மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 கார்கள்… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க…

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 கார்கள்… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க…

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

கடந்த ஆண்டை போலவே நடப்பு 2021ம் ஆண்டிலும் இந்தியாவில் கணிசமான புதுமுக வாகனங்கள் களம் காண இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஐந்து புதிய கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். என்னென்ன நிறுவனம் எந்த கார் மாடலை புதிதாக களமிறக்க இருக்கின்றது என்பதைப் பார்க்கலாம், வாங்க.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

ஹூண்டாய் ஐ20 என் லைன்

ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் ‘என் லைன்’ எனும் பிரத்யேக தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. சற்று கூடுதல் எஞ்ஜின் திறன் மற்றும் அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்டவையாக இந்த ரக வாகனங்கள் இருக்கின்றன.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

இதுவரை இந்தியாவில் என் லைன் ரக வாகனங்களை ஹூண்டாய் களமிறக்கவில்லை என்பதே உண்மை. இந்த நிலையை மாற்றும் வகையில் முதல் முறையாக ஐ20 என் லைன் காரை சந்தையில் முதல் முறையாக நாட்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

இந்த ஆண்டிலேயே இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஸ்போர்ட்டி ஸ்டைல், அதிக கவர்ச்சி அலங்காரங்கள், அலாய் வீல், இரட்டை வெளியேற்றும் குழாய்கள், அதிக சொகுசான இருக்கை, பெஸ்போக் ஸ்டியரிங் வீல், மெட்டல் பேனல்கள் மற்றும் என் பிராண்டட் லெதர் கியர்கள் என பல்வேறு சிறப்பு கூறுகளுடன் ஐ20 என் லைன் இந்திய சந்தையை பதம் பார்க்க இருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

இதில் பிரீமியம் வசதிகள் அதிகம் என்பதால் ரூ. 12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரில் 1.0 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்ஜினே இடம்பெற இருக்கின்றது. இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றுமாம்.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

புதிய தலைமுறை மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டின் மத்தியில் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் புதுப்பிக்கப்பட்ட மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், இக்காரின் புதிய தலைமுறை வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார்களில் விட்டாரா ப்ரெஸ்ஸாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இது இந்தியாவில் கியா சொனெட், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

தற்போது இந்தியாவில் இக்கார் ரூ. 7.51 லட்சம் தொடங்கி ரூ. 11.41 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே புதிய தலைமுறை விட்டாரா ப்ரெஸ்ஸா விற்பனைக்கு வர இருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

டாடா எச்பிஎக்ஸ்

டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இக்காரை முதல் முறையாக நாட்டில் காட்சிப்படுத்தியது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதனை ஹார்ன்பில் எனும் பெயரில் நிறுவனம் விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

இது விற்பனைக்கு வந்த பின்னர் டாடாவின் மிகக் குறைந்த விலைக் கொண்ட காராக விற்பனையில் இருக்கும் என கூறப்படுகின்றது. ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இக்கார் ரகசியங்களை டாடா நிறுவனம் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகின்றது. விற்பனைக்கு அறிமுகத்திற்கு முன்னர் அனைத்து தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

சிட்ரோன் சிசி21

இந்தியாவில் மிக மிக சமீபத்திலேயே சிட்ரோன் நிறுவனம் தனது கால் தடத்தைப் பதித்தது. இந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் கார் மாடல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காராகும். இக்காரைத் தொடர்ந்து நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருக்கும் கார் மாடலே சிசி21. இது இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

சிட்ரோன் சிசி21 ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்திய சந்தையில் இந்த ரக காருக்கே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆகையால், இந்த சந்தையை தன் வசப்படுத்தும் வகையில் அதிக பிரீமியம் வசதிக் கொண்ட சிசி21 கார் மாடலை களமிறக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

டொயோட்டா பெல்டா

மாருதி நிறுவனத்தின் சியாஸ் காரையே ரீபேட்ஜ் செய்து பெல்டா எனும் டொயோட்டா விற்பனைச் செய்ய இருக்கின்றது. இந்நிறுவனம், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மாருதி நிறுவனத்தின் பலினோ காரை க்ளான்ஸா எனும் பெயரில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, விட்டாரா ப்ரெஸ்ஸா காரை அர்பன் க்ரூஸர் எனும் ரீபேட்ஜ் செய்தது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

இதற்கு அடுத்தபடியாக மாருதி நிறுவனத்தின் மூன்றாம் தயாரிப்பான சியாஸ் காரையும் டொயோட்டா ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனை சியாஸ் எனும் பெயரில் விற்பனையில் இருப்பைதக் காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்கள் மற்றும் லேசான அணிகலன் சேர்ப்புடன் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டிருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஐந்து கார்கள்... கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க...

ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், தற்போது சியாஸ் காரில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பெல்டாவிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்பவிலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 கார்கள்… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு புது காரை வாங்குங்க… Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password