20 கோடி இந்தியர்களின் டேட்டா… வாட்ஸ்அப், பேஸ்புக் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தா?!
ஜனவரி 15, 2021
SaveSavedRemoved 0
“வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் என்பது நேரடியாக ஒரு தனிநபரின் ப்ரைவசியை சுரண்டுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.”
புதிய ப்ரைவசி கொள்கைகளை அமல்படுத்த விடாமல் வாட்ஸ்அப்பை தடுக்க வேண்டும்; வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கைத் தடைசெய்ய வேண்டும் என்றும் வணிகர் கூட்டமைப்பான CAIT மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
வாட்ஸ்அப் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. “வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காகவே ப்ரைவசி கொள்கைகளை மாற்றினோம். தொழில்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்னும் நேர்த்தியாக தொடர்புகொள்ள எங்கள் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிடமிருந்தும் சேவைகளை பெறுவார்கள்.
SaveSavedRemoved 0