முகம் மிருதுவாக, பளபளப்பாக மாற வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க

முகம் மிருதுவாக, பளபளப்பாக மாற வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க

சருமத்தினை ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப வெவ்வேறு முறைகளில் பராமரிப்பது முக்கியமானதாகும். கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் கிரீம்களே சருமப் பொலிவினைத் தரும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.

பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது. நம் உடலின் தோலை இயற்கையான விதத்தில் பளபளப்பாக்க ஒரு வழி இருக்கிறது.

சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதரண சருமம், எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக கவனம் செலுத்தவேண்டும்.

பெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப்பூச்சுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

ஆயில் மசாஜ்

தினமும் குளிக்க போவதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்யலாம். தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை மசாஜ் செய்யலாம்.இயற்கையாகவே குளிர்ச்சி மிக்க உடம்பு உடையவர்கள் மெதுவாக சூடு படுத்தி ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம்.

தண்ணீர்

ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவதால் சருமம் நீர்ச்சத்தோடு, கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக இருக்கும்.

எண்ணெய்

குருதிநெல்லி, மாதுளை , ராசபெர்ரி விதை எண்ணெய்கள் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் சரும துளைகள் அடைக்க படாது. ஒமேகா, வைட்டமின் ஏ , ஈ போன்ற சத்துகள் இவற்றில் இருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டைக்கு அதிகளவு ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 தேக்கரண்டி பட்டை பொடி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்யவும்.

சுருக்கம் மறைய

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க, முட்டையின் மஞ்சள் கருவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் நாளாடைவில் சுருக்கம் மறைந்து போகும்.

சருமம் மிருதுவாக

முல்தானி மெட்டி பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிருதுவாகும்.

சருமம் பொலிவு

சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட் ஆப்பிள்,சிறிது ஆரஞ்சு சாறு,தேன் அல்லது சர்க்கரை கலந்து முகம் மற்றும் உடலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க சருமம் பொலிவு பெரும்.

முகம் மிருதுவாக, பளபளப்பாக மாற வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart