும் எல்லைக் காப்பரண் வரிசையில் வருகிறது. நாஞ்சில் நாட்டு பாதுகாப்பிற்காக மன்னன் மார்த்தாண்டவர்மன்  இக்கோட்டையை கட்டினான்.

வட்டக்கோட்டை
வட்டக்கோட்டை

இதன் உட்புறத்தில் உறுதி வாய்ந்த உட்புறக் கட்டுமானங்கள்  மன்னனின் டச்சுத் தளபதி டிலானியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டன.

வட்டக்கோட்டை
வட்டக்கோட்டை, கன்னியாக்குமரி

இக்கோட்டையின் பரப்பு 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் அழகையும் பிரமாண்டத்தையும் கான ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள் உங்க்களுக்கு பிடித்திருக்கும் என நினைகின்றேன். இதைப்பற்றி படித்தால் மட்டும் போதாது, நேரில் சென்று இந்த இடங்களை கண்டு மகிழுங்கள்.

நன்றி

Related Post

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்

Posted by - செப்டம்பர் 11, 2018 0
மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139…
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

Posted by - செப்டம்பர் 12, 2018 0
மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக…
ஐராவதீசுவரர் கோயில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்

Posted by - ஆகஸ்ட் 28, 2018 0
தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம் இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு உள்ள குளத்திர்க்கு திருக்குளத்திர்க்கு எமதீர்த்தம் என பெயர். இங்குதான்…
ஊட்டி சுற்றுலா பயணம்

அழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்

Posted by - செப்டம்பர் 2, 2018 0
ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் தென் இந்தியர்களுக்கு ஒரு வரம் | ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு 'மலைப்பிரதேசங்களின் ராணி' என பெயர்...
Doddabetta

தொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்

Posted by - டிசம்பர் 18, 2017 4
தொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர்......நாளொன்றுக்கு சுமார்…

உங்கள் கருத்தை இடுக...