15 ஆண்டுகளுக்கு உட்பட்ட பழைய காரை அழிக்க கொடுத்தால் புதிய காருக்கு அதிரடி தள்ளுபடி!
15 ஆண்டுகளுக்கு உட்பட்ட பழைய காரை அழிக்க கொடுத்தால் புதிய காருக்கு அதிரடி தள்ளுபடி!
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பழைய வாகனங்களை அழிக்க கொடுத்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, தனிநபர் பயன்பாட்டு வகையில் உள்ள பழைய வாகனங்களை அழிக்கக் கொடுத்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரியில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்குவதற்கு வகை செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை கொடுத்துள்ளது.

மேலும், வர்த்தக ரீதியிலான பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரியில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த தள்ளுபடியானது தனிநபர் பயன்பாட்டு வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் அழிப்பதற்கு கொடுத்த சான்று வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோன்று, இந்த தள்ளுபடியை வர்த்தக வாகனங்களுக்கு பெறுவதற்கு வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 8 ஆண்டுகளுக்குள் அழிக்க கொடுத்ததற்கான சான்று பெற்று இருக்க வேண்டுமாம்.

வரும் அக்டோபர் 1ந் தேதி முதல் இந்த புதிய சட்டவிதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்குள் இந்த பழைய வாகன அழிப்புக் கொள்கை குறித்த முழுமையான விபரங்கள் வெளியிடப்பட்டுவிடும்.

தற்போது நம் நாட்டில் 4 கோடி பழைய வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிபரம் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்தசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துவதுடன் தகுதியற்ற பழைய வாகனங்களால் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது. எனவே, பழைய வாகனங்களை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
15 ஆண்டுகளுக்கு உட்பட்ட பழைய காரை அழிக்க கொடுத்தால் புதிய காருக்கு அதிரடி தள்ளுபடி! Source link