- 1

மலச்சிக்கல், சீதபேதி, ரத்த பேதியால் அவஸ்தையா? அத்திமரப்பட்டையை இப்படி எடுத்துகோங்க

158 0

மலச்சிக்கல், சீதபேதி, ரத்த பேதியால் அவஸ்தையா? அத்திமரப்பட்டையை இப்படி எடுத்துகோங்க

தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதன் பட்டை, இலை, பூ, காய் என்பன பல்வேறு நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதில் அத்திமரத்தின் பட்டை மலச்சிக்கல்,சீதபேதி, ரத்த பேதி, சிறுநீர் கட்டுப்பாடு போன்ற நோய்களை கட்டுப்படுத்த கூடியதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இதன்பட்டையை எப்படி பயன்படுத்தினால் பலன்களை பெறலாம் என பார்ப்போம்.

  • அத்திப்பட்டையை 4 அல்லது 5 எடுத்து கொள்ளவும். புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம். இந்த அத்திப்பட்டை நீரில் கழுவிய பிறகு பயன்படுத்தினால் புண்கள் வேகமாக ஆறும்.
  • அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவல்லி பட்டை நான்கையும் சம அளவு எடுத்து பொடித்து வைக்கவும். வெந்நீரை கொதிக்க வைத்து இறக்கி 50மில்லி அளவு எடுத்து அதில் 5 கிராம் பொடி கலந்து வைத்து இளஞ்சூடாக ஆகும் வரை வைத்திருந்து பிறகு குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் குடிக்க கூடாது. தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இரண்டு நாளில் ஓரளவு சீதபேதி, ரத்த பேதி கட்டுக்குள் வரும். படிப்படியாக கட்டுப்படும்.
  • அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்களும் அத்திமரப்பட்டை பயன்படுத்தலாம். அத்திமரப்பட்டையை அதாவது அடிமரப்பட்டையை சிறிதளவு எடுத்து அதில் பசுமோர் விட்டு உரலில் இட்டு இடிக்கவும். மோரோடு அத்திமரப்பட்டை சேர்ந்து கலந்து அதன் சாறை எடுத்து குடிக்க வேண்டும்.
  • தினமும் மாலை நேரத்தில் 30 முதல் 50 மில்லி வரை குடித்து வந்தால் பெரும்பாடு குணமாகும். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
  • அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும்.
  • மாமரத்தின் உள்பட்டை, கோவைப்பிஞ்சு, சிறு செருப்படை இவற்றை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து இடிக்கவும். இதனுடன் வாழைப்பூவை சேர்த்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து பிழிந்து வாழைப்பூ சாறை இடித்த பட்டையில் விட்டு மை போல் விழுதாக அரைக்கவும். இதை சிறு சுண்டைக்காயளவு உருண்டையாக பிடித்து வெயில் படாமல் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். மலச்சிக்கல் தீவிரமாக இருக்கும் போது ரத்த மூலம் வரும் போது காலை, மாலை ஒரு உருண்டையை மாத்திரை போல் நீரில் சேர்த்து விழுங்கினால் ரத்தமூலம், ஆசனவாய்க்கடுப்பு, ரத்த பேதியும் நிற்கும்.

மலச்சிக்கல், சீதபேதி, ரத்த பேதியால் அவஸ்தையா? அத்திமரப்பட்டையை இப்படி எடுத்துகோங்க Source link

Related Post

- 3

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்!

Posted by - நவம்பர் 5, 2020 0
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்! பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி…
- 5

சிறுநீருடன் ரத்தம் வெளியேறுகிறதா? உஷார்

Posted by - நவம்பர் 9, 2020 0
சிறுநீருடன் ரத்தம் வெளியேறுகிறதா? உஷார் சிறுநீரகத்தில் இருந்து வெளிவரும் சிறுநீர் என்பது நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி. உடலுக்குள் எந்த நோய் ஏற்பட்டாலும்…
- 7

சக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதையை சாப்பிட்டா எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Posted by - அக்டோபர் 23, 2020 0
சக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதையை சாப்பிட்டா எவ்வளவு நன்மைகள் தெரியுமா? இன்று உலகளவில் அதிக நபர்களுக்கு இருக்கும் ஒரே நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான்.…
- 9

சிறுநீரக கற்களை கரைக்க வீட்டு வைத்தியம்!

Posted by - நவம்பர் 1, 2020 0
சிறுநீரக கற்களை கரைக்க வீட்டு வைத்தியம்! சிறுநீரகம் உடலில் இருக்கும் உப்புசத்தை வடிகட்டி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியே அனுப்பும்…
- 11

மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?

Posted by - ஏப்ரல் 19, 2020 0
  மூட்டு வலி இருப்பினும் இதுவரை வயதானவர்கள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவர்களின் பட்டியலில் விஞ்ஞான பரிசோதனையில்…

உங்கள் கருத்தை இடுக...