- 1

முழங்கால் மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் இதோ சில!

20 0

முழங்கால் மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் இதோ சில!

மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது; இப்போதோ இளம்வயது பிரச்னையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய இளைய வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள்.

மாறிவரும் உணவுமுறை மூட்டுவலிக்கு அடுத்த காரணம். இளைய தலைமுறையினர் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டுவலிக்கும்வழி அமைத்துவிடுகிறது.

எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வதே நல்லது.

அந்தவகையில் மூட்டுவலியை போக்கும் ஒரு சில இயற்கை வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
  • ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் மூட்டு வலி பிரச்சனைகள் குணமாகும்.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி (குணமாகும்.
  • வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  • ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) இந்த விதையை ஒரு கோபை நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை தேநீர் போல் அருந்திவர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலி குணமாகும்.
  • இரண்டு டேபிள் ஸ்பூன் அடுப்பில் நன்கு சூட வைத்து பின் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் அந்த எண்ணெயை கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். இவ்வாறு மூட்டு வலி குணமாகும் வரை குடிக்க வேண்டும். குறிப்பாக அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். புளிப்பான உணவுகளை சாப்பிடக் கூடாது.
  • மூட்டு வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

முழங்கால் மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் இதோ சில! Source link

Related Post

- 4

டெங்கு காய்ச்சலுக்கான மருந்து: நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை

Posted by - நவம்பர் 27, 2020 0
டெங்கு காய்ச்சலுக்கான மருந்து: நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை மழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும் கொசுக்களின் தொல்லைகள் தாங்க முடியாது. சளி, இருமல், டெங்கு காய்ச்சல்…
- 10

உப்பில் இவ்வளவு நன்மையா? ஆஸ்துமாவையும், சொரியாசிஸை குணப்படுத்தும் சால்ட் தெரபி?

Posted by - அக்டோபர் 31, 2020 0
உப்பில் இவ்வளவு நன்மையா? ஆஸ்துமாவையும், சொரியாசிஸை குணப்படுத்தும் சால்ட் தெரபி? பிங்க் சால்ட் என்று சொல்லக்கூடிய உப்பு வகை பற்றி அறிந்திருக்கிறோம். இதை உப்பு ராக் சால்ட்…
- 18

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க!

Posted by - நவம்பர் 15, 2020 0
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! சிட்ரஸ் பழ வகைகளை சேர்ந்த ஆரஞ்சு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளையே கொண்டிருக்கிறது.மேலும் இவை…
- 22

உங்களுக்கு பிபி இருக்கா? கட்டுப்படுத்த என்ன செய்யலாம்

Posted by - நவம்பர் 28, 2020 0
உங்களுக்கு பிபி இருக்கா? கட்டுப்படுத்த என்ன செய்யலாம் உங்களுக்கு பிபி இருக்கா? ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! டென்ஷன் ஆகக் கூடாது, நேரம் தவறாம மாத்திரை சாப்பிடணும் என்றெல்லாம்…

உங்கள் கருத்தை இடுக...