லிதியத்தினால் ஆன நீர்க் குழாய்களினால் ஏற்படும் மருத்துவ நன்மை பற்றி தெரியுமா?
உலோகங்களால் ஆன நீர் குழாய்களை உருவாக்குவதற்கு லிதியம் எனப்படும் மூலகமும் பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட நீர் குழாய்களில் இருந்து கிடைக்கும் நீரை அருந்துவதன் ஊடாக மருத்துவ நன்மை ஒன்று இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது Dementia எனப்படும் மனச் சோர்வு நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் நாடு முழுவதினையும் அடிப்படையாகக் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே ந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களில் 9.9 மில்லியன் வரையானவர்களுக்கு Dementia பாதிப்பே காரணமாக இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆவர்த்தன அட்டவணையில் மூன்றாவது இடத்தில் காணப்படும் லிதியம் உப்பு தன்மை வாய்ந்தது.
நீர் குழாய்களில் இவற்றினை பயன்படுத்துவதனால் அவை நீரில் கலக்கின்றது. இவ்வாறு கலந்த நீரை பருகுவதனால் புத்துணர்ச்சி உண்டாகின்றது.
இந்த ஆய்வில் டென்மார்க்கிலுள்ள Copenhagen பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…
லிதியத்தினால் ஆன நீர்க் குழாய்களினால் ஏற்படும் மருத்துவ நன்மை பற்றி தெரியுமா? Source link