மைக்ரோசாப்ட் சேவையில் இருந்த பிழை… கண்டறிந்த சென்னை இளைஞருக்கு 50,000 டாலர்கள்! சாதித்தது எப்படி?

27 வயதான லக்ஷ்மன் முத்தையா இதற்கு முன்னரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபலமான டெக் நிறுவனங்கள் பலவும் தங்கள் சேவைகளில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கும் வகையில் Bug bounty program என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் முத்தையா, இந்தத் திட்டத்தின் மூலம் மைக்ரோசார்ட் (Microsoft) நிறுவனத்தின் இணையதள சேவைகளில் இருந்த பிழையைச் சுட்டிக் காட்டியதற்காக 50,000 அமெரிக்க டாலர்களை ஊக்க ஊதியமாகப் பெற்றிருக்கிறார். சென்னையில் வசிக்கும் 27 வயதான லக்ஷ்மன் முத்தையா இதற்கு முன்னரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். என்ன மாதிரியான திட்டம் இது, எப்படி இது செயல்படுகிறது என்ற தகவல்களை அவரிடமே கேட்டோம்.

“Bug bounty program, எல்லா டெக் நிறுவனங்களும் செயல்படுத்துற ஒண்ணுதான். நான் கல்லூரியில் படிக்கும் போதே இது போன்ற திட்டங்கள் டெக் நிறுவனங்கள் கிட்ட இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன். அப்போ இருந்தே பல சேவைகளிலும் பிழைகளை கண்டுபிடிக்கிற முயற்சியில இருக்கேன். நான் கல்லூரி முடிச்சது 2014-ம் ஆண்டுலதான். ஆனால், என்னோட முதல் பவுண்டிய (ஊக்கத் தொகை) 2013-ஆம் ஆண்டுலேயே வாங்கிடேன். பேஸ்புக் தளத்துல இருந்த ஒரு பிழைய சுட்டிக் காட்டுனதுக்காக 4500 டாலர் ஊக்கத் தொகையா கிடைச்சுது. அப்போதுல இருந்தே இந்த வேலையை செஞ்சிட்டு வர்ரேன்” என்றவர் தற்போது சொந்தமாக சிறிய தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

“இல்லை. எனக்கு, இயல்பாவே தொழில்நுட்பத்துலயும், அதைப் பத்தி தெரிஞ்சிக்கிறதுலயும் ஆர்வம் இருந்துச்சு. அதனால சுயமாதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். என்னுடைய முக்கிய மூலமே இணையம்தான். என்னுடைய கேள்வி எல்லாத்துக்கும் இணையம்தான் பதிலா இருந்துச்சு. இணையத்துல தேடித் தேடித்தான் எல்லாத்தையும் சுயமா கத்துக்கிட்டேன். ஆர்வம் இருக்கும்போது எதுவுமே கஷ்டம் இல்லையே!”

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart