- 1

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

58 0

சிறுவர் நீதி கதைகள்

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

வெட்டுக்கிளியும் ஆந்தையும் The Owl and The Grasshopper 

 அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், “கொஞ்சம் பாடுவதை நிறுத்து” என்று கேட்டது.

வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, “நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்” என்று திட்டியது.

தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டுவந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து.

“நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர் களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சங்கீதம் இனிமையானது. அதை அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை.

ஆந்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது.

அருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

நீதி: பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது.

சிறுவர் நீதி கதைகள்

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

Related Post

- 3

நன்றி மறந்த சிங்கம்

Posted by - அக்டோபர் 29, 2020 0
சிறுவர் நீதி கதைகள் நன்றி மறந்த சிங்கம் நன்றி மறந்த சிங்கம் முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது…

ஏமாந்த வேதியன் 3-5

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஏமாந்த வேதியன் 5. ஏமாந்த வேதியன் ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு…

81. வரத நஞ்சையபிள்ளை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 81. வரத நஞ்சையபிள்ளை 50 ஆண்டுகட்கு முன்பு. தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா. த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.…

வாயடக்கம் இல்லாத ஆமை 1-11

Posted by - ஏப்ரல் 17, 2020 0
வாயடக்கம் இல்லாத ஆமை 11. வாயடக்கம் இல்லாத ஆமை இரண்டு அன்னங்களும் ஒர் ஆமையும் ஒரு குளத்தில் இருந்தன. அன்னங்களும் ஆமையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன.…

58. சீர்திருத்தம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள்   58. சீர்திருத்தம் இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி…

உங்கள் கருத்தை இடுக...