காப்பீடு என்றால் என்ன..? காப்பீடு வகைகள் என்னென்ன..?

காப்பீடு வகைகள்

காப்பீடு என்றால் என்ன..? காப்பீடு வகைகள் என்னென்ன..? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வங்க..

 

ஆயுள் காப்பீட்டு

ஆயுள் காப்பீட்டு

திருமணமான ஒரு ஜோடிக்குச் சிறு வயது குழந்தைகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்பொழுது, அந்தக் குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் நபர் திடீரெனக் காலமாகிவிட்டார் மற்றும் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள், அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை எனில், அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி விடும். அப்பொழுது காப்பீடு அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும். காப்பீட்டின் பாதுகாப்பை பெற, ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிரிமீயமாகச் செலுத்த வேண்டும். ஆபத்துக் காலங்களில், அதாவது காப்பீடு உயிருடன் இருக்கும் காலங்களில், காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்து விட்டால், காப்பீடு செய்யப்பட்ட தொகை (திட்டத் தொகை), காப்பீடு செய்யப்பட்ட நபருடைய குடும்பத்திற்கு மொத்தமாகக் கிடைக்கும். இது மிகவும் எளிய வகையிலான காப்பீடாகக் கருதப்படுகின்றது. இது டேர்ம் பிளான் என அழைக்கப்படுகின்றது.

ஆயுள் காப்பீடு | Life Insurance Complete Guide

அ) பல முறை காப்பீட்டு நிறுவனம் பிரீமியம் தொகையை அதிகரித்து, அதில் ஏற்படும் வித்தியாசத்தை உங்கள் சார்பாக வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்யும். அந்த முதலீட்டின் காரணமாக வரும் வருமானத்தில் இருந்து முதலீடு செய்யத் தேவைப்படும் செலவுகள் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது (மணி பேக்) அல்லது மொத்தமாக (டேர்ம் பிளான்) திருப்பி அளிக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய உத்தரவாதத் தொகையை அளிப்பதை நடைமுறையாகப் பின்பற்றுகின்றனர். முதலீட்டின் காரணமாகக் கிடைக்கும் வருமானம் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முதலீடு மூலம் ஏற்படும் செலவுகள் போன்றவற்றைப் பொருத்து, காப்பீட்டாளருக்கு திரும்ப அளிக்கப்படும் தொகை முடிவு செய்யப்படுகின்றது.

ஆயுள் காப்பீடு பற்றி விரிவாக பார்க்க 

பரஸ்பர நிதியில் முதலீடு

பரஸ்பர நிதியில் முதலீடு

வித்தியாசத்தொகை காப்பீடு நிறுவனத்தினால் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டது எனில் அந்த வகைக் காப்பீடு யூலிப் வகைக் காப்பீடு என அழைக்கப்படும். இந்த வகைக் காப்பீட்டில், திரும்பக்கிடைக்கும் தொகைக்கு எந்த வித உத்திரவாதமும் கிடையாது. சந்தை நிலவரத்தைப் பொருத்து, ஒருவருக்குத் திரும்பக் கிடைக்கும் தொகை முடிவு செய்யப்படும். இந்த வகைக் காப்பீட்டில், காப்பீடு சந்தை நிலவரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய மனிதன் காப்பீடு

முக்கிய மனிதன் காப்பீடு

இந்த வகைக் காப்பீடு பொதுவாக ஒரு நிறுவனத்தின் முக்கிய மனிதர், அதாவது மேலாளர் அல்லது நிர்வாகியின் எதிர்பாராத மரணத்தை ஈடுகட்ட அந்த நிறுவனத்தினால் எடுக்கப்படும் காப்பீடு ஆகும்.

சுகாதாரக் காப்பீடு

சுகாதாரக் காப்பீடு

மெடிக்ளெய்ம் அல்லது மருத்துவமனை செலவுகள் ஈடு கட்டும் பாலிசியானது, ஒருவர் நோய் அல்லது விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவமனை செலவுகளை ஈடு கட்ட உதவும் காப்பீடாகும். இது இந்தியாவில் மட்டுமே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டும் செல்லுபடியாகும்.

தீவிர நோய் காப்பீடு

தீவிர நோய் காப்பீடு

உங்களுக்கு மிகவும் தீவிரமான நோயினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட உதவும் காப்பீடாகும். உதாரணமாகப் பக்கவாதம், உறுப்புத் தோல்வி, புற்றுநோய், போன்ற நோயினால் உங்களுக்கு ஏற்படும் இழப்பை இது ஈடுகட்டும். இந்தத் திட்டத்தில் நீங்கள் காப்பீடு செய்த தொகை, உங்களுடைய நோய் சிகிச்சை செலவு ஏதுவாக இருந்தாலும், அப்படியே முழுவதுமாக அளிக்கப்படும். பொதுவாக இந்தத் திட்டத்தில், உங்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி உங்களுடைய எதிர்காலத்தை முடக்கிப் போடும் நோய்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் ஒரு பெரிய தொகையினால் கிடைக்கும் வட்டி வருவாய் உங்களுடைய எதிர்காலத்திற்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினசரி பணக் கொடுப்பனவு திட்டம்

தினசரி பணக் கொடுப்பனவு திட்டம்

இந்தத் திட்டம் நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட அளவு பணம் கொடுக்கும். உங்களுக்கு இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பணம் உண்மையில் உங்களுக்கு ஏற்படும் செலவை சார்ந்ததல்ல. இந்தத் திட்டம் உங்களுக்கு மருத்துவமனையில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளான போக்குவரத்துச் செலவு, உதவியாளர் செலவு, உங்களுடைய ஊதிய இழப்பு போன்றவற்றை ஈடுகட்டுகின்றது. பொதுவாக இந்த வகைச் செலவுகள் உங்களுடைய மெடிக்ளெய்ம் திட்டத்தில் அடங்காது.

வெளிநாட்டுப் பயணத் திட்டம்

வெளிநாட்டுப் பயணத் திட்டம்

இந்தத் திட்டம் பொதுவாக நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவமனை செலவினங்களை ஈடு கட்டும். இதில் பாஸ்போர்ட் அல்லது சாமான்கள் இழப்பு, விமானத் தாமதம், உறவினர்கள் அல்லது பயணிகளுக்கு ஏற்படும் சுகவீனம் காரணமாகப் பயண ரத்து போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளையும் இதில் சேர்க்கலாம்.

கார் காப்பீடு உங்கள் கார் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட இந்தத் திட்டம் உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. இது மூன்றாம் தரப்புக் கார் பாலிசி என அழைக்கப்படுகின்றது. உங்களுடைய காரை சாலையில் செலுத்தும் முன்னர் இந்தக் காப்பீடு உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும். ஒரு பொதுவான கார் காப்பீடு திட்டம் என்பது விபத்தால் கார் ஏற்படுத்தும் சேதம், காருக்கு ஏற்படும் சேதம், திருட்டுக் காரணமாக எழும் இழப்பு போன்றவற்றை ஈடு செய்யும். மேலும் வேறு டிரைவர், உடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்படும் இழப்பு, விபத்தின் காரணமாகக் காரை மாற்றிக் கொள்ள உதவும் பல்வேறு திட்டங்களையும் இதில் சேர்க்க இயலும்.

வீடு மதிப்புத் திட்டம்

வீடு மதிப்புத் திட்டம்

இந்தத் திட்டம் பொதுவாகத் தீ, வெள்ளம், பூகம்பம், மின்னல், முதலியனவற்றினால் உங்களுடைய வீடு, சொத்துக்கள், தளபாடங்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்களுக்கு இழப்பை ஈடுகட்டும். இந்தத் திட்டத்தில் திருட்டு, கொள்ளை, திடீர் மின் அழுத்தம் காரணமாக மின் உபகரணங்களுக்கு ஏற்படும் இழப்பையும் இதில் சேர்த்துக் கொள்ள இயலும்.

காப்பீடு என்றால் என்ன..? காப்பீட்டில் உள்ள வகைகள் என்னென்ன..?

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password