முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு நிலையில் இதற்கு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி பட்ட மேற்படிப்புக்கு, 30 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 5 இடங்களும், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 13 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 12 இடங்களும் உள்ளன.
இக்காலியிடங்களில் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய https://www.skhmc.org/news_description.php?id=57 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Allow Notifications
You have already subscribed
முதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் Source link