- 1

வைரஸை அழித்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அருகம்புல் ஜூஸ்!

78 0

வைரஸை அழித்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அருகம்புல் ஜூஸ்!

அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரக்கூடிய தாவரம். வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரக்கூடிய புல் வகையாகும்.

அருகம்புல் ஜூஸ் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களை குணப்படுத்த கூடிய மருந்தாக செயல்படுகிறது. கண் எரிச்சலையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வயிற்றுப் போக்கை உடனே நிறுத்தும். புண்களை சட்டென்று ஆற்றிவிடும்.

அருகம்புல் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல்லை சிறு தொட்டியில் கூட வீட்டில் வளர்க்கலாம். அல்லது கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

அருகம்புல்லில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அமினோ அமிலங்கள், குளோரோஃபில், வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

இதன் சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும். தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது.

அருகம்புல்லில் அதிக குளோரோஃபில் இருப்பதால், இயல்பாகவே காரத்தன்மை கொண்டது. இதனால் செரிமான சிக்கல்கள் தீர்ந்து விடும். மேலும் குளோரோஃபில்லும், செலீனியமும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. இவற்றைத் தவிர அனீமியா, நீரிழிவு, நோய்த்தொற்றுகள், சருமப் பிரச்சினைகள், அல்சரேட்டிவ் கொலிட்டஸ், மூட்டு வலிகள் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்தக்கூடியது.

- 3

ஒரு நாளைக்கு ஒரு வேளை 30 மி.லி. முதல் 40 மி.லி. வரை எடுத்துக் கொள்வது போதும். இதைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடைக்காது.

அருகம் புல்லின் சுவை உங்களுக்கு உடனடியாக பிடிக்காமல் போகக்கூடும். எனவே, அதை மற்ற ஜூஸ்கள் அல்லது பானங்களில் கலந்து குடிக்கலாம். டீ அல்லது மற்ற ஜூஸ்கள் அந்தப் புல்லின் சுவையை மறைக்க உதவும்.

புதினா, சீலரி, சாத்துக்குடி ஜூஸ், கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், கல் உப்பு போன்றவற்றை கலந்து ஜூஸ் காக்டெயில் செய்து குடிக்கலாம்.

ஆலிவ் ஆயில் அல்லது ஃபிளாக்ஸ்சீடு ஆயில் போன்றவற்றை கலந்து அருகம்புல்லை கலந்து அருந்தினால், உடலில் ஊட்டச்சத்து ஏற்றுக்கொள்ளப்படும் அளவு அதிகரிக்கும்.

இப்படி குடித்தால் அடிக்கடி பசிக்கும் நிலையையும் குறைக்கும். ஜூஸாக குடிக்க முடியவில்லையா, பரவாயில்லை. துணை உணவாக, மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், திரவப் பொருள்களாகவும் நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

வைரஸை அழித்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அருகம்புல் ஜூஸ்! Source link

Related Post

- 5

தாங்க முடியாத வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் இதோ!

Posted by - நவம்பர் 27, 2020 0
தாங்க முடியாத வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் இதோ! சளி இருந்தாலே காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள்…
- 7

ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? இதோ எளிய இயற்கை மருத்துவம்

Posted by - நவம்பர் 8, 2020 0
ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? இதோ எளிய இயற்கை மருத்துவம் நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். தினசரி ஒரு…
- 9

நீண்ட காலம் நோயின்றி வாழ ஆசை வேண்டுமா? இதோ எளிய 10 பாட்டி வைத்திய முறைகள்

Posted by - நவம்பர் 8, 2020 0
நீண்ட காலம் நோயின்றி வாழ ஆசை வேண்டுமா? இதோ எளிய 10 பாட்டி வைத்திய முறைகள் நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை…
- 11

வெறும் வயிற்றில் எந்தெந்த ஜூஸ்களை குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

Posted by - அக்டோபர் 24, 2020 0
வெறும் வயிற்றில் எந்தெந்த ஜூஸ்களை குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.…
- 13

புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி!

Posted by - டிசம்பர் 1, 2020 0
புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி! “சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை” என்பது பழமொழி. உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி…

உங்கள் கருத்தை இடுக...