மலட்டாறு

மலட்டாறு

மலட்டாறு (Malatar River) தமிழகத்தின் விழுப்புரம் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகிய இது அதனுடன் சேர்ந்து வங்கக்கடலில் கலக்கிறது, இது ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாகும். வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பால் இந்த ஆறு, நீர் வரத்தின்றி, பாலைவனமாக மாறிவருகிறது.

கமுதி குண்டாற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து சாயல்குடி, கடலாடி பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேர் பாசனத்துக்கு நீராதாரமாக விளங்குகிறது. மலட்டாறு அணைக்கட்டு செங்கப்படை அருகே கீழவலசையில் உள்ளது. இங்குள்ள, 8 மதகுகளின் வழியே அதிகப்பட்சமாக விநாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட முடியும். மலட்டாறு கால்வாய் 16.20 கி.மீ., நீளமும், 3.60 மீட்டர் அகலமும், ஆயிரத்து 348 ஹெக்டேர் பாசன பரப்பும், 17 கண்மாய்கள் நேரடி பாசனமும் கொண்டவையாக உள்ளது.

மலட்டாறு அணைக்கட்டு பராமரிப்புப் பணிக்காக அதிகாரிகள் தங்கி பணியாற்றும் வகையில் அங்கு அலுவலகம் அமைக்கப்பட்டது.  2010-க்கு பிறகு போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதனால், அதிகாரிகள் வருகை படிப்படியாக குறைந்தது. தற்போது 8 ஆண்டுகளாக இந்த அலுவலகம் பராமரிப்பின்றி பூட்டியேக் கிடக்கிறது. இதனால், அலுவலகக் கட்டடத்தை சுற்றி, சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password