2500 கிலோ கழிவு தேயிலையுடன் கொட்டகலை பகுதியில் இருவர் கைது

2500 கிலோ கழிவு தேயிலையுடன் கொட்டகலை பகுதியில் இருவர் கைது

2500 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கழிவுத் தேயிலையை அனுமதிபத்திரம் இல்லாமல் கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லும் போது விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலையயும், வாகனத்தையும், சந்தேகநபர்களையும் திம்புள்ள,பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள,பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- 3

- 7

- 11

- 15

2500 கிலோ கழிவு தேயிலையுடன் கொட்டகலை பகுதியில் இருவர் கைது
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart