92. நண்பனின் ஆலோசனை

109 0

அறிவு கதைகள்

92. நண்பனின் ஆலோசனை

ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை.

“மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு சிறிது குறைவு என்று கூறி என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். எனக்கு மூளை கலங்குகிறது. இந்த இரண்டு பெண்களில் நான் எந்தப் பெண்ணை மணக்கலாம்? ஒருநல்ல யோசனை சொல்” என்று கேட்டான்.

அதற்கு அவன் நண்பன் “பணம் இன்றைக்கு வரும் போகும். அது நிலைத்தது அல்ல. வாழ்நாள் முழுதும் வருகின்ற மனைவிதான் உனக்குத் துணையாக இருந்தாக வேண்டும். பெண் ஏழையாக இருந்தாலும் குணம், அழகு இருப்பதால் அப்பெண்ணையே மணந்துகொள்” என்று கூறினான்.

அவன் நண்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு. திரும்பும் பொது நண்பன் திரும்ப அவனை அழைத்து,

“ஏதோ ஒரு பணக்காரவீட்டுப் பெண் என்று சொன்னாயே! அந்தப் பெண்ணின் முகவரியை எனக்குக் கொடுத்துவிட்டுப் போ” என்றான்.

இப்படியும் சில நண்பர்கள் தன்னலங்கொண்டு, ஆலோசனை கூறுவதும் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது.

92. நண்பனின் ஆலோசனை

Related Post

மாய வீரர்கள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மாய வீரர்கள்  மாய வீரர்கள் அடுத்த நாள் பொழுது விடிந்தது. ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த நான்கு காணி நிலத்தையும் சுற்றிக் கூடி நின்றார்கள்.…

முரசொலி கேட்ட நரி – 1-3

Posted by - ஏப்ரல் 17, 2020 0
முரசொலி கேட்ட நரி 3. முரசொலி கேட்ட நரி ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது…
- 6

நரியும் அதன் நிழலும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் நரியும் அதன் நிழலும் நரியும் அதன் நிழலும் | The Fox and His Shadow Story in Tamil   ஒரு நரி…

13. தங்க ஆப்பிள் கனிகள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஹெர்க்குலிஸ் கதைகள் 13. தங்க ஆப்பிள் கனிகள் ஹெர்க்குலிஸ், மன்னன் ஏவிய பத்துப் பணிகளையும் நிறைவேற்றிவிட்டான்: இவைகளை முடிப்பதற்கு எட்டு ஆண்டுகளும் ஒரு மாதமும் ஆயின. பத்துப்…

உங்கள் கருத்தை இடுக...