வாட்ஸ்அப் செயலியில் Font Style-ஐ மாற்றுவது எப்படி? இதோ டிப்ஸ்.!

வாட்ஸ்அப் செயலியில் Font Style-ஐ மாற்றுவது எப்படி? இதோ டிப்ஸ்.!

ஆனாலும் மற்ற ஆப் வசதிகளை விட அதிகமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. குறிப்பாக பணம் அனுப்பும் வசதி உட்பட முக்கியமான அம்சங்கள் இருப்பதால் இந்த செயலியை அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் டைப் செய்து மெசேஜ் அனுப்ப இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் க்ரூப்பிலும்

ஆனால் ஒவ்வொரு வாட்ஸ்அப் க்ரூப்பிலும் ஒவ்வொரு மாதிரியாக பேசும் (டைப் செய்யும்) நாம் ஏன் எல்லா க்ரூப்பிலும் ஒரே மாதிரியான Font Style-ஐயே பயன்படுத்த வேண்டும் ? அதிலும் சற்று வித்தியாசம் காட்டலாம். அதாவது டைப் செய்வதின் வழியாக ஒரு சில வித்தியாசத்தை காட்டிட முடியும்.

- 4ரூ. 10,000 பெற நல்ல சான்ஸ்.. அமேசான் LG Monitors குவிஸ் போட்டி: 5 கேள்வி..5 பதில் எல்லாம் ஒரே இடத்தில்..

ஃபான்ட் வடிவங்களை

இந்த கட்டுரையின் வழியாக வாட்ஸ்அப் செயலியில் எப்படி போல்ட், இடாலிக்ஸ், ஸ்ட்ரைக்த்ரோ மற்றும் மோனோஸ்பேஸ் போன்ற ஃபான்ட் வடிவங்களை கொண்டு வர முடியும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பலருக்கு போல்ட் ம

உங்களில் பலருக்கு போல்ட் மற்றும் இடாலிக்ஸ் மாயாஜாலத்தை நிகழ்த்துவது எப்படி என்று ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் ஸ்ட்ரைக்த்ரோ மற்றும் மோனோஸ்பேஸ்-ஐ எப்படி நிகழ்த்துவது என்பதை இந்த கட்டுரையின் வழியாக தெரிந்துகொள்ள முடியும்.

போல்ட்-ஆக மாற்ற இதை செய்யுங்கள்

போல்ட்-ஆக மாற்ற இதை செய்யுங்கள்

அதன்படி வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் நீங்கள் போல்ட் ஆக மாற்ற நினைத்தால், அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னரும் Asterisks-களை (*) டைப் செய்யுங்கள். இதன் மூலம் அந்த வார்த்தை போல்ட் ஆக மாறி இருக்கும்.

இடாலிக்ஸ் ஆக மாற்ற இதை செய்யுங்கள்

இடாலிக்ஸ் ஆக மாற்ற இதை செய்யுங்கள்

அதேபோல் வாட்ஸ்அப் சாட்டில் உள்ள ஒரு முழு வரியை இடாலிக்ஸ் ஆக மாற்ற விரும்பினால், அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னும் Underscores-களை (_) டைப் செய்ய வேண்டும் இதன் மூலம் அந்த வரி இடாலிக்ஸ் ஆக மாறி இருக்கும்.

ஸ்ட்ரைக்த்ரோ

ஸ்ட்ரைக்த்ரோ

மேலும் வாட்ஸ்அப் மெசேஜ் வழியாக அனுப்ப போகும் ஒரு பட்டியலில் குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகளை அழிக்க வேண்டும் ஆனால் டெலிட் செய்ய கூடாது என்கிற நிலைப்பாட்டில் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு பதிலாக வேறொரு வார்தையை மாற்றுங்கள் என்று யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற நிலையில், நீங்கள் ஸ்ட்ரைக்த்ரோவை பயன்படுத்தலாம்.

அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை ஸ்ட்ரைக் செய்ய விரும்பினால், அந்த வார்த்தைக்கு முன்பும் பின்னும் tildes-களை (~) டைப் செய்யுங்கள்.உடனே அந்த வார்த்தை கோடிட்டு அழிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனோஸ்பேஸ்

மோனோஸ்பேஸ்

உங்களது ஒட்டுமொத்த வாட்ஸ்அப் சட்டையுமே வேறுபட்டஃபான்ட்டிற்கு மாற்ற விரும்பினால் உங்ள் சாட்டின் முன்னும் பின்னும் மூன்று back-ticks-களை (`) டைப் செய்யுங்கள். இதன் மூலம் உங்களின் முழு சாட்டும் மோனோஸ்பேஸ் ஃபான்டில் மாறி இருக்கும்

வாட்ஸ்அப் செயலியில் Font Style-ஐ மாற்றுவது எப்படி? இதோ டிப்ஸ்.! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart