வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்

டெஸ்க்டாப் பயனர்களுக்காக விண்டோஸ் மற்றும் மேக் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. உங்கள் ஸ்மார்ட்போனில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ளுவது போல் இப்போது நீங்கள் டெஸ்க்டாப்பிலும் செய்யலாம்.

QR குறியீட்டை

இதை சரியாக செய்ய, முதலில் நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனை உங்களின் கணினியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், வாட்ஸ்அப் டெஸ்க்டொப்பை ஓபன் செய்து, திரையில் காண்பிக்கப்படும் QR குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் ஸ்கேன் செய்து, உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!

QR குறியீட்டை ஸ்கேன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், பயனர்கள் டெஸ்க்டாப்பில் அவர்களின் வாட்ஸ்அப் தொடர்புகளை அணுக முடியும். வாய்ஸ் கால் அல்லது வீடியோ அழைப்பைச் செய்ய, தொடர்புகளின் பெயரின் வலது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஐகான்களைக் கிளிக் செய்யுங்கள். வீடியோ அல்லது குரல் அழைப்பைச் செய்ய அதற்கான சரியான அழைப்பு ஐகானைக் கிளிக் செய்து அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.

சிக்கல்

இந்த அம்சத்திற்கு வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் சமீபத்திய பதிப்பை நீங்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். மேலும், உங்கள் டெஸ்க்டாப்பின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனை அணுக வாட்ஸ்அப் அனுமதி கேட்கும். பயனர்களுக்கு நிலையான இணைய இணைப்பு இல்லையென்றால், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்பில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் சிக்கல்களை எதிர்கொள் வாய்ப்புள்ளது.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது? Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password