விறகொடிக்கும் பெண் – நாட்டுப்புற பாட்டு

105 0

வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1

காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2

காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3

காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4

கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5

கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6

கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7

விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8

மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9

கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10

கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11

கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12

கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13

எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14

காட்டுக்குள்ளே விறகொடித்து -ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15

கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16

நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA

விறகொடிக்கும் பெண்

Related Post

பூனை அண்ணா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் குடிக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் குழந்தை பாடல்கள் –…

பள்ளிக் கூடம் போகலாமே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக் கூடம்சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் திறந்தாச்சிசின்ன…

மரம் வளர்ப்போம்! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது! பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது! அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது! அம்மா வைத்த முருங்கையுமேஅளவில்லாமல் காய்க்கிறது!…

ஆராரோ அரிரரோ-1

Posted by - ஏப்ரல் 16, 2020 0
ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு…

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே சாய்ந்தாடுமாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுதாமரைப்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயிற் புறாவே சாய்ந்தாடுபச்சைக்கிளியே சாய்ந்தாடுபவழக்கொடியே சாயந்தாடுசோலைக்குயிலே சாய்ந்தாடுசுந்தரமயிலே…

உங்கள் கருத்தை இடுக...