வந்துவிட்டது பட்ஜெட் விலையில் Redmi 9A ஸ்மார்ட்போன்!

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. 

ஷாவ்மி நிறுவனம் தரப்பில் ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஸ்மார்ட்போனாக ரெட்மி 9A இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஆக்டா கோர் பிராசசர், பெரிய பேட்டரி, எக்ஸ்பேண்டபிள் ஸ்டோரேஜ் வசதிகளுடன் மிகக்குறைந்த விலையில் ரெட்மி 9A அறிமுகமாகியுள்ளது. மொத்தம் 3 விதமான நிறங்களில் உள்ளன. 

ரெட்மி 9A விலை:

2ஜிபி ரேம் + 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போல், 3ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் 7,499 ரூபாய்க்கு வந்துள்ளது. மிட்நைட் பிளாக், நேச்சுர் கிரீன், ப்ளூ என மூன்று நிறங்களில் உள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் ரெட்மி 9A விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறவர்கள் mi.com, அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ரெட்மி 9A சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, MIUI 12
திரை அளவு: 6.53 இன்ச்
பிக்சல்: HD+ (720×1,600)
பிராசசர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ G25 SoC
ரேம்: 2ஜிபி, 3ஜிபி

கேமரா:
பின்பக்கத்தில் 13 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா உள்ளது
முன்பக்கத்தில் 5 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இதர சிறப்பம்சங்கள்:
32 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ், 512 ஜிபி வரையிலான எக்ஸ்பேண்டபிள் ஸ்டோரேஜ், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ELB தொழில்நுட்பம், மைக்ரோ USB போர்ட்,ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Read Full News @ Gadgets-360

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart