12 ஆம் தேதி தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி வினியோகப்பணி

12 ஆம் தேதி தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி வினியோகப்பணி

புனே நகரில் இருந்து தடுப்பூசி வினியோகம் நாளை தொடங்குகிறது. விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி தொடங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கோவி ஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த மருந்து சப்ளை செய்யப்படுவதற்கு சற்று தாமதம் ஆகும் என்று தெரிகிறது. இதனால் முதலாவதாக கோவிஷீல்டு மருந்தை மக்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் மருந்துகளை வழங்க தயார் நிலையில் உள்ளது. புனேவில் உள்ள மருந்து கிட்டங்கிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு மருந்து அனுப்பப்பட உள்ளது.

80 சதவீத மருந்து விமானம் மூலமே அனுப்பப்பட உள்ளது. குறுகிய தூர இடங்களுக்கு மட்டும் விசேஷ வேனில் அனுப்புகின்றனர். மருந்துகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அனுப்புவதற்காக மும்பையை சேர்ந்த கூல் எக்ஸ் கோல்டு செயின் லிமிடெட் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிட்டங்கிகளில் இருந்து மருந்துகளை விமான நிலையத்திற்கு கொண்டு சென்று,அங்கிருந்து ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்லப்படும் என்றும், 12 ஆம் தேதியில் இருந்து வினியோகம் தொடங்கும் என்று கூல் எக்ஸ் கோல்டு செயின் நிறுவனத்தின் அதிபர் ராகுல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக 2 லட்சம் டோஸ் மருந்துகளை சீரம் நிறுவனம் தயாராக வைத்துள்ளது என்றும், அவற்றை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வாரம் வரை ஆகும் என்றும் ராகுல் அகர்வால் கூறினார்.

விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், விமானம் மூலம் ஒவ்வொரு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு உள்ள கிட்டங்களில் மருந்தை வைத்து,பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் வேறு கிட்டங்கிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

12 ஆம் தேதி தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி வினியோகப்பணி

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart