சட்ட பிரிவு 370-ம் ஜம்மு காஷ்மீரின் வரலாறும்

இந்திய அரசியல் சட்ட பிரிவு 370 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 சிறப்புகள் பற்றி பார்க்கும் முன், ஜம்மு காஷ்மீரின் வரலாற்றையும் நம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஜம்மு காஷ்மீரின் வரலாறு:

சுருக்கமாக…

இந்தியாவின் சுதந்திர தினம் 1947 ஆகஸ்ட் 15. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் ஜம்மு-காஷ்மீரின் சுதந்திர தினம் ? ஆம், ஜம்மு-காஷ்மீரின் சுதந்திர தினம் ஜூலை 25.


1857ல் காஷ்மீரின் அரசன் குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மகன் ரன்பீர் சிங் என்பவர் மேலும் சில பகுதிகளை வென்று காஷ்மீர் அரசுடன் இணைத்தார்.

ராஜா ஹரி சிங்

ராஜா ஹரி சிங்

ராஜா ஹரி சிங்

 

ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏறியபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது.
பின்பு, 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்ததால்,

இந்தியப் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும்  தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன.

1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அதன் அரசனாக ஹரி சிங் என்ற இந்து மன்னன் ஆண்டு வந்தான்.
இந்த காலகட்டத்தில், ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர்.

ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்து கடுமையாக போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், பின்பு தம் படைகளால் பாகிஸ்தானின் போர் வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்தார். எனவே, இந்தியாவின் உதவியை நாட முடிவு எடுத்தார்.

இந்தியாவின் உதவி

அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் பிரதமர் நேரு மற்றும் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோரின் (ஆம் இவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் – Governor-General ) உதவியை மன்னர் ஹரி சிங் நாடினார்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் மட்டுமே காஷ்மீருக்கு உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் ராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஆனால், அந்த ஆணையின்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா  இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது.

ஐநா சபை-இன் தீர்மானம்

ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் ஐநாவின் பேச்சைக் கேட்காமல் காஷ்மீரின் கைப்பற்றிய பகுதிகளை விட்டு விலக மறுத்தது, இதனால் இந்தியாவும் காஷ்மீரில் இன்று வரையும் பொதுவாக்கெடுப்பு எடுக்கவில்லை.

இதன் மூலம், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பெரிதும் பாதிப்படைந்த நிலையில்,  இரு நாடுகளுக்கும் இடையே 3 போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன,


முந்தைய காசுமீரின் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியைப் பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 10 விழுக்காடு பகுதியைச் சீனாவும் தற்போது நிர்வகிக்கின்றன.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 370

Article 370 in Tamil

 

இபோது அரசியல் சட்டம் 370 ஆவது பிரிவு மற்றும் 35a என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.

மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டது, இதன்படி,
ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த கோபாலசுவாமி ஐயங்கார் அவர்களால் 370 பிரிவு உருவாக்கப்பட்டது.

இதன்படி மற்ற மாநிலங்களுக்கு இல்லாத வகையிலான அதிகாரங்கள் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக சுயாட்சியை கொண்டதாக ஜம்மு-காஷ்மீர் மாறியது.

இதனால்,

 • நாடாளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாத நிலை இருந்தது.

அதே போல 370 ஆவது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. 

 • ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.

 

ஜம்மு காஷ்மீரின் வரலாறு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசியக்கொடி


இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.

ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.

 • இங்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறுவோம் வாக்களிக்கவும் முடியாது.
 • இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும்தான் தானிக்கொடியும் தனி அரசியல் சாசனமும் உண்டு.
 • இதர மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் 5 ஆண்டுகள், ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் 6 ஆண்டுகள்.


அதே சமயத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட மேலும் சில சலுகைகள் கடந்த காலங்க்கலில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.


இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 35A

Article 35A in Tamil

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள யார் என்பதை வரையறுக்கவும்,

 • நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு,
 • அரசு உதவித் தொகைகள் வழங்குதல் மற்றும்
  அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது

போன்றவற்றிற்கு இந்திய அரசிலமைப்பு சட்டப் பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு உரிமை வழங்கியுள்ளது.

இச்சட்டப்பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், 14 மே 1954 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் படி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35A, இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ல் சேர்க்கப்பட்டது.

பிரிவுகள் 370 மற்றும் 35A நீக்கம்

 

பிரிவுகள் 370 மற்றும் 35A நீக்கம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (05-08-2019) உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். உடனெ, குடியரசுத் தலைவரும் இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டார்.

இதன் மூலம்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

எனவே, சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.

இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது.

இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும். மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி. ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.

இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்று நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து துறை சார்ந்தும் மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும்.

முன்பு இந்த அதிகாரங்க்கள் ஏதும் கிடையாது.

 

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart