90. ஒற்றுமைக்காக

116 0

அறிவு கதைகள்

90. ஒற்றுமைக்காக

ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பினான்.

தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.

மேல்தூசி, கீழ்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ‘நாம் தேங்காயோடு இணைந்திருக்கும் போது துன்பமில்லை. இப்போது நம்மைப் பிரித்து விட்டார்கள், இப்படிச் சிதறிக் கிடக்கின்றோம்’ என்றது கீழ்தூசி.

அதற்கு மேல்துரசி “இது தோப்புக்காரன் தப்புமல்ல; குத்தகைக்காரன் தப்பும் அல்ல; நம் தப்புதான். நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகி விடும்.”

“நாம் சேர்ந்து இழைந்து வாழ்ந்துவருகிற சிறு இழுக்கும் கயிறாகி மணிக்கயிறாகி, பந்தல்கயிறாகி, வால் கயிறாகி, தேர்வடக் கயிறாகி ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இருந்தால், நம்மைவிட்டுப் பிரிந்த நமது எதிரிகளான தேங்காய்கள்கூட நம்மேல் மோதி தானாகவே “டாண் டாண்” என்று உடைபடும் என்றது.

அப்படியே, தேங்காய் நார்த்தூசிகளின் ஒற்றுமை வலுவினால் உண்டான தேர்வடக் கயிற்றில் மோதித் தேங்காய்களே உடைபடுகின்றன.

ஒற்றுமைக்கு இவ்வளவு பலம் உண்டு’ என்று அறிந்த நாமும் இனி சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வோமா?

90. ஒற்றுமைக்காக

Related Post

நரியும் பூனையும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
நரியும் பூனையும் 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு…

15. ஹெர்குலிஸ் தெய்வமாதல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஹெர்க்குலிஸ் கதைகள் 15. ஹெர்குலிஸ் தெய்வமாதல் கிரீஸ் தேசத்தில் எல்லா ராஜ்ஜியங்களிலும், ஹெர்க்குலிஸின் புகழ் பரவி நின்றது. இனி அவன் யூரிஸ்தியஸ் மன்னனுக்கும். வேறு எவருக்கும் பணிகள்…

54. நாம் திருந்துவோமா?

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 54. நாம் திருந்துவோமா? ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி…
- 2

தேளும் தவளையும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் தேளும் தவளையும் தேளும் தவளையும் The Scorpion and the Frog   அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள…

உங்கள் கருத்தை இடுக...