ஹியூகோ வுட் | Hugo Woods
ஹியூகோ வுட், இவரைப்பற்றி தெறிந்து கொள்ள காலத்தில் ஒரு நூற்றாண்டு முன்னோக்கிபயணம் செய்யலாம் வாங்க…
வருடம் 1799:
பல ஆண்டுகள் நடந்த மைசூர் போரில் திப்புவை சூழ்ச்சியால் வீழ்த்தி, ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்தபிறகு தான் கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது.

புதிதாக தங்களுக்கு கிடைத்த கொங்கு நாட்டை நிர்வாகிப்பது தொடர்பாக 1801-ல், சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த எட்வார்டு கிளிவ் (Edward Clive) என்பாவரின் உத்தரவின் பேரில்,
ஆய்வாளரும் இயற்கை ஆர்வலரும், மருத்துவ அலுவலருமான டாக்டர்.பிரான்சிஸ் புக்கானன் (Buchanan Francis Hamilton) என்ற ஆங்கிலேயர், சென்னையிலிருந்து, கேரளா கடற்கரை வரை தனது ஆய்வு பயணத்தை மேற்கொண்டார்.
ஆனைமலை
ஆனைமலை, இது மேற்குத் தொடர்ச்சி மலையில் (Western Ghats) உள்ள ஒரு மலையாகும். இதன் உயரமான சிகரம் ஆனைமுடி (2,695 மீ) இதுவே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமும். இந்த மலைத் தொடரை உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது.
டாக்டர்.பிரான்சிஸ் புக்கானனின் பொள்ளாச்சியிலிருந்து மலபார் நோக்கிய பயணத்தில், அங்கிருந்த ஒரு மாபெரும் வனப்பகுதியை பார்த்துள்ளார். இம்மலைக்காடுகள் இதன் அடிவாரத்திலிருந்த “ஆனைமலை” என்ற ஊர் வரை பரந்திருந்ததையும்.
மேலும், அங்கே பல அறிய உயிரினங்கள் வாழ்ந்தாகவும், இந்த காடுகளில் யானைகள் நிறைந்திருந்ததால் தான் “ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் என்று தனது பயண குறிப்பில் (A Journey from Madras through the countries of Mysore, Canura and Malabar) குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஆய்வின் முடிவுகளின் படி, ஆங்கில அரசு இங்கு சிறப்பாக ஆட்ச்சி செய்ய வேண்டுமானால், கலெக்டர், துணை கலெக்டர், நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் உள்ள ஆங்கிலேயர்கள் உள்ளூர் மொழியையும் கற்கவேண்டும், அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.
தேக்கு மரக் காடுகள்
ஆனால் இவர் அதோடு இல்லாமல்,

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள காடுகளை பற்றியும் அதிலுள்ள பலா, தேக்கு,வேங்கை கடம்பு, ஈட்டி உள்ளிட்ட பல வலிமையான மரங்களையும் பார்ர்து வியந்த இவர், தனது பயண நூலில் எழுதி கிழித்து தள்ளீவிட்டார்.
பிறகென்ன, சென்னை மாகான பிரிட்டிஷ் ஆளுநர் தாமஸ் மன்றோ (Thomas Munro)-வின் காதுகலுக்கு இந்த தகவல்கள் போக, இந்தப் பகுதியை ஆய்வு செய்யும் பணிக்காக 1820-ல் வார்டு மற்றும் கொன்னர் (Ward and Connor) என்ற இரு ஆங்கிலேயர்களை ஆனைமலைக்கு அனுபியுள்ளார்.
ஆய்வுக்கு வந்தவர்கள், வேறெங்கும் கண்டிராத பெரும் தேக்கு மரங்களைக் கொண்ட காடுகள் இது எனபதை விரைவிலேயே புரிந்து கொண்டணர், இருவரும் தங்கள் அறிக்கையை ஆங்கில அரசுக்கு அனுப்பினர்.
ஐரோப்பாவில் தொழில் புரட்சி
அது 18-ம் நூற்றாண்டின் துவக்கம், ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரும் தொழில் புரட்சியின் காரணமாக அங்கு ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. எனவே ஐரோப்பிய நாடுகளில் “ஓக்” மரங்களுக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்குள்ள காடுகளிலிருந்த மிக வலிமையான மரமான “ஓக்” மரங்கள் அனைத்தும் வெட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக தொழிற்சாலைகளை அமைக்கவும், கப்பல் கட்டவும், துறைமுகங்கள் கட்ட, புதிய இரயில் பாதைகளை அமைக்க, தந்திக்கம்பம் நட எனப் பல்வேறு பணிகளுக்காக பெருமளவில் வலிமையான மரங்ககள் அதிக அளவில் தேவை ஏற்ப்பட்ட நேரம் அது.
அப்போது, ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த ஆனைமலையில் பெருமளவில் வலிமையான தேக்குமரங்கள் இருப்பது இவர்களுக்கு தெறிந்த காரணத்தால் . அவ்வரிய மரங்கலை மிகவும் அளவுக்கு அதிகமாக வெட்டிச் சாய்த்தனர். இந்த இந்திய தேக்கு மரங்களை “இண்டியன் ஓக்” என்று பிரிட்டிஷார் பிராண்டு செய்தனர்.
Opration Top Slip
இப்படியாக வெட்டிய மரங்களை மலை முகட்டிலிருந்து கீழே தள்ளப்பட்ட மாட்டு வண்டிகள் மூலம், யானைகளாலும் இழுக்கப்பட்ட பெட்டிகள் மூலம் மரங்கள் சுப்பேகவுண்டன் புதூரருக்கு கொண்டு செல்லப்பட்டது, இது Opration Top Slip எனப்பட்டது. இந்த மரங்கள் கீழே தள்ளப்பட்ட இடத்திற்கு “டாப்ஸ்லிப்” (Top Slip) என்று பெயர் பிறகு ஏற்பட்டது.
முதன் முதலாக இங்கே துவங்கப்பட்ட ஒரு அஞ்சல் நிலையத்திற்குத்தான் ( Top Slip ) “டாப் ஸ்லிப்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலேய அரசால் சூட்டப்பட்டது.

இதற்காகவே ஆனைமலை ரோடு ரயில்வே நிலையம் துவக்கப்பட்டது. இது மட்டும் அல்ல பல ரயில்வே நிலையங்ககள் இந்தியாவில் இந்த ஆங்கிலேயர்களால் இது போன்ற இந்திய இயற்கை வலங்களை கொடுமையாக சுறண்டுவதற்க்கு மட்டும் தன் துவக்கினர்.
அழிந்து போன தேக்கு மரங்கள்

ஒரு கால கட்டத்தில் ஆனைமலையின் வணப்பகுதியில் உள்ள அனைத்து தேக்கு மற்றும் வலிமையான மரங்ககளும் அழியும் அளவுக்கு இது போனது. இதனால் மழைப்பொழிவு குறைந்து, காட்டு விலங்குகள் குடிநீருக்காக மனிதர்களின் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கின.
மேலும், இம்மரங்ககளுக்கு அடுத்தடடுத்து அதிக தேவை ஏற்பட்டதாலும், இந்திய காடுகளை வளர்க்கவேண்டிய அவசியம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.
450 வருட உலகிலேயே பழைய கன்னிமாரா தேக்கு மரம், ஆனைமலை அருகில் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ளது.
ஹியூகோ வுட் வருகை
இனவே, ஆனைமலைத் தொடரில் அழிந்த காட்டுப்பகுதியை மீட்டெடுட்து மறுசீரமைப்பு பணிக்காக 1915-ம் ஆண்டு ஹியூகோ வுட்” (Hugo Francis Andrew Wood) என்ற IFS அலுவலர் வந்து சேர்ந்தார்.
இதற்கு முன் ராஜஸ்தானில் உள்ள அஜ்மிர் காடுகளில் அவர் செய்த பணியைக் கவனித்த பாராட்டிய பிரிட்டிஷ் அரசு, ஆனைமலை பகுதியையும் மறு சீரமைக்க இவர் தான் சரியானவர் என முடிவு செய்தது.
இவர், மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் பயணம் செய்து,
மரத்தை வேரோடு வெட்டாமல், நிலத்துக்கு மேல் 1 அடி விட்டு வெட்டுவது. 25 ஆண்டுகளைக் கடந்த பழைய மரங்களை மட்டுமே வெட்டுவது, மேலும் 1 மரத்தை வெட்டினால் 4 மரக்கன்றுகளை நடுவது என அரசுக்கு வேண்டிய செயல்திட்டத்தை சமர்ப்பித்தார்.
இங்கிலாந்தில் IFS. படித்த வுட், பங்களாவில் தங்காமல், டாப்சிலிப்-ந் அருகே ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ என்ற சிறிய வீட்டில் தங்கினார், அப்போது இதனறுகில் வேறு எந்த வீடும் இல்லை.
தேக்கு மரங்கள் நடவுவதில் தோல்வி
1885-1915, காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய லூசிங்டன்(Lushington),பிஷார் (Fischer), கேப்டன். டக்லஸ் கோமில்டன் (Douglas Hamilton), போன்ற பல அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் தேக்கு மரங்களை நடவு செய்து தோல்வியடந்தனர்.
இதன் காரணங்கள் பற்றி ஆய்வு செய்த “ஹியூகோ வுட்”. மலைப்பகுதிகளில் அதிகமாக இருந்த “லேண்டனா” எனற ஒட்டுண்னிச்செடிகளை அழித்துவிட்டு, பிறகு அந்த இடங்களில் தேக்கு மரங்களை விதைக்க தயாரானார் ( இந்த ஓட்டுன்னிச்செடிகளும் மரங்களிலன் வேரில் உள்ள சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும்.).
ஹியூகோ வுட்’ன் திட்டம்
1916-17-ம் ஆண்டில், 25-ஏக்கர் பரப்பளவில் துவங்கிய ஹியூகோ வுட்-ன் இத்திட்டம் 1937-வரை தொடர்ந்து. இதனால், தோராயமாக 650-சதுர கிலோ மீட்டார் பரப்பளவில் தேக்குமரங்கள் நட்டு வளர்த்து சாதனை படத்த்டார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் காடுகளை நேசித்த இவர், வேலை போக, மீதம் கிடைக்கும் நேரத்தில் தனியாக காடுகளில் நடந்து, தன் கால் ட்ரவுசர் மற்றும் சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை,
ஹியூகோ வுட்’ன் இறுதி ஆசை
பின்னர் நீலகிரி மாவட்டத்டிற்கு வனப்பதுகாவலராகச் சென்று, அங்கும் தனது மரம் நடும் வேலையை தொடர்ந்தார். சூன் 12, 1870 ல் பிறந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் குன்னூரில் வசித்தார், உடல் நிலை குறைவின் காரணமாக தனது 63-ம் வயதில் 12.12.1933 அன்று, இவர் உடல் இந்த மண்னை விட்டு பிறிந்தது.
டிசம்பர் 13, 1933 அன்று, முதல் மோட்டார் வாகனமானது ஆனை மலையின் டாப் ஸ்லிப்பிற்கு சென்றது, ஹூகோ வூட்டின் உடலை சுமந்துகொண்டு ஒரு சிறிய லாரியும் இதன் பின் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் 11 கார்களும் தொடர்ந்து வந்தது.
முதன்முறையாக இந்த மோட்டார் வாகனங்கள் தான் டாப்சிலிப் மலை மீது ஏறிய வாகனங்கள் ஆகும்.
மறைவுக்கு முன் 24.10.1933-ல், மெட்ராஸ் ரீஜென்சி முதன்மை வன பதுகாவலருக்கு தான் எழுதிய உயில், அவர் “நான் மிகவும் விரும்பிய ஆனைமலைக் காட்டில் தான் வசித்த,வந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” வீட்டுக்கு அருகே அடர்ந்த தேக்கு மரங்களுக்கு நடுவில் என் உடலைப் புதைக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
ஹியூகோ வுட் கல்லறை

அதுமட்ட்மில் இல்லாமல், இவரது கல்லறை அமைக்கவும் அதை பராமரிக்கவும் ஒரு தொகையையும் அவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இனவே, ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ வீட்டுக்கு அருகில், இவரால் உருவாக்கப்பட்ட தேக்கு மரங்களுக்கு இடையே இவர் உடல் புதைக்கப்பட்டது.
அவரது கல்லறை மீது பொறிக்கப்பட்டுள்ள, “Si monumentum requiris circumspice”, என்ற லத்தின் வார்த்தைக்கு “என்னைக் பார்க்க விரும்பினால், சுற்றிலும் பாருங்கள்” என பொருள்.
இங்குவுள்ள மலைகிராம மக்கள் இவரை தெய்வமாக போற்றுகின்றனர். நம் நாட்டுக்கு இவரை போல் இன்னும் 1000 “ஹியூகோ வுட்” வேண்டும். அந்த அளவுக்கு இன்று காடுகள் இங்கு அழிக்கப்படுகின்றது.
Hugo Wood
Hugo Wood: This Forgotten Scotsman Is The Reason Why The Anamalai Hills Are Still Lush With Trees
இதையும் பார்க்க: