முக அழகை கெடுக்கும் தழும்புகளை விரைவில் போக்க இதை ட்ரை பண்ணுங்க

முக அழகை கெடுக்கும் தழும்புகளை விரைவில் போக்க இதை ட்ரை பண்ணுங்க

தற்போதைய காலகட்டத்தில் அகத்தோற்றம் மட்டுமின்றி, புறத்தோற்றமும் முக்கியமான ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது.

ஒரு சிலருக்கு இந்த அம்மை தழும்புகள் பல ஆண்டுகளாக முகத்தை விட்டு நீங்காத வண்ணமாக இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி என்று தெரியாமல் பலர் அது இருந்தால் இருந்துட்டு போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். ஆனால் சில இயற்கை பொருட்களை கொண்டு இந்த அம்மை தழும்புகளை விரைவாக நீக்கலாம்.

உடம்பில் உஷ்ணம் ஏறி, அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு தென்படும். முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .

இதே போல் அம்மை நோய் மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.

எலுமிச்சை

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

பப்பாளி

பப்பாளி பொதுவாக செரிமானத்திற்கு உதவுகிறது. இது அம்மை தழும்புகளை போக்கவும் உதவுகிறது.

இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதன் மூலம் முகத்திற்கு ஜொலிப்பை கொடுத்து முகத்தை பிரகாசமாக்குகிறது.

ஃபிரஷ் ஆன பப்பாளியுடன் கரும்பு சக்கரை மற்றும் பாலை நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து மிதமான சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

ரோஸ் வாட்டர்:

முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதேபோல் தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் முகப்பரு தழும்புகள் மறைந்து விடும்.

முக அழகை கெடுக்கும் தழும்புகளை விரைவில் போக்க இதை ட்ரை பண்ணுங்க Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart