2019-2020: கொரோனா தீநுண்மி கால கோடு

கொரோனா தீநுண்மி கால கோடு 2019-2020

கொரோனா தீநுண்மி கால கோடு: டிசம்பர் 31 முதல் இன்று வரை கொரோனா தீநுண்மியினால் ஏற்படும் விளைவுகள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளது.

 • டிசம்பர் 31- 2019:

ஒரு கோடி  மக்களுக்கு மேல் வசிக்கும் சீனாவின் வூகன் (Wuhan) மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையத்திற்கு(WHO) சீனா தகவல் கொடுத்து எச்சரித்தது.

 • ஜனவரி 1- 2020 :

வூகன்-ல் உள்ள கடல் உயிர்கள் விற்கப்படும் இறைச்சி சந்தையில் 40-க்கும்   மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது எனவே அந்த சந்தை மூடப்பட்டது. (ஆனால் எந்த வகை வைரஸ் என கண்டுபிடிக்கப்படவில்லை).

 • ஜனவரி 3:

இந்த வைரசு காய்ச்சலை தொடர்ந்து வுஹான் விமான நிலையத்திலிருந்து சாங்கி(Changi) விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் வெப்பநிலை பரிசோதனை மூலம் நிறுத்தப்பட்டனர்.

 •  ஜனவரி 5: 

சீனாவின் அதிகாரிகள் இது ஒருவேளை 2002-2003 இல் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் மீண்டும் வந்திருப்பதாக கருதினார்கள்.  (அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் இந்த சார்ஸ் வைரசினால் 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

 • ஜனவரி 7:

சீனா மற்றும் உலக சுகாதார மையத்தின் உதவியுடன் இந்த வைரஸ் ஆனது சார்ஸ் அல்ல என்றும் இது புது வகையான வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள் . இதற்கு கொரோனா நாவல் வைரஸ் என பெயரிட்டார்கள்.

 • ஜனவரி 11:

முதல் மரணம் 

இந்த வைரசினால்  61  வயதுடைய  ஆண் ஜனவரி 9 மாலையில் இறந்ததாக சீனா  அரசு முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்தது இவர் வூகன் (Wuhan) மகாணத்தில் வாசிப்பவர். 

 • ஜனவரி 13:

உலக சுகாதார மையம் (WHO) தாய்லாந்திலிருந்து ஒரு பெண்ணுக்கு இதே வைரஸ் பாதிப்பு இருப்பதாக  கண்டறிந்தது. இந்த பெண்மணி சமீபத்தில் வூகன் (Wuhan) மாகாணத்தில் இருந்து வந்தவர் என கண்டறியப்பட்டது.

 •  ஜனவரி 16:

ஜப்பானின் சுகாதாரத்துறை ஜப்பானின் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல்  இருப்பதை உறுதி செய்தது. இவரும் வூகன் (Wuhan) வாகனத்திலிருந்து சமீபத்தில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • ஜனவரி 17:

வூகன் (Wuhan) மாகாணத்தில் இதே வைரசினால் இரண்டாவது ஒரு நபர் உயிரிழந்தார் அடுத்த ஒரு சில தினங்களில் இந்த வைரஸ் மேலும் சில நாடுகளுக்கு பரவியது. (நேபால், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம், தைவான் மேலும் அமெரிக்கா) இந்த நாடுகளில் ஒரு சிலருக்கு இந்த வைரஸின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  எனவே ஆசிய நாடுகளும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியது.

 • ஜனவரி 20:

முதல் தொற்று தென் கொரியாவில் கண்டறியப்பட்டது. இந்த வரசினால் ஏற்பட்ட மூன்றாவது மரணத்தை சீனா அறிவித்தது.  சீனாவின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.

 • ஜனவரி 21:

முதல் கொரோனா வைரஸ் வழக்கை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவன (NIH) விஞ்ஞானிகள் ஏற்கனவே புதிய, கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கத் தொடங்கினர்.

 • ஜனவரி 22:

இந்தக்  வைரஸினால் மேலும் 17 பேர் இறந்தார்கள் 500 அதிகமான நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் வுஹானிலிருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய தொடங்கின. 

கொரோனா வைரஸை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க WHO அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி விவதிதார்கள், அதன் முடிவாக இன்னும் சிறுது காத்திருக்க முடிவு செய்தனர்.

 •  ஜனவரி 23:

வூகன் மாநகரம் சைனாவின் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டது அனைத்து விமான மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது அங்கு இருந்த ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வெளிவர முடியாமல் திண்டாடினார்கள்.  பெய்ஜிங் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தது. 

முதல் அமெரிக்க கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் ரோபோவைப் பயன்படுத்தினர்.

 • ஜனவரி 24:

சீனாவில் இந்த வைரஸினால் இறப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது, 830 க்கு  அதிகமானோர் இந்த கொரோனா தீநுண்மியினால் பாதிக்கப் பட்டார்கள். மேலும் 13 நகரங்கள் சீனாவின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டது அங்கிருந்த போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டது இந்த நகரங்களில் மொத்தம் 4 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர் மேலும் சீனப் பெருஞ் சுவரின் ஒரு பகுதி மூடப்பட்டது.

ஒரு புதிய தற்காலிக 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை சீன அதிகாரிகள் தொடங்கினர்.

 • ஜனவரி 25:

சீனப்புத்தாண்டு:

 சீனாவின் மிகப்பெரிய திருவிழா  கொண்டாட்டமான சந்திர புத்தாண்டு வருட வருடம் மிக விமர்சையாக கொண்டாடப்படும், கோடிக்கணக்கானோர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வர் ஆனால் இந்த ஆண்டு (2020) கொரோனா தீநுண்மியினால் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் முழுவதுமாக தடைசெய்யப்பட்டது. 

மேலும் 5 நகரங்கள் சீனாவின் பிற பகுதியிலிருந்து போக்குவரத்து,  விமான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் சீனாவில் மொத்தம் 6 கோடிக்கு அதிகமான மக்கள்  உலகின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த வைரசின் தாக்கம் காரணமாக. 

ஹாங்காங்  சீனாவிடமிருந்து தனியாக  துண்டித்துக் கொண்டது, ஹாங்காங் சீனாவிற்கும் இடையே போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

சுகாதார அவசரத்தை ஹாங்காங் அறிவிதத்து.  மேலும் கனடா, நேபாளம் முதல் வழக்குகளை பதிவு செய்கின்றன.

 • ஜனவரி 26:

இறப்பு எண்ணிக்கை 56.  மேலும் 2,000 க்கு  அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டார்கள். 

வுஹானுக்கும் சான் பிரான்சிஸ்கோவிற்கும் இடையில் ஒரு சிறப்பு விமானத்தை அமெரிக்க அரசாங்கம் ஜனவரி 28 அன்று இயக்கும் , அன்று அனைத்து அமெரிக்க குடிமக்களையும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வெளியேற்றுவதாக அறிவித்துதது.  மெக்ஸிகோ தனது முதல் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனா வைரஸ் குறித்த தனது முந்தைய அறிக்கையைத் திருத்தியது, இந்த வைரசினால் உலகளாவிய ஆபத்து “அதிகமானது” என்று கூறியது.

 • ஜனவரி 27:

முதல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை இலங்கை தெரிவித்தது.

 • ஜனவரி 28:  

இறப்பு எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது, 4,600-க்கு  அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டார்கள். சீனாவில் பள்ளி கல்லூரிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இயற்கை, பாரம்பரிய மருந்துகளின் பயன்பாட்டை சீன ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சீன நாட்டினருக்கான வருகையை இலங்கை நிறுத்தியது.

ஜப்பான் தனது குடிமக்களை வெளியேற்ற வுஹானுக்கு ஒரு விமானத்தை அனுப்பியாது.

 • ஜனவரி 29:

சீனா 132 இறப்புகளையும் 1,459 புதிய வழக்குகள் உட்பட மொத்தம் 5,974 நோய்த்தொற்று வழக்குகளையும் உறுதிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் குறைந்தது 86 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரே சீன குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, வுஹானில் இருந்து 250 குடிமக்களை விமானத்தில் அனுப்ப, இன்று இரவு விமானத்தை அனுப்ப உள்ளது. வுஹானில் இருந்து அமெரிக்கா நாட்டினரை அமெரிக்க விமானம் மூலம் வெளியேற்றுகிறது.

 • ஜனவரி 30:

இந்தியாவில் முதல் பாதிப்பு 

இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தங்களது முதல் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளன, இத்தாலி இரண்டு வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது.

முதலில் சந்தேகிக்கப்படும் வழக்கை ரஷ்யா தெரிவித்துள்ளது, சீனாவுடனான 4500 km எல்லையை உடனடியாக மூடுவதற்கான உத்தரவில் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கையெழுத்திட்டார்.

ஜனவரி 29 இன் பிற்பகுதியில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 170 ஐ எட்டியுள்ளது, மொத்தம் 7,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 7,678 பேர்  சீனர்கள்.

சீனா உட்பட இதுவரை பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 23 ஆகும்.

 • ஜனவரி 31:

WHO உலகளாவிய அவசரநிலையை அறிவித்தது

வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஐத் தொட்டுள்ளது மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 9,776 ஆக அதிகரித்துள்ளது. ங்கோலியாவும் சிங்கப்பூரும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த சீனாவுக்கான எல்லைகளை மூடின.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart