Finance bill என்றால் என்ன..? இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..?

Fiscal year
இதை தமிழில் நிதி ஆண்டு எனச் சொல்வோம். இந்தியாவைப் பொருத்த வரை ஒரு நிதி ஆண்டு என்பது ஒரு ஆண்டின் ஏப்ரல் 01-ம் தேதி முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதி வரை என நிர்ணயித்து இருக்கிறார்கள். உதாரணம்: 01 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2020 வரை ஒரு நிதி ஆண்டு. இதைத் தான் 2019 – 20 நிதி ஆண்டு என்கிறோம்.

Annual Financial Statement
நாம் சகஜமாக பட்ஜெட் டாக்குமெண்ட்களை “யூனியன் பட்ஜெட்” அல்லது “பட்ஜெட்” என அழைக்கிறோம். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112-வது பிரிவின் படி, பட்ஜெட் டாக்குமெண்ட்களை Annual Financial Statement என்று தான் அழைக்க வேண்டும். இந்த Annual Financial Statement-ல் அடுத்த நிதி ஆண்டில் வர இருக்கும் வருவாய்கள் மற்றும் செலவுகளை மதிப்பிட்டு இருப்பார்கள். இதைத் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.

Finance Bill
இந்தியாவில் பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வந்தால், அது வெறும் அறிவிப்பு தான். அந்த அறிவிப்பு சட்டமாக வேண்டும் என்றால், அதற்கு நிதிச் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்.
உதாரணம்: இனி 2.5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என ஒரு பட்ஜெட் அறிவிப்பு வருகிறது என்றால், அதை முறையாக நிதிச் சட்டத்தில் கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும். அப்போது தான் அது சட்டமாகும். அது சட்டமானால் தான் மக்கள் அதில் இருந்து பயன் பெற முடியும்.

Appropriation Bill
அரசுக்கு தேவையான பணத்தை அரசாங்க கஜானாவில் இருந்து பெற வழி வகை செய்யும் சட்டம் இது. இந்த Appropriation Bill முறையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் தான், அரசாங்கத்துக்கு, அரசு கஜானாவில் இருந்து பணம் கிடைக்கும்.

Consolidated Fund
அரசாங்கம் வசூலிக்கும் மொத்த வருவாய்கள் மற்றும் அரசு வாங்கும் கடன் தொகை எல்லாமே இந்த Consolidated Fund-ல் தான் வந்து சேரும். பட்ஜெட்டில் திட்டமிட்ட படி செலவுகள் வந்தால், அதற்கு இந்த பணத்தைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த Consolidated Fund-ல் இருந்து பணத்தை எடுக்க, பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும்.

Contingency Fund
இந்த Contingency Fund ஒரு அவசர கால நிதி போல செயல்படும். இந்த Contingency Fund-ஐ இந்திய குடியரசுத் தலைவர் தான் வழங்க முடியும். இந்த Contingency Fund-ல் இருந்து ஏதாவது செலவழிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும். இந்த Contingency Fund-ல் இருந்து செலவழிக்கும் பணத்துக்கு மேலே சொன்ன Consolidated Fund-ல் இருந்து பணத்தை ரீ ஃபண்ட் செய்து விடுவார்களாம்.

Public Account
மத்திய அரசு ஒரு வங்கியைப் போல, மக்களிடம் இருந்து பணம் வாங்குவது, பணம் போட்ட மக்களுக்கு தேவையான போது பணத்தைக் கொடுப்பது போன்ற சேவைகளை வழங்கும் எல்லாமே Public Account என்று சொல்லலாம். உதாரணம் Provident fund deposits மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்கள்.
Finance bill என்றால் என்ன..? இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..?
VIew Source Page
Tags: Rood Returns