மார்ச் மாத விற்பனை… நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்…

மார்ச் மாத விற்பனை… நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்…

ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து குறுகிய காலமே ஆகியிருந்தாலும், வாடிக்கையாளர்களை இந்த கார் ஈர்த்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனம் 3,839 கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை விட கடந்த மாதம் ரெனால்ட் கைகர்தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனம் 2,987 மேக்னைட் கார்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

அதாவது ரெனால்ட் கைகரை விட அதிக காலம் விற்பனையில் இருந்து வந்தாலும், நிஸான் மேக்னைட்டின் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் நிஸான் மேக்னைட் காருக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு 7 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருவதே இதற்கு உதாரணம்.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

இந்த காத்திருப்பு காலத்தை குறைக்கும் விதமாக நிஸான் நிறுவனம் மேக்னைட் காரின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. எனவே வரும் நாட்களில் காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும் சென்னையில் உள்ள ஒரே தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

அத்துடன் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும், CMF-A+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இரண்டு கார்களும் இன்ஜின் தேர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளன. எனினும் உட்புற மற்றும் வெளிப்புற டிசைனில் இரண்டு கார்களும் வேறுபடுகின்றன.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருவதுடன், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கும் விற்பனையில் சவால் அளித்து வருகின்றன.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

நாங்கள் ஏற்கனவே கூறியபடி ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும் இன்ஜின் தேர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. இதன்படி இந்த இரண்டு கார்களிலும், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மார்ச் மாத விற்பனை... நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்...

இந்த 2 கார்களின் வருகையால், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்துள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் விலை குறைவான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.மார்ச் மாத விற்பனை… நிஸான் மேக்னைட்டை வீழ்த்தியது ரெனால்ட் கைகர்… Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart