தொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்

Doddabetta | தொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ளது.. இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும்.

thottapetta

தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது. இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம்.

 

தொட்டபெட்டா

தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து பார்த்தால் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களைக் காணலாம். இவற்றை பார்ப்பதற்கு தொட்டபெட்டா மலை பகுதியில் தொலைநோக்கு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா மலைச் சிகரட்தின் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் – குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு. இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 4000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குதான் உதகமண்டலம்.

சிறப்பு பேருந்து

உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 5 கி.மீ. சென்றால் தொட்டபெட்டாவுக்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்தப் பகுதியிலிருந்து 3 கி.மீ. தூர சாலை குறுகியதாகும். இதில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லலாம். பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பேருந்துகள் செல்லமுடியாது. இதனையறியாமல், பெரிய அளவிலான பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, சீசன் காலங்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலாப் பேருந்து இயக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு காணப்படுவதால், வனத்துறையின் சார்பில் வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூ. 30 வசூலிக்கப்படுகிறது.

பார்க்கிங் கட்டணம்

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம், தற்போது சுற்றுலாத்துறை பராமரிப்பில் உள்ளது. நுழைவு கட்டணமாக 5 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ரூ. 7 வசூலிக்கப்படுகிறது. கேமிராவுக்கு ரூ. 50-ம், வீடியோ கேமிராவிற்கு ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொட்டபெட்டா பகுதியில் வாகனங்களை பார்கிங் செய்வதற்கு மினி வேனுக்கு வாகனத்திற்கு ரூ. 40-ம், கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு ரூ. 20-ம் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வரலாறு

thamizh DNA

அமைவிடம்

ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது. உயரம் : 2,637 மீட்டர். நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு

தோட்டி மலை

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம் (தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ஆகும்). தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. கோட்டையுடன் விளங்கிய இதனைச் சங்ககாலச் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை வென்று தனாக்கிக்கொண்டான். யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. நள்ளி இந்த மலையின் அரசன். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். இந்த நள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோ ஈரமானது கண்டுகண்டாக இருக்கும் இருக்கும் இடம் இது ஆகையால் நீலகிரி அக்காலத்தில் கண்டீர மலை எனப்பட்டது.

நளிமலை

நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. ‘நளிமலை’ என்னும் பெயரிலுள்ள ‘நளி’ என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். நளி என்னும் சொல் பெருமை, செறிவு  என்னும் பொருள்களை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது.

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.

 [content-egg module=Youtube]

4 Comments
 1. Thanks for sharing this information.Have shared this link with others keep posting such information..

 2. Thanks for sharing this information.have shared this link with others keep posting such information..

 3. Thanks for sharing this information..have shared this link with others keep posting such information..

 4. Thanks for sharing this information.

  உங்கள் கருத்தை இடுக...

  வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

  Register New Account
  Reset Password
  %d bloggers like this:
  lida viagra fiyat cialis sipariş escort bayan