2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்…

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்…

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

2020-2021 நிதியாண்டு நிறைவு பெற்று தற்போது 2021-22 நிதியாண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நிதியாண்டு இந்திய வாகனத் துறைக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தவேலையில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவல் மிக தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

கடந்த ஆண்டும் வைரஸ் பரவல் எதிர்பார்த்திராத வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணத்தினால் ஆரம்பத்தில் வாகன விற்பனை மந்த நிலையிலேயே காணப்பட்டது. இதே நிலையை நடப்பு நிதியாண்டிலும் ஏற்படுத்தும் வகையில் சூழ்நிலை மாறியுள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்கள் தங்களை முழு முடக்கத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றன.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் எந்த நகரத்தில் கார் விற்பனை அமோகமாக நடைபெற்றது என்பதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிக கிளைகள் கொண்டு இயங்கும் பெரிய கார் டீலர்கள் கொடுத்திருக்கும் தகவலின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

இந்த பதிவில், 2020-2021 நிதியாண்டில் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் எந்த நகரத்தில் அதிகம் கார் விற்பனையாகி இருக்கின்றன என்பதுகுறித்த தகவலையே பார்க்க இருக்கின்றோம்.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

கடந்த 2020-21ம் நிதியாண்டில் டெல்லி சேராமல் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மட்டும் 1,36,869 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையை பெற்றதன் காரணத்தினால் நாட்டின் அதிகம் கார் விற்பனயாகும் நகரமாக என்சிஆர் மாறியுள்ளது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

டெல்லியில் மட்டும் 1,28,907 யூனிட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆகையால், இரண்டாம் இடத்தை இந்நகரம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை கர்நாடகாவின் பெங்களூரு நகரம் பிடித்துள்ளது. 1,08,870 யூனிட் கார்கள் இந்நகரத்தில் விற்பனையாகியுள்ளன.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

நான்காம் இடத்தை ஹைதராபாத் பிடித்துள்ளது. ஆகையால், தெலங்கானா மாநிலத்திலேயே அதிகம் கார்களை விற்பனைச் செய்த நகரமாக ஹைதராபாத் மாறியுள்ளது. இந்த நகரத்தில் 1,02,69 யூனிட் புதிய கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஐந்தாம் இடத்தை மும்பை பிடித்துள்ளது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

1,01,681 புதிய கார்கள் மும்பையில் விற்பனையாகியிருக்கின்றன. இதையடுத்தே, மும்பை நகரம் இந்தியாவின் அதிகம் கார்கள் விற்பனையாகும் நகரங்களில் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் சேர்க்கப்பட்டது. இப்பட்டியலில் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னை எட்டாம் இடத்தையே பிடித்துள்ளது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

சென்னையில் ஒட்டுமொத்தமாகவே கடந்த நிதியாண்டில் 62,660 யூனிட் புதிய கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இந்த குறைந்த எண்ணிக்கை கார் விற்பனையின் காரணமாக சென்னை எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

அதேசமயம், அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய இரு நகரங்களும் சென்னைக்கு மேலே இருக்கும் 6 மற்றும் 7வது இடங்களைப் பிடித்திருக்கின்றன. 77,283 யூனிட் புதிய கார்களை விற்பனைச் செய்து அஹமதாபாத் ஆறாவது இடத்தையும், 77090 யூனிட் புதிய கார்களை விற்பனைச் செய்து ஏழாம் இடத்தைப் புனேவும் பிடித்திருக்கின்றது.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

இவற்றை அடுத்து 9ம் இடத்தில் கொல்கத்தாவும், 10வது இடத்தில் லக்னோவும் அமர்ந்திருக்கின்றன. கொல்கத்தாவில் ஒட்டுமொத்தமாக 51,148 யூனிட் புதிய கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் (10வது இடத்தில்) இருக்கும் லக்னோவில் 51,148 யூனிட் புதிய கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்...

பட்டியலின் வாயிலாக நகர வாரியான கார் விற்பனைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

வரிசை எண்நகரங்கள்நிதியாண்டு 2021மாத தோராய மதிப்பீடு
1என்சிஆர்1,36,86912,443
2டெல்லி1,28,90711,719
3பெங்களூர்1,08,8709,897
4ஹைதராபாத்1,02,6919,336
5மும்பை1,01,6819,244
6அஹமதாபாத்77,2837,026
7புனே77,0907,008
8சென்னை62,6605,696
9கொல்கத்தா53,5804,871
10லக்னோ51,1484,650

Source: autopunditz2020-21 நிதியாண்டில் அதிகம் கார் விற்பனையான நகரம் எது தெரியுமா?.. சென்னையை ஓரம் கட்டிய புனே, அஹமதாபாத்… Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password