ஆயுள் காப்பீடு செய்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 முக்கிய பணிகள்!

ஆயுள் காப்பீடு செய்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 முக்கிய பணிகள்!

ஆயுள் காப்பீடு செய்துள்ள ஒருவர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்காமல் விரைவில் ஆயுள் காப்பீட்டு நிதியை பெற 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஆயுள் காப்பீடு செய்யும் நபர் பொதுவான தனது இறப்பிற்கு பிறகு தன்னை சார்ந்துள்ள குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ள கூடாது என்பதை கருத்தில் கொண்டே இத்திட்டத்தில் முதலீடு செய்கிறார்.

இந்த நிலையில் ஆயுள் காப்பீடு செய்த நபர் திடீரென இறந்தால், அவர் முதலீடு செய்துள்ள நிதியை பெறுவதற்கு 5 முக்கிய படிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு தொகை விரைவில் கிடைத்து, குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் சிக்குவதை தவிர்க்கலாம்.

தகவல்:

ஆயுள் காப்பீடு செய்துள்ள ஒருவர் இறந்தால், அவர் முதலீடு செய்துள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த தகவலை தெரிவிக்க காலம் தாமதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இறந்தவர் குறித்த தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவிக்க காலதாமதமானால், இது குறித்து விசாரணை நடத்திய பிறகே காப்பீட்டு தொகை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏஜென்ட்டை தொடர் கொள்ளுதல்:

நிதி நிறுவனத்தின் ஏஜென்ட்டை உடனடியாக சந்தித்து, இறப்பு உறுதி படிவத்தை பெற வேண்டும். ஆயுள் காப்பீடு செய்யும் ஒரு நபர் குறித்தும், அவரது காப்பீட்டு தொகை திரும்ப பெற, செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஏஜென்ட்கள் தெளிவாக அறிந்து இருப்பார். ஏஜென்ட்கள் குறித்து தெரியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

உரிமை கொண்ட நபர்:

ஆயுள் காப்பீட்டு தொகையை பெற காப்பீட்டு படிவத்தில் யாருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதோ, அவர் தான் காப்பீட்டு நிதியை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். ஆயுள் காப்பீட்டு செய்துள்ள நபர் தனது படிவத்தில் குறிப்பிட்ட நபர் அல்லது அவரது சட்டப்பூர்வமான வாரீசு, காப்பீட்டு நிதியை பெற முடியும்.

சீரான ஆவணங்கள்:

காப்பீட்டு தொகை பெறுவதற்காக அளிக்கப்படும் ஆவணங்கள் தெளிவாக இருந்தால் மட்டும், காப்பீட்டு தொகையை விரைவில் பெற முடியும். ஆயுள் காப்பீட்டு தொகை பெறுவதற்காக அளிக்கப்படும் படிவத்துடன், காப்பீடு செய்தவரின் இறப்பு சான்றிதழ், பாலிசி ஆவணம், கடைசி பிரிமியம் கட்டிய ரசீது, காப்பீட்டு தொகையை பெறும் நபரின் அடையாள அட்டை, வயது சான்றிதழ் ஆகியவை சமர்க்க வேண்டும்.

வங்கி கணக்கு:

காப்பீட்டுத் தொகை பெற தகுதியுள்ள நபரின் வங்கி கணக்கு, நிதியை பரிமாற்றம் செய்ய தயாராக இருக்க வேண்டும். வங்கி கணக்கு உள்ளவரின் பெயர், முகவரி போன்றவை, காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் மாற்றம் இருந்தால், காப்பீட்டு தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட கூட வாய்ப்புள்ளது.

ஆயுள் காப்பீட்டு தொகை பெற மேற்கண்ட 5 படிகள் பின்பற்றப்பட்டால், காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கலாம்.

 

ஆயுள் காப்பீடு செய்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 முக்கிய பணிகள்!

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password