கார் காப்பீடு திட்டம் | Car Insurance Complete Guide

கார் காப்பீடு திட்டம்

கார் இன்சூரன்ஸ் என்பது விபத்து, திருட்டு, தீ, வெடிப்பு, இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு/சேதத்திற்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குவதே ஆகும். இது இன்சூரன்ஸ் செய்தவர் தரப்பில் இருந்து மூன்றாம் தரப்பு தனிநபருக்கு/அவரின் சொத்துக்கு ஏற்படும் சேதங்களின் காரணமாக ஏற்படும் நிதிக்கான பொறுப்பை கவனித்துக் கொள்கிறது.

கார் காப்பீடு திட்டம் முக்கியத்துவம்

இந்திய அளவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 54 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. வாகனத்தைப் பழுதுபார்க்கும் செலவு அதிகமாக இருந்தால் மற்றும் சரியான நேரத்தில் அதைச் செய்ய முடியாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? சேதங்களுக்கு யார் பொறுப்பு ? எனும் பட்சத்தில் அந்த வேலையை ஒரு பயனுள்ள கார் இன்சூரன்ஸ் பாலிசியானது செய்யும். பாலிசிதாரர் தங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து உதவி கேட்கலாம் மற்றும் சரியான நேரத்தில் வாகனத்தைப் பழுதுபார்க்கவும் முடியும். மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பொறுப்பு சார்ந்த விஷயத்தில், இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காமல் அதன் பின்விளைவுகளைச் சமாளிப்பார்கள்.

1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மூலம் அதன் முக்கியத்துவத்தை இந்திய அரசாங்கமும் வலியுறுத்துகிறது. இந்தச் சட்டம் குறைந்தது கார் உரிமையாளர்கள் மூன்றாம் தரப்பு (தர்டு பார்டி) கார் இன்சூரன்ஸைக் வைத்திருக்க வேண்டியதைக் கட்டாயமாக்குகிறது.

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

மூன்றாம் தரப்பினர் பொறுப்பு திட்டம்

இது மூன்றாம் தரப்பு தனிநபருக்கு / அவரின் சொத்துக்கு ஏற்படும் சேதங்களை மட்டுமே உள்ளடக்கும். பாலிசிதாரருக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.

மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு மேற்கோள் ஒரு சில கூறுகளின் கலவையாகும் :

 • மூன்றாம் தரப்பு பிரீமியம்.
 • தனிப்பட்ட விபத்து உரிமையாளர்-டிரைவர் கவருக்கானப் பிரீமியம்.
 • சரக்கு மற்றும் சேவை வரி

விரிவானத் திட்டம்

இது மூன்றாம் தரப்பு பொறுப்புத் திட்டங்களின் ” பிக் பிரதர் ” என்றும் அழைக்கப்படுகிறது. ஏன் எனக் கேட்பீர்கள். இதில், மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்களை ஈடுசெய்வதை மட்டுமல்லாமல், விரிவான திட்டங்கள் பாலிசிதாரரின் நலனையும் கவனிக்கும்.

விரிவான கவருக்கான மேற்கோள் பின்வரும் கூறுகளின் கூட்டுத்தொகையாகும்: –

 • மூன்றாம் தரப்பு பிரீமியம் மற்றும் சொந்த சேதம் பிரீமியம்.
 • தனிப்பட்ட விபத்து உரிமையாளர்-டிரைவர் கவருக்கான பிரீமியம்.
 • சரக்கு மற்றும் சேவை வரியுடன் கூடுதல் கவரேஜ் (கூடுதல் இணைப்புகள்).

 

கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பதின் நன்மைகள் என்ன?

சொந்த மற்றும் மூன்றாம் தரப்பு சேதங்களுக்கான பாதுகாப்பைத் தவிர, கார் இன்சூரன்ஸ் ஆனது பிற நன்மைகளையும் வழங்குகிறது. உங்களின் புரிதலுக்காக அவற்றை கீழேப் பட்டியலிடப்பட்டுள்ளன.

நோ க்ளைம் போனஸ் 

முந்தைய ஆண்டுகளில் க்ளைம் கோரிக்கையைப் பயன்படுத்தாத பாலிசிதாரருக்கு வழங்கப்படும் தள்ளுபடியே நோ க்ளைம் போனஸ் ஆகும். பாலிசியைப் புதுப்பிக்கும் நேரத்தில் இந்த தள்ளுபடியானது 5-50% வரை கிடைக்கும்.

கூடுதல் கவர்கள்

அடிப்படை கவரைத் தவிர, நீங்கள் பரந்த பாதுகாப்புக்குப் பல கூடுதல் கவரைத் தேர்வு செய்யலாம், ஆனால் அவை ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபடும். அவை பற்றிய சுருக்கமான விளக்கம் கட்டுரையின் பிற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பணமில்லா கேரேஜ்கள்

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நெட்வொர்க் கேரேஜ்களில் வாகனத்தின் பழுதுபார்ப்புகளை நீங்கள் செய்துக் கொள்ளலாம். அதன் நன்மை என்னவென்றால் ? நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த பில்கள் ஆனது உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தீர்க்கப்படும்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது உங்கள் பாலிசியை செயலில் வைத்திருக்க நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். இது வழக்கமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கும் மற்றும் ஒரு மாடலில் இருந்து மற்றொரு மாடலுக்கும் மாறுபடும். கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் கணக்கிட, நீங்கள் கீழே குறிப்பிட்ட ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.

பிரீமியம்: சொந்த சேத பிரீமியம் – (நோ க்ளைம் போனஸ் + தள்ளுபடிகள்) + ஐ.ஆர்.டி.ஏ மூலம் நிர்ணயிக்கப்பட்ட பொறுப்பு பிரீமியம் + கூடுதல் இணைப்புகள்.

கீழே குறிப்பிடப்பட்ட காரணிகளின் அடிப்படையில், நிறுவனமானது கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தைத் தீர்மானிக்கிறது.

வாகனத்தின் உற்பத்தி ஆண்டு: இது காரின் வயதைத் தீர்மானிக்கிறது. பழைய வாகனங்கள் குறிப்பாக புதிய வாகனங்களை விட குறைந்த இன்சூரன்ஸ் விகிதங்களைக் கொண்டுள்ளன.

வாகனத்தைப் பதிவு செய்த இடம்: உங்கள் குடியிருப்பு இடம் மற்றும் உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட இடம் ஆகியவை கார் இன்சூரன்ஸ் பிரீமியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, உங்களின் முகவரி மற்றும் வாகனப் பதிவு செய்த இடம் பெரு நகரம் அல்லது கிராமமாக இருந்தால் வேறுபாடு இருக்கும்.

வாகனத்தின் மாடல்: வாகனத்தின் உயர்ந்த விலை அல்லது அசாதாரண உதிரி பாகங்கள் இருந்தால், காரின் உயர் வகுப்பினருக்கான கவரேஜும் அதிகமாக இருக்கலாம்.

வாகனத்தின் பயன்பாடு: கார் இன்சூரன்ஸ் வழங்குபவர்கள் தனிப்பட்ட மற்றும் வணிக கவரேஜ் விதிகளை வழங்குகிறார்கள். ஒரு வாகனம் வணிகச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது அதிக கவரேஜ் விகிதங்களை ஈர்க்கும்.

பாதுகாப்பு சாதனங்கள்: இன்று, பெரும்பாலான வாகனங்கள் பாதுகாப்பு திறன்கள் மற்றும் திருட்டு எதிர்ப்பு சாதனங்கள் (ஆன்டி தேஃப்ட் டிவைஸ்) உடன் தயாராக உள்ளன. அதற்காக 2.5% வரை (உங்கள் வாகனம் பாதுகாப்பாக இருந்தால்) பிரீமியத்தில் தள்ளுபடி பெற நீங்கள் தகுதியுடையவர்கள். மேலும், பொருத்தும் சாதனங்களை ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.

க்ளைம் பதிவுகள்: உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸிற்கு எதிராக நீங்கள் க்ளைம் செய்து இருந்தால், பிரீமியம் தலைகீழாக இருக்கும். நீங்கள் க்ளைம் தாக்கல் எழுப்புவதைத் தவிர்த்தால், உங்களுக்கு நோ க்ளைம் போனஸ் (என்சிபி) வழங்கப்படும்.

மேலே உள்ள காரணிகளின் உதவியை வைத்து ஒரு நடைமுறை உதாரணத்தைக் காண்பிப்போம்.

 • 15-07-2020 – ல் அட்டவணை தரவு புதுப்பிக்கப்பட்டது
 

கார் வகை 

 

 

காரின் விலை

 

 

ஐடிவி *

 

 

பூஜ்ஜிய தேய்மானம் (கூடுதல் இணைப்பு) *

 

 

பிரீமியம்

 

 

ஹூண்டாய் வெர்னா (2017) எஸ்எக்ஸ் பிளஸ் 1.6 விடிவிடி ஏடி (1591 சிசி)

 

 

ரூ.13,00,225

 

 

ரூ.9,79,195

 

 

ரூ.3,917

 

 

ரூ .36,095

 

* நகரம் (டெல்லி) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (2020) ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன.

கார் இன்சூரன்ஸில் என்னென்ன கூடுதல் இணைப்புகள் உள்ளன?

கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் பின்வரும் கூடுதல் இணைப்புகள்/சேர்த்தல் (ஆட் ஆன்ஸ்) இடம்பெற்று உள்ளன.

தனிப்பட்ட விபத்து கவர்

உங்கள் உடலில் காயங்கள் (விபத்தில்) ஏற்பட்டு பகுதி/மொத்த இயலாமையால் அவதிப்பட்டாலோ அல்லது மரணம் நேரிட்டாலோ இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவார்.

சாலையோர உதவி

இதை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் வாகனம் ஆனது டயர் பஞ்சர், பேட்டரி பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நின்றால் தேவையான உதவி கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்திற்கு உதவி தேடி வரும்.

மாற்று சாவி கவர்

உங்கள் கார் சாவியை தொலைத்து விட்டால், இந்த அம்சத்தின் மூலம் உங்கள் காருக்கு ஏற்படும் புதிய பூட்டின் செலவுகளை ஈடுசெய்யலாம்.

பூஜ்ஜிய தேய்மானம் கவர்

பூஜ்ஜிய தேய்மானம் கவர் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனம் ஆனது வாகனத்தின் தேய்மான மதிப்பிற்கு பதிலாக வாகன பாகத்தின் அசல் மதிப்பையே வழங்கும்.

விலைப்பட்டியல் கவர்

உங்களின் வாகனம் பழுதுபார்க்கப்படாமல் சேதமடைந்தால் (விபத்தில்) அல்லது திருடப்பட்டால், இந்த கூடுதல் இணைப்பு ஆனது உங்கள் காரின் விலைப்பட்டியல் மதிப்புக்கும், அதன் இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யும்.

உடைமைகள் இழப்பு

ஒருவேளை உங்கள் வாகனத்திலிருந்து விலையுயர்ந்த / விலைமதிப்பற்ற பொருட்கள் திருடப்பட்டால், இந்த கூடுதல் இணைப்பு உங்களுக்கு அதனை ஈடுசெய்யும் (ஓரளவு/முழுமையாக).

தினசரி அலவன்ஸ் தொகை

உங்கள் கார் பழுதுபார்ப்பதற்காக 3 நாட்களுக்கு மேல் ஒரு கேரேஜில் சிக்கிக்கொண்டால், உங்கள் போக்குவரத்து செலவுகளை ஈடுகட்ட தினசரி அலவன்ஸ் தொகை கிடைக்கும்.

கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது ஏன் சிறந்தது?

எளிதான ஒப்பீடு

இந்தியாவில் கார் இன்சூரன்ஸை வழங்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. பல விருப்பங்களுடன், அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினம். ஆகையால், ஆன்லைன் ஒப்பீடு செய்வதன் மூலம் (பிரீமியங்கள், நெட்வொர்க் கேரேஜ்கள் போன்றவை), உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்த இன்சூரன்ஸ் வழங்குநர் / திட்டம் பொருத்தமானது என்பதை நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

விரைவான மற்றும் வசதியான ஒப்பீட்டிற்கு, நீங்கள் பாலிசிஎக்ஸ்.காம் தளத்தில் லாக் இன் செய்யலாம். உங்கள் அடிப்படை விவரங்களை நீங்கள் வழங்கினால், பல நிறுவனங்களின் விவரப் பட்டியல் (அவற்றின் இன்சூரன்ஸ் விவரங்களுடன்) உங்களுக்கு முன்னால் காண்பிக்கப்படும். இந்த முழு செயல்முறையும் வெறும் 30 வினாடிகள் மட்டுமே எடுக்கும் மற்றும் நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் சிறந்த விருப்பங்களின் பட்டியலைப் பெறுவீர்கள். இதில் கூடுதல் வசதியை வழங்க, பாலிசிஎக்ஸ்.காம் கார் இன்சூரன்ஸ் வழங்கும் முதல் 15 இன்சூரன்ஸ் வழங்குநர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. உங்களின் இன்சூரன்ஸ் வாங்கும் செயல்முறையை அதிகரிக்க இதைப் பார்க்க தயங்க வேண்டாம்.

அணுகல்

ஆன்லைன் ஊடகத்தின் மூலம், எந்த இடத்திலிருந்தும் ஒரு நிறுவனத்தின் வலைதளம் / செயலியை அணுகுவது என்பது உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். உங்களிடம் இணைய இணைப்பு இருந்தால், இடமும், நேரமும் உங்களுக்கு ஒரு தடை அல்ல. அதேபோல், உங்கள் வீட்டிலிருந்து எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வலைதளம் / செயலியையும் பார்வையிடலாம் மற்றும் பயனுள்ள திட்டத்தை எளிதாக வாங்கலாம்.

மலிவானது 

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸை வாங்குபவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியங்களில் சில தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் காகிதமற்ற ஆவணங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செலவையும் குறைக்கின்றன.

உடனடி பிரீமியம் கணக்கீடு மற்றும் ஒப்புதல்

இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு உள்ளமைக்கப்பட்ட கருவியுடன் ( பில்ட்-இன்-டூல்) அமைந்து இருக்கிறது. இது இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்ற பெயரில் பிரபலமானது. நீங்கள் அடிப்படை தகவல்களை வழங்கிய பிறகு சில நிமிடங்களில், பல பிரீமியம் கட்டண விருப்பங்கள் உங்கள் திரையில் தோன்றும் மற்றும் அதில் இருந்து தேர்வு செய்யலாம். உங்கள் க்ளைம் கோரிக்கையை எளிதாக அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்ட தகவலை இன்சூரன்ஸ் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்க முடியும்.

வெளிப்படைத்தன்மை

கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் ஒப்பிட்டு வாங்குவது என்பது தயாரிப்புடன் தொடர்புடைய ஒவ்வொரு விவரத்தையும் தெளிவுபடுத்துவதற்கான சிறந்த யோசனையாகும். இது சரியான முடிவை எடுக்க உதவும்.

கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

ஒரு நபர் தனக்கு தேவையான நேரத்தில் தேவையான நிதியைப் பெறவே கார் இன்சூரன்ஸில் முதலீடு செய்கிறார். ஆனால் உங்கள் க்ளைம் கோரிக்கை ஏற்காமல் ரத்து செய்யப்பட்டால், அதை வழங்குவதற்கு உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநருக்கு நிதி திறன் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது ? அந்தநேரத்தில் கார் இன்சூரன்ஸின் முழு கருத்துக்களும் உங்களுக்கு அர்த்தமற்றதாக போய்விடும் இல்லையா ?. அதனால்தான் அதிக க்ளைம் செட்டில்மென்ட் தீர்வு விகிதத்துடன் உடைய சரியான கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

சிறந்த க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்துடன் கார் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களின் முழுமையான பட்டியல் இங்கே காணலாம் :

(2018-19 ஐஆர்டிஏ ஆண்டு அறிக்கையின்படி) அட்டவணை தரவு 07-07-2020 அன்று புதுப்பிக்கப்பட்டது

 

வ.எண்

 

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 

க்ளைம் விகிதம் (2018-2019)

 

1பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் 

62%

 

2பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

75%

 

3சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனம் 

84%

 

4ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனம் 

69%

 

5எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

82%

 

6இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

87%

 

7லிபர்ட்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

70%

 

8மாக்மா எச்.டி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

65%

 

9நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

127.5%

 

10நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 

87.54%

 

11ஓரியண்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

112.62%

 

12ரஹேஜா கியூபிஇ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

102%

 

13ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

85%

 

14ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

89%

 

15எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

87%

 

16ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

69%

 

17ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

74%

 

18டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

70%

 

19யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 

120.79%

 

20யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

88%

 

கார் இன்சூரன்ஸ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

 • ஓட்டுநர் உரிமம்
 • வாகனத்தின் விவரங்கள்
 • வங்கி விவரங்கள்
 • முறையாக நிரப்பப்பட்ட க்ளைம் படிவம்
 • வரி ரசீது
 • இன்சூரன்ஸ் வழங்குநரால் அனுப்பப்பட்ட அனைத்து ஆவணங்களும் (உங்களால் நிரப்பப்பட்டவை)

ஏன் பாலிசிஎக்ஸ்.காம் கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கான சரியான தளம்?

தற்போது, ​​கார் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை உங்கள் மூளையில் நன்றாக பதிக்க வேண்டும். இன்று கார் இன்சூரன்சுக்கானத் தேவை அதிகரித்து வருவதால் சந்தையில் பல காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை எனலாம். எனவே, இத்தனை விருப்பங்களின் தொகுப்பில், நீங்கள் ஏன் பாலிசிஎக்ஸ்.காமில் ஈடுபட வேண்டும் ? என்பதை நாம் பார்க்கலாம்.

நாங்கள் பக்கச்சார்பற்றவர்கள்

அதை மிகத் தெளிவுபடுத்துகிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். இதன் பொருள் ஆனது ஒரு பக்கச்சார்பற்ற ஆலோசனை மட்டுமே எப்போதும் அட்டவணையில் இடம்பெறும். எனவே, உங்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

எங்கள் ஆதரவு குழு எப்போதும் கண்காணிப்பில் இருக்கும்

எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு ஆனது தி வாட்ச் கோர்டு என்கிற ஒரு குறியீட்டு பெயரால் அறியப்படுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, எங்களை விரும்பும் வாடிக்கையாளர்களால் இந்த பெயர் வழங்கப்பட்டது. நீங்கள் எத்தனை கேள்விகளை எழுப்பினாலும், அவை எப்போதும் கடைசி வரை உங்களைப் பாதுகாக்கும் (உதவி வழங்கும்).

எங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் ஆதரவு உள்ளது

ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இந்திய சந்தையில் சுதந்திரமாக செயல்பட ஐ.ஆர்.டி.ஏ.ஐ (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) ஒப்புதல் தேவை. இன்சூரன்ஸ் வழங்குநர்களில் மிகச் சிலரே ஐஆர்டிஐயின் இதயத்தை வெல்ல முடிகிறது. அதிர்ஷ்டவசமாக, அவர்களில் நாங்களும் ஒருவர். பதிவு எண் (ஐஆர்டிஏ / டபிள்யூபிஏ 17/14).

ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்கள் தற்போதைய கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன – அந்தந்த இன்சூரன்ஸ் வழங்குநரின் இணையதளத்தில் நுழைந்து புதுப்பித்தல் செயல்முறையைச் செய்யுங்கள் அல்லது பாலிசிஎக்ஸ்.காமைப் பார்வையிடவும் மற்றும் சில நிமிடங்களிலேயே பாலிசியின் புதுப்பித்தலை முடிக்கவும். அதற்காக கீழே கூறப்பட்ட படிகளை மேற்கொள்ள வேண்டும்.

 • https://www.policyx.com/renew.php ஐப் பார்வையிடவும், ” மோட்டார் ” வகையைத் தேர்ந்தெடுத்து விவரங்களை நிரப்பவும்.
 • ‘சமர்ப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்தவுடன், பக்கத்தின் வலது பக்கத்தில் பாலிசிகளின் பட்டியலைக் காண்பீர்கள். உங்களிடம் இருக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய ஒன்றைத் தேர்வு செய்யவும் (தேவைப்பட்டால்) மற்றும் ” இப்போது புதுப்பிக்கவும் ” என்பதைக் கிளிக் செய்யவும்.
 • இது உங்களை இன்சூரன்ஸ் வழங்குநரின் அந்தந்த வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
 • தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டணம் செலுத்துங்கள்.
 • உங்கள் மின்னஞ்சல் முகவரியில் புதுப்பித்தல் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.

கார் இன்சூரன்ஸின் கீழ் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை?

 • குடிப்போதையில் வாகனம் ஓட்டும்போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்.
 • போர் மற்றும் அணுசக்தி ஆபத்து காரணமாக ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்கள்.
 • சட்டவிரோத செயல்களுக்கு உங்கள் காரைப் பயன்படுத்தும் போது ஏற்படும் தற்செயலான சேதங்கள்.
 • வாகனத்தில் சீரான தேய்மானங்கள் காரணமாக ஏற்படும் வழக்கமான இயந்திர செலவுகள்.
 • சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் இழப்புகள்

கார் இன்சூரன்ஸ் க்ளைம் தாக்கலை எவ்வாறு செய்வது?

க்ளைம் விண்ணப்பிக்க, நீங்கள் பணமில்லா மற்றும் திருப்பிச் செலுத்துதல் ஆகிய இரண்டு முறைகள் மூலம் செல்லலாம். இந்த இரண்டு முறையின் விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணமில்லா க்ளைம்

 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்.
 • க்ளைம் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.
 • உங்கள் வாகனத்தையும் மற்றும் முழு சம்பவத்தையும் பகுப்பாய்வு செய்ய சர்வேயரை அனுமதிக்கவும்.
 • ஒப்புதல் பெற்ற பிறகு, சர்வேயர் நேரடியாக கேரேஜுடன் இணைத்து உங்கள் சார்பாக பணம் செலுத்துவார்.

திருப்பிச் செலுத்துதல் க்ளைம்

 • இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்.
 • தேவையான ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட க்ளைம் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
 • இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் வழக்கை பகுப்பாய்வு செய்யும்.
 • ஒப்புதல் பெற்ற பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு நேரடியாக பணத்தைத் திருப்பிச் செலுத்தும்.

க்ளைம் படிவத்துடன் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

 • இன்சூரன்ஸ் பாலிசியின் நகல்
 • ஓட்டுநர் உரிமத்தின் நகல், ஆர்.சி புக் மற்றும் எஃப்.ஐ.ஆர் (தேவைப்பட்டால்)
 • பழுதுபார்ப்பு பில்கள் மற்றும் கட்டண ரசீதுகளின் நகல்
 • சாவிகள் / கையேடுகள் / உத்தரவாத அட்டைகளின் தொகுப்புகள் (நீங்கள் திருட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால்)
 • வரி செலுத்தும் ரசீது
 • உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரால் கேட்கப்பட்ட வேறு எந்த ஆவணமும்

உங்கள் க்ளைம் நிராகரிக்கப்பட்டால் நினைவில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், தயவுசெய்து உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அதற்கான காரணத்தை முன்னிலைப்படுத்தச் சொல்லுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் கவனமாக இருக்க முடியும்.

15-07-2020 – ல் தரவு புதுப்பிக்கப்பட்டது

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password