64. உலகம் போச்சு

97 0

அறிவு கதைகள்

64. உலகம் போச்சு

வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.

கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் பிடித்துக் கரை சேர்த்துக் காப்பாற்றிய பிறகு கேட்டான். ‘உலகத்துக்கு என்ன ஆபத்து?” என்று.

அதற்கு நரி சொன்னது, ‘ஆமாம் நீ என்னைத் தூக்காவிட்டால் நான் இறந்திருப்பேன். எனக்கு உலகம் போச்சு அல்லவா? அதனால்தான் அப்படிக் கூவினேன்’ என்றது.

அதுகேட்ட குடியானவன். ஒரு தனிமனிதன் தன் நலம் கருதி எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவானோ, அப்படிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொண்டதே இந்தப் பொல்லாத நரி என்று மனதுக்குள் எண்ணி வியந்துகொண்டே சென்றான்.

64. உலகம் போச்சு

Related Post

63. குரங்கும் குருவியும்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 63. குரங்கும் குருவியும் மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு. அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி,…

5. கலைமான் கொணர்தல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஹெர்க்குலிஸ் கதைகள்  5. கலைமான் கொணர்தல் யூரிஸ்தியஸ் ஹெர்க்குலிஸ்க்கு விதித்த மூன்றாவது பணி பேரழகுள்ள ஒரு கலைமானை உயிருடன் கொண்டு வர வேண்டும் என்பது. அந்த…

போகாத இடம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
போகாத இடம் கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள் ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர். வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம்…
- 2

தொழில் – முல்லா கதைகள் | Thozhil – Mulla Stories

Posted by - ஏப்ரல் 19, 2020 0
தொழில் – முல்லா கதைகள் | Thozhil – Mulla Stories ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், “நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?” என்று…

52. அறத்தால் வருவதே இன்பம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 52. அறத்தால் வருவதே இன்பம் “அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி…

உங்கள் கருத்தை இடுக...