மிகவும் மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா: கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சம்

மிகவும் மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா: கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சம்

கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் 21 அன்று நாடு பதிவான 1,224 என்ற இறப்பு எண்ணிக்கையை விட 101 எண்ணிக்கை அதிகமாகும்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான இறப்பு எண்ணிக்கை 1,325 எனவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 68,053 எனவும் தெரிய வந்துள்ளது.

வெளியான இந்த இறப்பு எண்ணிக்கையானது மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்டவைகளை உட்படுத்தியதாகும்.

மட்டுமின்றி, நாடு மூன்றாவது தேசிய ஊரடங்கில் இருக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கை உச்சம் கண்டுள்ளது.

வியாழக்கிழமை மட்டும் 1,162 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடந்த பல நாட்களாகவே பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 50,000 கடந்து வருகிறது.

லண்டன் நகரில் நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதை மேயல் சாதிக் கான் அதிர்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதே நிலை நீடித்தால் தலைநகரில் NHS ஸ்தம்பிக்கும் அபாயகரமான சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சாதிக் கான்.

லண்டனில் மட்டும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 1,000 என்ற விகிதத்தை தாண்டியுள்ளது.

இது ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் சுகாதாரத்துறையை மேலும் சிக்கலில் தள்ளுவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

மிகவும் மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா: கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சம் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart