81 எம்பி அளவு கொண்ட வீடியோவை 40 எம்பி அளவுக்கு தரம் குறையாமல் மாற்றுவது எப்படி?
மேலும் ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களின் பங்கு சற்று அதிகம் என்றே கூறலாம். வாட்ஸ்அப், பேஸ்புக், உள்ளிட்ட அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் வீடியோக்கள் தான் அதிகமாக பயன்படுகின்றன. சரி இப்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எப்படி ஒரு வீடியோவின் File Size தரம் குறையாமல் பாதியாக குறைப்பது என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

உதாரணமாக கூறவேண்டும் வேண்டும் என்றால், உங்களுக்கு பிடித்த ஒரு 81 எம்பி அளவு கொண்ட வீடியோவை 40 எம்பி அளவுக்கு தரம் குறையாமல் மாற்றுவது எப்படி? என விரிவாகப் பார்க்கலாம். இதன் மூலம் உங்களது மொபைல் மெமரியை கண்டிப்பாக மிச்சப்படுத்த முடியும்.

வழிமுறை-1
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திற்கு சென்று Video Compress என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.
தெருநாய்களும் ஒரு செல்லப்பிராணிதானே: பழைய டிவி பெட்டிகளில் தெருநாய்களுக்கு வீடு அமைத்த இளைஞர்!

வழிமுறை-2
அடுத்து இந்த ஆப் வசதிக்கு உள்நுழைந்தவுடன் உங்களது அனைத்து வீடியோக்களும் இந்த ஆப் வசதியில் காண்பிக்கப்படும்.

வழிமுறை-3
அதன்பின்னர் ஆப் வசதியில் இருக்கும் உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்வு செய்து Compress Video என்பதை கிளிக் செய்யவும். இந்த வசதியானது உங்களது வீடியோவின் File Size தரம் குறையாமல் பாதியாக மாற்ற உதவும்.

வழிமுறை-4
மேலும் Compress Video என்பதை நீங்கள் கிளிக் செய்தவுடன், high quality, low quality, custom என்ற மூன்று விருப்பங்கள் இருக்கும். அதில் நீங்கள் high quality என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உங்களுக்கு பிங்க் நிறத்தில் காண்பிக்கப்படும் high quality வசதியை தேர்வு செய்து வீடியோவை convert செய்யலாம்.

வழிமுறை-5
இந்த செயல்முறையானது சில நிமிடங்கள் வரை இருக்கும், பின்பு நீங்கள் convert செய்த வீடியோ ஆனது உங்களது மொபைலில் தானாக சேமிக்கப்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், உங்களது 81 எம்பி அளவு கொண்ட வீடியோ ஆனது தரம் குறையாமல் 40 எம்பி அளவுக்கு மாற்றப்பட்டு மொபைலில் சேமிக்கப்படும்.

வழிமுறை-6
இந்த Video Compress ஆப் வசதியில் compress video தவிர cut and compress video, rotate video, fast forward, play video உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. இவை அனைத்தும் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.
81 எம்பி அளவு கொண்ட வீடியோவை 40 எம்பி அளவுக்கு தரம் குறையாமல் மாற்றுவது எப்படி? Source link
Tags: How to Tech