- 1

ஹெர்னியா குடல் இறக்கம் பற்றி தெரியுமா?

217 0

ஹெர்னியா குடல் இறக்கம் பற்றி தெரியுமா?

நமது உடலின் ஒரு உறுப்பானது பலவீனமான இடத்தின் வழியாக வெளியே தள்ளப்படும் நிலைதான் ஹெர்னியா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குடலின் ஒரு பகுதியோ வயிற்றின் உள்ளுறுப்புகளை சுற்றி இருக்கும் பெரிட்டோனியம் சவ்வு வயிற்று சுவரின் பலவீனமான ஒரு பகுதியில் வெளியே பிதுங்கி கொண்டிருக்கும்.

ஹெர்னியாவில் பல வகை உண்டு. தொப்புளில் பலவீனம் உண்டாவது அம்ப்ளிக்கல் ஹெர்னியா என்றும், விரைப்பைக்கு ரத்த குழாய் செல்லும் பாதையில் பலவீனம் உண்டாகி அதன் வழியாக குடல் வெளியேறுவது இங்யூனல் ஹெர்னியா என்று கூறப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் வயிற்றுபகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் போட்ட இடத்தில் பலவீனம் உண்டாகுவதால் இன்சிஷனல் ஹெர்னியா என்று சொல்லப்படுகிறது.

யாருக்கெல்லாம் வரலாம்?

ஆண்கள், பெண்கள் போன்று குழந்தைகளுக்கும் கூட ஹெர்னியா வரலாம். குழந்தைகளுக்கு வருவது அம்பிலிக்கல் ஹெர்னியாவாகும்.

அதிக எடை கொண்டிருப்பவர்களுக்கு குடலிறக்கம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பிறவியில் கூட இந்த பிரச்சனை சிலருக்கு வரும், வயிற்றை அழுத்தும் செயலில் ஈடும்படும்போதுகூட இந்த குடலிறக்கம் வரலாம்.

அறுவை சிகிச்சை தையல் போன்ற பிரச்சனைகளினாலும் கூட சிலருக்கு இந்த குடலிறக்கம் வரும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள் அழுத்தி அதிகம் முக்கி மலம் கழிக்கும்போது இந்த குடலிறக்கம் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஜிம்மில் அதிகமான எடை கொண்ட பொருள்களை தூக்கினால் கூட சிலருக்கு இப்பிரச்சினை வரும்.

கடும் உடல் உழைப்பை கொண்டவர்களுக்கும், அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கும் குடலிறக்கம் வரும்.

இருமல், ஊட்டச்சத்து குறைவு குடல் செயல்பாடு, வயிறு தசை வழுவிழத்தல் போன்றவற்றாலும் ஹெர்னியா பிரச்சினை வரலாம்.

அறிகுறிகள் என்ன?

தொப்புள் சார்ந்த ஹெர்னியா குழந்தைகளுக்கு தொப்புள் பகுதியில் வீக்கம் ஏற்படும். பெரியவர்களாக இருந்தால் தொப்புள் பகுதியில் வீக்கமும், இருமலும் சளி ஒழுகலும் ஏற்படும்.

சிலருக்கு வலி இல்லாமல் கட்டியாக தோன்றும். பிறகு அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.

இருமும் போதும், மலம் கழிக்க முக்கும் போதும் தசைபகுதியில் சிறிய வீக்கம் ஏற்படும்.

சிலருக்கு நிற்கும் போதும், அதிக எடை கொண்ட பொருளை தூக்கும் போதும் இப்பிரச்சினை மோசமாகிவிடும்.

வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சேர்வதால் நெஞ்செரிச்சல் உண்டாகும்.

சிகிச்சை முறைகள்

குடலிறக்கம் உறுதியானால் அவை 2 ஆண்டுகளுக்கும் 40 % குடலை பாதிக்கும்.

ஹெர்னியாவுக்கு குணப்படுத்த வேண்டும் என்றால் அது அறுவை சிகிச்சை மட்டும் தான். அறுவை சிகிச்சையின் மூலம் புடைத்து வெளியே வரும் பகுதியை உள்ளே தள்ளி தையல் மூலம் மூடுவதுதான்.

இந்த அறுவை சிகிச்சையும் இரண்டு விதங்களில் செய்யப்படுகிறது. ஒன்று திறந்த வெளி மற்றொன்று துளைகள் வழியாக செய்யப்படுகிறது.

முதல் வகையான அறுவை சிகிச்சை நவீன மருத்துவத்தில் இவை வலி உண்டாக்குவதில்லை.

இரண்டாவது வகையான லேப்ராஸ்கோப்பி முறை எளிதானது, வலியும் தழும்பும் குறைவாக இருக்கும். மேலும் இந்த முறையில் தொற்று உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஹெர்னியா குடல் இறக்கம் பற்றி தெரியுமா? Source link

Related Post

- 3

பயனுள்ள 10 அடிப்படை மருத்துவ குறிப்பு இதோ!

Posted by - நவம்பர் 9, 2020 0
பயனுள்ள 10 அடிப்படை மருத்துவ குறிப்பு இதோ! நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். தேங்காய் எண்ணையில் கற்பூரம்…
- 5

ஆண்களே கேரட்டை தினமும் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?

Posted by - அக்டோபர் 26, 2020 0
ஆண்களே கேரட்டை தினமும் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி இருக்கிறது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய்…
- 7

கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றதும் என்ன நடக்கும்? மரணம் ஏற்படுவது ஏன்?

Posted by - நவம்பர் 3, 2020 0
கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றதும் என்ன நடக்கும்? மரணம் ஏற்படுவது ஏன்? உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் கொரானா வைரஸ். அச்சுறுத்தலை மட்டும் அல்ல. லட்சக்கணக்கான…
- 11

பித்தக் கற்கள் உருவாகுவதை தடுக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Posted by - நவம்பர் 15, 2020 0
பித்தக் கற்கள் உருவாகுவதை தடுக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு…
- 23

இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் வெந்தயக்கீரை

Posted by - டிசம்பர் 1, 2020 0
இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் வெந்தயக்கீரை வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. குறிப்பாக வெயில் காலத்தில் வெந்தயகீரையை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி…

உங்கள் கருத்தை இடுக...