- 1

முயலும் ஆமையும்

179 0

சிறுவர் நீதி கதைகள்

முயலும் ஆமையும்

முயலும் ஆமையும் – The Hare and The Tortoise Story in Tamil

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.

ஒருநாள் காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது முயல் மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து போட்டிக்கு சம்மதம் தெரிவித்தது.

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் துவங்கியது.

முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

முக்கால்வாசி தூரம் வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்பு ஓடலாம் என நினைத்து ஒருமரத்தின் கீழ் உறங்கியது.

வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமை, முயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது.

ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

ஆமையை கண்டு முயல் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நிதானம் அலட்சியத்தை வெல்லும்.

சிறுவர் நீதி கதைகள்

முயலும் ஆமையும்

Related Post

31. இளந் துறவியும் முதிய துறவியும்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
31. இளந் துறவியும் முதிய துறவியும் 31. இளந் துறவியும் முதிய துறவியும் முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத்…

முறுக்கு சுட்டவள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 49. முருக்குச் சுட்டவள்! மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர். அப்போது, ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப்…

பழிவாங்கிய குரங்கு 5-10

Posted by - மே 21, 2020 0
பஞ்சதந்திரக் கதைகள் பழிவாங்கிய குரங்கு – பகுதி – 5 10. பழிவாங்கிய குரங்கு ஒர் ஊரில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஒரு…

சாட்சி சொன்ன மரம் 1-14

Posted by - ஏப்ரல் 17, 2020 0
சாட்சி சொன்ன மரம் 14 சாட்சி சொன்ன மரம் ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி.…

83. விலையேற்றம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 83. விலையேற்றம் சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்— ஆம்,ஆம்,…

உங்கள் கருத்தை இடுக...