தேவையானவை :
மட்டன் – அரை கிலோ
கிளி மூக்கு மாங்காய் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
தனியா – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
தேங்காய் – அரை மூடி துருவியது
சீரகம் – அரை டீஸ்பூன்
லவங்கம் – 2
பட்டை – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1.மட்டனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறிய பின்னர் விழுதாக அரைக்கவும்.
2.ஒரு அகலமான கடாயில் எண்ணெய்யை ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.
3.மாங்காய் வெந்ததும் வேக வைத்த மட்டன் மற்றும் மசாலாக்களை சேர்த்து போதுமான அளவு உப்பு சேர்த்து மாங்காய், மட்டன் மசாலாவுடன் சேர்த்து நன்றாக வெந்த பின் இறக்கவும்.